வெற்றி பெறுவதற்கான ரகசியம்

வெற்றியை ருசிக்க வேண்டுமா அதிகாலை எழுந்தாலே போதும்.

வெற்றி பெறுவதற்கான ரகசியம்

வெற்றி பெறுவதற்கான ரகசியம்

அதிகாலை எழுவதே வெற்றியின் ரகசியம். அதிகாலை என்பது சூரியன் உதிப்பதற்கு முந்தைய நேரம் 3 முதல் நாலரை மணி இந்த நேரத்தை பிரம்ம முகூர்த்தம் என்பார் சான்றோர்கள். இந்த நேரத்தில் ஓசோன் படலத்தை பூமிக்கு மிக அருகில் உணரமுடியும்.அதனால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்பது நம் முன்னோர்களின் கூற்று மற்றும் அல்ல இது ஒரு அறிவியல் பூர்வமான உண்மையுமாகும். இந்த நேரத்தில் எந்த ஒரு செயலை செய்தாலும் வெற்றி நிச்சயமாக நமக்கு கிடைக்கும்.

பல வெற்றியாளர்கள் வெற்றிக்கு காரணம் அவர்கள் அதிகாலையில் எழும் பழக்கம் உள்ளவர்கள். எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் தேவை தெளிவான அறிவு. அதிகாலையில் எழுபவர்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், நேர்மறை எண்ணங்களை கொண்டவர்களாக இருப்பதால் அவர்களுக்கு தெளிவான அறிவு கிடைப்பதுடன், அவர்களால் எந்த செயலையும் எளிதாகவும், வெற்றிகரமாகவும் முடிக்க முடிகிறது. 

அதிகாலை எழுவதால் ஏற்படும் நன்மைகள் :

 • அதிகாலை எழுவதால் இரவில் நிம்மதியான உறக்கம் வரும். இதனால் அவர்களுக்கு தெளிவான சிந்தனை கிடைக்கிறது.
 • வெற்றியின் முதல் படி காலம் தவறாமை. அதிகாலை எழுவதால் அவர்களுக்கு நிறைய நேரம் கிடைக்கிறது, அதனால் அவர்களால் எந்த வேலைக்கும் சரியான நேரத்தில் செல்லவும் முடிகிறது, எந்த வேலையையும் சரியான நேரத்தில் செய்யவும் முடிகிறது.
 • அதிகாலையில் எழும் போது நமக்கு சுத்தமான காற்று கிடைக்கும். சுத்தமான காற்று நம் உடலுக்கு சுறுசுறுப்பை தருகிறது.
 • நேர்மறை எண்ணங்களை தருகிறது.
 • மூளைக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது.
 • அதிகாலையில் சூரியன் உதிக்கும் போது வெளிப்படும் கதிர்கள் நம் உடலுக்கு நல்லது. சூரியன் உதிக்கும் போது சிறு நடை பயிற்சி செய்யலாம், முடியாதவர்கள் அந்த நேரத்தில் வீட்டின் வாசலிலோ, பால்கனியிலோ மாடியிலோ சிறிது நேரம் நின்றாலே போதும் அவர்கள் மீது படும் சூரிய ஒளி அவர்களுக்கு பல நன்மைகளை கொடுக்கும்.
 • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் அதற்கு உண்டு.
 • அதிகாலையில் எழுவதால் பதட்டமும், பரபரப்பும் இல்லாமல் நிதானமாக எந்த ஒரு செயலை செய்யும் போதும் நமக்கு மன அழுத்தம் இருக்காது. மனக்குழப்பம் இல்லாமல் செய்யும் வேலையில் வெற்றி நிச்சயம்.
 • மலச்சிக்கலைப் போக்கி மன சிக்கலை போக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. பெரும்பாலும் அதிகாலை எழுவோருக்கு மலச்சிக்கல் ஏற்படுவதில்லை.
 • அதிகாலையில் எழுவதால் கண்களுக்கு படிப்படியாக வெளிச்சம் கிடைக்கிறது. அதனால் கண் பார்வையை சீராக வைக்க உதவுகிறது. 
 • அதிகாலை எழுவதால் செரிமான சக்தி அதிகரிக்கும். ஏனென்றால் மூன்று வேளையும் தவறாமல் உணவை எடுத்துக் கொள்ள முடிகிறது. இதனால் நம் உடல் உறுப்புக்கள் சீராக வேலை செய்கிறது.
 • அதிகாலையில் எழுவோருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும். 

வெற்றியை ருசிக்க வேண்டுமா அதிகாலை எழுந்தாலே போதும். பல சாதனையாளர்களும், வெற்றியாளர்களும் இதற்கு சான்று. மன வலிமையும், உடல் வலிமையுமே வெற்றிக்கான காரணம் ஆகும். இவ்விரண்டையும் பெறுவதற்கு அதிகாலை எழுந்தாலே போதுமானது. அதிகாலை எழுந்தால் வெற்றி உங்கள் வசம், வெற்றியை ருசித்துவிட்டு பிறருக்கும் இந்த விஷயத்தை பகிருங்கள்.