5 கட்ட பேஷியல் குறிப்புகள்

இன்று எல்லா பெண்களும் வெளியில் சென்று வேலை பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆகவே வெளியில் இருக்கும் தூசு , மாசு, புகை போன்றவற்றால் முகத்தில் அழுக்குகள் சேர்ந்து , முகம் சோர்வாக காணப்படுகிறது. 

5 கட்ட பேஷியல் குறிப்புகள்

முகத்தை அழகு படுத்துவதும் பராமரிப்பதும் வெவ்வேறு செயல்கள் ஆகும். முகத்தை ஆரோக்கியமாக பராமரிப்பது அவசியம். முகத்தை ஆரோக்கியமாக பராமரிப்பதுடன் சேர்த்து பொலிவும் கிடைக்கும் வழி , ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கிடைப்பது போன்றதாகும். அதற்கு ஒரு சிறந்த வழி பேஷியல் செய்வது தான். 

ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் முகத்திற்கு பேஷியல் செய்யும்போது ஆரோக்கியமான  சருமம் மற்றும் பொலிவான சருமம் கிடைக்கிறது. அழகு நிலையங்களுக்கு சென்றும் இதனை செய்து கொள்ளலாம். அல்லது நாமே இதற்கான மூல பொருட்களை வாங்கி வீட்டிலும் செய்து கொள்ளலாம். அழகு நிலையத்திற்கு செல்ல நேரமில்லை என்று கூறுபவர்களுக்காக எளிய முறையில் வீட்டிலேயே பேஷியல் செய்து கொல்லவதற்கான குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தொடர்ந்து பின்பற்றி ஆரோக்கியமான முழு அழகை பெறலாம். ஒரு முறை பயன்படுத்தும்போது அடுத்த 24 மணி நேரத்தில் நல்ல பலன் கிடைக்கும். முயற்சித்து பாருங்கள்.

முகத்தை தூய்மை படுத்துங்கள்:
பேஷியல் செய்ய தொடங்குவதற்கு முன் முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். தேங்காய் எண்ணெய் அல்லது தேன் சிறந்த க்ளென்சராக பயன்படுகிறது. மேக்கப் போட்டிருந்தால் மேக்கப்பை கலைத்து தேங்காய் எண்ணெய்யை முகத்தில் தடவி மென்மையாக தேய்த்துவிட்டு தண்ணீரால் முகத்தை கழுவவும். தேங்காய் எண்ணெய்க்கு பதில் தேனை சிறிதளவு எடுத்து முகத்தில் தடவி, சூழல் வடிவில் நன்றாக தேய்க்கவும். 10 நிமிடங்கள் ஊற விடவும். பின்பு ஒரு டிஷ்யூ பப்பேர் கொண்டு முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கவும். 

ஸ்க்ரப் செய்யுங்கள்:
பேஷியல்  செய்வதில் இரண்டாவது படி, ஸ்க்ரப் செய்வது. பலவிதமான ஸ்க்ரபர்கள் சந்தையில் கிடைக்கின்றன. உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஸ்க்ரப்பர்களை வாங்கி பயன்படுத்தலாம். அல்லது வீட்டிலும் தயாரித்து பயன்படுத்தலாம். ஸ்க்ரப் செய்வதால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறி அடைப்புகள் நீக்கப்படுகிறது.
முகத்தை ஸ்க்ரப் செய்யும்போது நீண்ட நேரம் செய்ய கூடாது. 8-10 நிமிடங்கள் செய்தால் போதுமானது. அதிக நேரம் ஸ்க்ரப் செய்யும்போது சருமம் சேதமடைய வாய்ப்புகள் உண்டு. மூக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், உதடுக்கு கீழ் பகுதி போன்ற இடத்தில் அதிக கவனம் எடுத்து ஸ்க்ரப் செய்வது நல்ல பலனை தரும்.  10 நிமிடம் கழித்து முகத்தை  கழுவவும்.

நீராவி:
பேஷியல்  செய்வதில் மூன்றாவது படி, நீராவி பிடிப்பது. ஸ்டீமிங் என்று சொல்லப்படும் நீராவி பிடிப்பதன் மூலம் முகம் தளர்த்தப்பட்டு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது. ஆகவே இதனை கண்டிப்பாக செய்யவும். ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும். ஒரு பெரிய துண்டால் உங்களை முழுவதும் போர்த்திக் கொண்டு , பிறகு அந்த பாத்திரத்தில்  உள்ள நீரில் உங்கள் முகத்தை  காண்பிக்கவும். அந்த நீரில் இருந்து வெளி வரும் ஆவி  நன்றாக முகத்தில் படும். இதனால் முகம் வியர்த்து விடும். 5 நிமிடம் கழித்து  துண்டை விலக்கி  முகத்தை நன்றாக துடைத்து கொள்ளவும்.

டோனிங்:
அடுத்த கட்டம் டோனிங் . ஒரு டுவீசேர் எடுத்து முகம் முழுவதும் அழுத்துங்கள். இதனால் கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகள் பிதுங்கி வெளியில் வரும். நீராவி பிடித்து விட்டு அடுத்த கட்டமாக இதனை செய்யும்போது தான் இதனை செய்வது எளிதாக இருக்கும். நீராவி முகத்திற்குள் ஊதுருவி, சரும துளைகளை திறந்து வைத்திருப்பதால் எளிதில் கரும்புள்ளிகளும் வெண்புள்ளிகளும் வெளியில் வந்துவிடும். பருக்களின் மேல் பாகத்தில் டுவீசேர் கொண்டு அழுத்தி, அதில் இருக்கும் பசையை வெளியேற்றலாம். முகம் முழுதும் இருக்கும்  வெண்புள்ளிகள் மற்றும் கரும்புள்ளிகளை வெளியேற்றியவுடன் ஒரு துண்டால் முகத்தை துடைத்து கொள்ளவும்.

பேஸ் மாஸ்க்:
டோனிங் முடிந்தவுடன் அடுத்தது பேஸ்  மாஸ்க் . இதுவே பேஷியலில் கடைசி நிலை. பல விதமான பேஸ்  பேக் கடையில் விற்கப்படுகிறது. உங்களுக்கு விருப்பமான பிராண்ட்  அல்லது சருமத்திற்கு ஏற்ற பழங்கள் சேர்க்கப்பட்ட பேஸ் மாஸ்க்கை வாங்கி  கொள்ளுங்கள். அல்லது பப்பாளி, ஆரஞ்சு, அவகேடோ போன்ற பழத்தை மசித்து விழுதாக்கி கொள்ளுங்கள். அடர்த்தியான கலவையாக இதனை எடுத்து, உங்கள் முகத்தில் தடவவும். 20 நிமிடங்கள் ரிலாக்ஸாக இருங்கள். இந்த மாஸ்க் நன்றாக காய வேண்டும். மாஸ்க் காய்ந்தவுடன் தண்ணீரால் முகத்தை நன்றாக கழுவவும். பிறகு சிறிது ரோஸ் வாட்டரை எடுத்து முகத்தில் தெளித்து கொள்ளுங்கள்.

இப்போது பேஷியல் முற்றிலும் முடிந்து விட்டது. மறுநாள் உங்கள் பொலிவை எல்லோரும் கவனிக்க தொடங்குவர்.