இந்தியர்கள் பின்பற்றக் கூடிய 7 நாள் சைவ உணவு டயட்

நீங்கள் சாப்பிடக் கூடிய உணவில் கவனம்  இருத்தல் என்பது மிகவும் அவசியம்.

இந்தியர்கள் பின்பற்றக் கூடிய 7 நாள் சைவ உணவு டயட்

நீண்ட நேரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதால் மட்டுமே  எடை குறைப்பு சாத்தியமாகாது.  ஒரு சைவ உணவு டயட் உடலுக்கு பல ஆரோக்கிய  நன்மைகளைத் தருகிறது. விரைவான எடை குறைப்பை மேற்கொள்ள சைவ டயட் ஒரு சரியான முறையாகும். இதன் மூலம் நாம் குறைந்த கலோரி உணவுகளை உட்கொள்ள முடியும், இதனால் தேவையற்ற மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளைத் தவிர்க்க முடியும்.

டயட்டின் முதல் நாள் :1 
டயட்டின் முதல் நாளில், திராட்சை, வாழைப்பழம் , லிச்சி, மற்றும் மாம்பழத்தைத் தவிர்த்து மற்ற எந்த பழத்தையும் இன்று உட்கொள்ளலாம். எவ்வளவு பழங்களை வேண்டுமானாலும் உட்கொள்ளலாம். தர்பூசணி, சாத்துக்குடி , ஆரஞ்சு , ஆப்பிள் , மாதுளை, ஸ்ட்ரா பெர்ரி , கிர்ணி போன்ற பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு 20 முறை கூட சாப்பிடலாம். ஆனால் பழங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும்.

டயட்டின் இரண்டாம் நாள் : 2 
`டயட்டின் இரண்டாம் நாளில், காய்கறிகளைத் தவிர வேறு எதையும் சாப்பிடக்கூடாது. அந்த நாளின் தொடக்கத்தில் ஒரு வேக வைத்த உருளைக் கிழங்கு மற்றும் ஒரு ஸ்பூன் பட்டர் சாப்பிடவும். ஒரு உருளைக் கிழங்கிற்கு மேல் சாப்பிட வேண்டாம். மற்ற காய்கறிகளை உண்ணலாம். ஒரேகனோ ஒரு சிட்டிகை மற்றும் பேசில் அலங்கரிப்பு போன்றவற்றை சேர்ப்பதால் உங்கள் உணவில் ருசி அதிகரிக்கும். 

டயட்டின் மூன்றாம் நாள் : 3 
முதல் மற்றும் இரண்டாம் நாளில் ஒருங்கிணைப்பு தான் மூன்றாம் நாள். மேலே கூறிய பழங்கள் மற்றும் காய்கறிகளை நீங்கள் உண்ணலாம். எவ்வளவு தேவையோ அவ்வளவு பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணலாம். ஆனால் அதிக அளவு தண்ணீர் குடியுங்கள். மூன்றாம் நாளில் உருளைக் கிழங்கை மட்டும் தவிர்க்கவும். உங்களுக்கு தேவையான கார்போ ஹைட்ரேட் பழங்களில் இருந்து கிடைக்கும் .

டயட்டின் நான்காம் நாள் : 4 
எடை குறைப்பிற்கான நான்காம் நாள் டயட்டில் 6 வாழைப் பழங்கள் வரை சாப்பிடலாம். 4 கிளாஸ் பால் குடிக்கலாம். வாழைப்பழம் எடையை அதிகரிக்கும் என்று கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் இங்கே வாழைப்பழம் உடலுக்கு பொட்டசியம் மற்றும் சோடியம் போன்றவற்றைத் தரும் ஆதாரமாக மட்டுமே செயல்படுகின்றன. உப்பு உட்கொள்ளல் குறைக்கப்படுவதால் இந்த வேலையை வாழைப்பழம் பார்த்துக் கொள்ளும். மதிய உணவிற்கு மிகவும் நீர் பதத்தில் உள்ள சூப் பருகலாம். குடை மிளகாய், வெங்காயம், பூண்டு, தக்காளி போன்றவை இந்த் சூப்பில் சேர்க்கப்பட வேண்டும். இது ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான ஒரு உணவு. இது எடை குறைப்பிற்கு பெரிதும் உதவுகிறது. இந்த நாளில் ஒரே முறை இந்த சூப்பை பருகலாம்.

டயட்டின் ஐந்தாம் நாள் : 5 
இந்த நாள் உங்களுக்கு ஒரு திருவிழா நாள். ருசியான உணவை இன்று நீங்கள் உட்கொள்ளலாம். இன்று தக்காளி, முளை விட்ட தானியம், காட்டேஜ் சீஸ் என்று அழைக்கப்படும் பனீர் போன்றவற்றை நீங்கள் சுவைக்கலாம். மீல் மேக்கர் என்று அழைக்கபப்டும் சோயாவை உங்கள் உணவில் சேர்க்கலாம். மேலே கூறிய பொருட்களைக் கொண்டு ஒரு சுவையான சூப் செய்து பருகலாம். 5ம் நாளில் அதிகமான தண்ணீர் சத்தை உடலில் சேர்க்கவும். ஆகவே தண்ணீர் நிறைய பருகவும். 6 தக்காளி வரை சாப்பிட்டு உங்கள் தண்ணீர் சத்தை அதிகரிக்கலாம். ஒரு நாளுக்கான  1/4 பங்கு தண்ணீர் தேவையை இது பூர்த்தியாக்கும். இதனால் யூரிக் அமிலத்தில் இருந்து உங்கள்  உடல் முழுவதும் சுத்தம் அடைகிறது . நார்ச்சத்து மற்றும் செரிமான செயல்பாடுகளுக்கு தக்காளி உதவுகிறது. தண்ணீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.

டயட்டின் ஆறாம் நாள் : 6 
தக்காளியைத் தவிர முளை விட்ட தானியம், பனீர் , மற்றும் இதர காய்கறிகளை நீங்கள் இன்று உண்ணலாம். ஆறாவது நாளில், தக்காளியை மட்டும் தவிர்க்கவும். சுவையான சூப் மற்றும் தண்ணீர் அந்த நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைக்கும். காய்கறிகள் உடலுக்கு நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களை தரும்.

டயட்டின் ஏழாம் நாள் : 7 
இது ஒரு மிக முக்கியமான நாள். உங்கள் பாதங்கள் இறகு போல் லேசாக இருப்பதை நீங்கள் உணரலாம். மனதளவில் மற்றும் உடலளவில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பழச்சாறு, ஒரு கப் பழுப்பு அரிசி அல்லது அரை சப்பாத்தி மற்றும் இதர காய்கறிகளை அன்று சுவைக்கலாம். நாளின் இறுதியில் தண்ணீர் அதிகம் பருகி உங்கள் டயட்டை முடிவுக்கு கொண்டு வரலாம்.