இந்திய கலாச்சாரம்

இந்திய கலாச்சாரம்

இந்திய கலாச்சாரம்' என்பது அனைத்து கலாச்சாரங்களுக்கும் தாயாக விளங்குவது. வாழ்வியல், கலை மற்றும் இசை குறித்த பரந்து விரிந்த ஞானத்தைக் கொண்டது. உலகின் அனைத்துப் பகுதிகளும் மதங்களும் பல பழக்கவழக்கங்கள், மரபுகள் மற்றும் தனிப்பட்ட குணங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். காதல், மரியாதையை, கௌரவம், தன் புலன்களை அடக்கி ஆள்வது ஆகியவற்றை ஒருங்கே கொண்டது தான் இந்திய கலாச்சாரம். இதனால் ஒவ்வொருவரின் உள் மனதும் தூய்மையாகவும் நேர்மையாகவும் வெளிப்படுகிறது.

பெரியவர்களிடம் பக்தியுடன் மரியாதையுடன் பழகுவது என்ற பண்பு இந்திய கலாச்சாரத்தின் முக்கிய அம்சமாக விளங்குவது ஆகும். பெரியவர்கள் முன்பு உட்காராமல் நின்று கொண்டு இருப்பது, பெரியவர்களுக்கு உணவு வழங்கிய பின் மற்றவர்கள் உண்பது போன்ற பிரியமான சில நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் அவர்களிடம் உள்ள மரியாதையை வெளிபடுத்தி வருகின்றனர். பெரியவர்களின் பெயரை சொல்லியும் அழைப்பதில்லை. பெரியவர்களிடம் பணிவாக நடந்து கொள்வதன் மூலம், மரியாதை நிமித்தமாக பெரியவர்களின், புனிதமான ஆண்கள் மற்றும் பெண்களின் காலை தொட்டு வணங்குவதும் இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகும். ஒரு மாணவன் குருவின் காலைத் தொட்டு வணகுவதை நாம் கண்டிருக்கலாம். மனது, உடல், பேச்சு, சிந்தனை, வார்த்தை , செயல் என்று எல்லா விதங்களிலும் புனிதமாக இருப்பது என்பது முக்கிய தன்மையாக இந்திய கலாச்சாரத்தில் பார்க்கப்படுகிறது. பூஜ்யம் மற்றும் "ஓம்" என்ற ஒலியின் உட் கருத்து ஆகியவை இந்தியாவால் வழங்கப்பட்டது. 

கடுமையான, கோபமான மற்றும் மரியாதை அற்ற வார்த்தைகளை பயன்படுத்தாமல் உடலையும் மனதையும் ஆரோக்கியமாகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு பொருளையும் மற்றவர்களுக்கு இடது கையால் கொடுப்பது என்பது அவர்களை அவமதிப்பதாக கருதப்படுகிறது. தெய்வங்களுக்காக செலுத்தும் மலர்களை வாசனை நுகரக் கூடாது. ஒருவர் தெரியாமல் கூட மற்றவர்களின் கால்களை செருப்பு அணிந்த காலால் மிதித்தால் உடனடியாக மன்னிப்பு கேட்பது இந்திய கலாச்சாரத்தில் மிக முக்கியமான அம்சமாகும். மற்றவர்களை மோதினால் அல்லது இடித்தாலும் இதே போல் மன்னிப்பு கேட்பது முறையாகும். இப்படிப்பட்ட செய்கைகளால் இந்திய கலாச்சாரம் தனித்தன்மை பெற்று விளங்குகிறது.

இத்தனை நல்ல அம்சங்கள் பொருந்திய பண்புகளை இழந்து விடாமல் பாதுகாப்பது இன்றைய தலைமுறையின் முக்கிய பணியாகும். மனிதருக்கு மனிதர் காட்டும் மரியாதையை என்ற ஒற்றை சொல்லால் இந்திய கலாச்சாரம் உலகின் எல்லா மனிதர்களின் இதயத்திலும் நீங்கா இடம் பிடித்துள்ளது என்று சொன்னால் மறுப்பதற்கில்லை.