எலுமிச்சை பிரியரா நீங்கள்??? அப்போ இது உங்களுக்கு தான்!!

சூடான உணவில் எலுமிச்சையை பிழிந்து சாப்பிடுவது தவறு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதை பற்றி மேலும் அறிய, இங்கே படியுங்கள்.

எலுமிச்சை பிரியரா நீங்கள்??? அப்போ இது உங்களுக்கு தான்!!

சூடான உணவில் எலுமிச்சையை பிழிந்து சாப்பிடுவது தவறு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதை பற்றி மேலும் அறிய, இங்கே படியுங்கள்.

எலுமிச்சை இல்லாத சமையலை நம்மால் கற்பனை செய்ய முடியுமா? ஜூஸ், சாலட் என ரெசிபி எதுவாக இருந்தாலும், எலுமிச்சை இல்லாமல் சமையல் இல்லை. ஆனால் சூடான உணவில் எலுமிச்சையை பிழிந்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கும் உணவிற்கும் தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆச்சர்யமாக இருக்கிறதா! அதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள இங்கே படியுங்கள்.

சில குறிப்பிட்ட ரெசிபிகளில், எலுமிச்சையை வெட்டி பிழிந்தால் தான் ருசியே கூடும். ஆனால் சூடான உணவு அல்லது பானங்களில் எலுமிச்சை சாற்றை தவிர்க்குமாறு சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். அதற்கான காரணத்தை இங்கே பார்க்கலாம்.

சூடான உணவில், வைட்டமின் சி அடங்கிய எலுமிச்சையை சேர்ப்பதால் அதன் ஊட்டச்சத்து அளவு குறைகிறது. ஏனெனில் எலுமிச்சையில் அஸ்கார்பிக் அமிலம் இருக்கிறது. வெப்பநிலை மற்றும் ஒளியால் எளிதில் பாதிக்ககூடிய இந்த அமிலம், எலுமிச்சையின் ஊட்டச்சத்துக்களை நீர்த்துப்போகச் செய்கிறது. அதிக சூட்டில் எலுமிச்சையை நாம் பயன்படுத்தினால், இந்த அமிலம் விரைவாக சிதைந்து, செயல்திறனைக் குறைக்கிறது.

எனவே அடுத்த முறை சூடான உணவுகளில் எலுமிச்சையை சேர்க்கும் போது, இதை கவனத்தில் வையுங்கள்.