ஷில்பா ஷெட்டியின் எடை குறைப்பிற்கு உதவிய யோகா பயிற்சி 

இந்திய மக்களை மயக்க வைக்கும் அழகும் நகர்வும் கொண்ட ஒரு பேரழகியாக இந்தி உலகில் வளம் வருபவர் ஷில்பா ஷெட்டி. குறிப்பிட்ட ஸ்டைல் மற்றும் மனோபாவத்தின் மூலம் அவர் தனக்கென ஒரு இடத்தை மக்கள் மனதில் பதித்து வைத்துள்ளார்

ஷில்பா ஷெட்டியின் எடை குறைப்பிற்கு உதவிய யோகா பயிற்சி 

ஷில்பா ஷெட்டி ஒரு குழந்தைக்கு தாய் என்று சொன்னால் நம்புவது கடினம் தான். அந்த அளவிற்கு தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டிருக்கிறார்.


இதற்கான ரகசியத்தை அறிய வேண்டுமா? உடலை ஆரோக்கியமாகவும் பிட்டாகவும் வைத்துக் கொள்வதைத் தவிர வேறெதுவும் இல்லை. இதைத் தான் அந்த நடிகை கூறுகிறார். அழகாய் இருப்பதற்கான முக்கியமான விதி , உடலை ஆரோக்கியமாகவும் பிட்டாகவும் வைத்துக் கொள்வது தான். கீழே குறிபிட்டுள்ள எல்லா பயிற்சிகளையும் அவர் தவறாமல் மேற்கொள்கிறார்.

 
ஷில்பா ஷெட்டியின் அழகும் வடிவமும் :
ஷில்பா ஷெட்டியின் யோகா நிலைகளைப் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். அவர் ஒரு வாரத்தில் 5 முறை இந்த பயிற்சியை மேற்கொள்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதோடு மட்டும் இல்லாமல் அவரின் அழகு ரகசியமான யோகா பயிற்சியின் குறிப்பிட்ட நிலைகளைப் பற்றி நமக்கு குறிப்பிட்டிருக்கிறார். அதனை நாங்கள் உங்களுடன் இந்த பதிவில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஷில்பா ஷெட்டியின் யோகா நிலைகளைப் பற்றி அறிந்து அவரின் எடை குறைப்பு ரகசியத்தை நாமும் அறிந்து கொள்வோம்.

ஷில்பா ஷெட்டி பின்பற்றும் யோகா நிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலைகளை நீங்களும் முயற்சிக்கலாம்:-

 
பாதஹஸ்தாசனா :
தொப்பை இல்லாத சீரான வயிற்று பகுதியைப் பெற இந்த பயிற்சியை செய்யலாம். கைகளை தலைக்கு மேல் உயர்த்தி மூச்சை நன்றாக வெளியில் விடுங்கள். அதன் பின்பு, முன் பக்கம் உங்களால் முடிந்த அளவு குனியுங்கள். உடலை சிரமப்படுத்த வேண்டாம். இந்த நிலை, வயிறு தொப்பையை குறைக்க ஒரு சிறந்த தீர்வாகும். மேலும் இந்த நிலையை தொடர்ந்து செய்வதால் எடை குறைவும்  ஏற்படும்.

மகராசனா :
வயிறு தரையில் படும்படி கால்களை வெளிப்புறமாக நீட்டி குப்புற படுங்கள். இது மிகவும் எளிமையான ஒரு பயிற்சி என்பதால் பலரும் இந்த பயிற்சியை மேற்கொள்வார்கள். உங்கள் முதுகு பகுதி மற்றும் முதுகெலும்பு தளர்வதற்கு ஒரு சிறந்த பயிற்சியாகும். 

தனுராசனா :
உங்கள் உடலை வில் போல் வளைப்பது தான் இந்த பயிற்சி. இதனை ஆரம்பத்தில் செய்வது மிகவும் கடினமாக இருக்கும். பழக்கம் வந்துவிட்டால் மிகவும் எளிமையாக தோன்றும். முதுகு தசைகள் இந்த நிலையால் வலிமை அடையும். ஷில்பாவின் புதிய யோகா நிலைகளில் இதவும் ஒரு முக்கியமான நிலையாகும்.

அர்த்த சலபாசனா:
உடல் தசைகளின் வலிமைக்கு இந்த பயிற்சி மிகவும் முக்கியம். முதுகு தசைககுக்கு இந்த பயிற்சி நல்ல நன்மைகளைத் தரும். நரம்பு மண்டலத்தை ஊக்குவிக்க இந்த நிலை சிறந்ததாக செயல்படுகிறது.

புஜங்காசனா :
அடிவயிறு மற்றும் முதுகு பகுதி, இந்த யோகா நிலையால் நன்மை அடைகின்றன. மனித உடலில்,  ஸ்வஸ்திக் சக்கரத்தை ஊக்குவித்து, வளர்சித மாற்றத்தை சீராக்குகிறது. 

உத்தான பாதாசனம் :
தரையில் சமமாக படுக்கவும். பின் கால்களை மட்டும் 90 டிகிரி கோணத்தில் தரையில் இருந்து உயர்த்தவும். இதுவே உத்தான பாதாசனம். ஷில்பா ஷெட்டியின் தினசரி பயிற்சியில் இந்த ஆசனம் முக்கிய இடம் பிடிக்கிறது. இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க இந்த ஆசனம் உதவுகிறது.

வீரபத்ராசனம் :
கைகள், கீழ் முதுகு மற்றும் கால்களின் வலிமையை அதிகரிக்க இந்த நிலை பெரிதும் உதவும். தோள் பகுதியில் ஒரு நெகிழ்வை இந்த யோகா நிலை உண்டாக்கும்.

விருக்ஷாசனம் :
இந்த ஆசனம் உங்கள் உடலுக்கு தேவையான சமநிலை மற்றும் நிலைத்தன்மையை வழங்க உதவுகிறது. உங்கள் தோள் பகுதியும் மூட்டுகளும் தேவையான வலிமையைப் பெற இந்த ஆசனம் உதவுகிறது.

வ்யக்ராசனா :
இடுப்பை சுற்றியுள்ள நரம்புகள் வலிமையடைய இந்த ஆசனம் உதவுகிறது. செரிமானத்தை அதிகரிக்கவும், அடிவயிற்றுப் பகுதியை வலிமையாக்கவும் இந்த ஆசனம் சிறந்தது. மேலும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

நௌகாசனா :
இது ஒரு படகு நிலை ஆகும். இந்த பெயருக்கேற்றது போல், உங்கள் உடலை படகு போல் மாற்றுவது தான் இந்த் ஆசனம். உங்கள் கால் மற்றும் கை தசைகள் வலிமையாக இந்த நிலை உங்களுக்கு உதவும். மேலும், முதுகு தசைகளுக்கு ஒரு பயிற்சி கிடைக்கும். 

ஆக, மேலே கூறியவை அனைத்தும் ஷில்பா ஷெட்டி பயிற்சி பெரும் யோகா நிலைகள் ஆகும். நீங்களும் இந்த நிலைகளை நிச்சயம் முயற்சிக்கலாம். சிறிய பயிற்சி மூலம் இந்த நிலைகளை நீங்கள் நன்கு கற்றுக் கொள்ளலாம். இதன் பலனை நீங்கள் விரைவில் உணரலாம்.