ஹாப் செடியின் 10 அற்புத ஆரோக்கிய நன்மைகள்

ஹாப் மலர்கள், செரிமான மண்டலத்திற்கு ஆதரவு தருவது, அல்சர் பாதிப்பிற்கு சிகிச்சை அளிப்பது , தலைவலிக்கு சிகிச்சை அளிப்பது, சுவாசம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு தருவது, வாய் வழி சுகாதாரத்தைப் பராமரிப்பது, உளவியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, புற்று நோய்க்கு சிகிச்சை அளிப்பது, உச்சந்தலை ஆரோக்கியத்திற்கு ஆதரவு அளிப்பது, சருமத்தின் தன்மையை மேம்படுத்துவது, மற்றும் எடை குறைப்பிற்கு உதவுவது போன்ற பல நன்மைகளைத் தருகிறது.

ஹாப் செடியின் 10 அற்புத ஆரோக்கிய நன்மைகள்

 பல நூற்றாண்டுகளாக பீர் தயாரிப்பில் ஹாப் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு மருத்துவ நிலைகளுக்கு சிறந்த தீர்வைத் தரும் இந்த ஹாப் மலர்கள் மருத்துவ உலகில் மிகவும் பரிச்சயம் பெற்றதாகும். மருத்துவ தொழிற்சாலைகளில் இன்று இந்த செடி முக்கிய பங்காற்றுகிறது. ஹாப் செடி கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகள் தூக்கமின்மை, நீரிழிவு, கீல்வாதம் போன்ற பல நோய்களுக்கு சிறந்த ஒரு தீர்வைத் தருகிறது.


ஹாப் என்பது என்ன?
ஹாப் செடியில் இருந்து பூக்கும் கொத்து கொத்தான மலர்கள் ஹாப் மலர்கள் ஆகும். இதன் அறிவியல் பெயர் ஹுமுலஸ் லுபுலஸ் ஆகும். இந்த செடி ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்டது. இதன் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி அறிந்த பின்னர், உலகின் மற்ற நாடுகளிலும் பரவலாகப் பயிர் செய்யப்பட்டு வருகிறது. மிதமான வெப்ப நிலை உள்ள நாடுகளில் இந்த செடி பயிரிடப்படுகிறது.

இந்த செடியின் மலர்கள், ஊட்டச்சத்துகளின் வீடாகத் திகழ்கிறது. அதனால் பல்வேறு விதமான மருந்துகள் தயாரிப்பில் இந்த மலர்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காய வைத்த ஹாப் இலைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட தேநீர், சாறு மற்றும் டிஞ்சர் என்று பல விதங்களில் இந்த ஹாப் செடி தயாரிப்புகள் சந்தையில் விற்கப்பட்டு வருகிறது.


ஹாப்பின் ஊட்டச்சத்து மதிப்பு :

 . கார்யோபிளின் - 88 கிராம்
 . பார்நிசின்  - 54 கிராம்
 . ஹுமுலின் - 41 கிராம்
 . மிர்சின் - 12 கிராம்
 . வைட்டமின் சி - 91 கிராம்
 . வைட்டமின் ஈ - 77 கிராம்
 . வைட்டமின் பி 6  - 78 கிராம்
 . எக்சந்தோஹுமோல் - 33 கிராம்
 
ஹாப்பின் 10 அற்புத ஆரோக்கிய நன்மைகள் :

1. செரிமான மண்டலத்திற்கு உதவுகிறது :
அஜீரணம் ஏற்பட்டால் உடலில் ஒருவித அசௌகரியம் உணரப்படும். இதனால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் தடைபடும். ஹாப் மலர்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட மூலிகைத் தேநீர் பருகுவதால் சீரான செரிமானம் ஏற்படும். வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளுக்கு இந்த தேநீர் நல்ல தீர்வைத் தருகிறது. உங்கள் குடல் இயக்கத்தை சிறந்த முறையில் கட்டுப்படுத்துகிறது. மலத்தை இளக்கி நன்மை புரிகிறது.
வயிறு வீக்கத்தைக் குறைக்க இந்த தேநீர் உதவுவதாக அறியப்படுகிறது. ஆகவே அடுத்த முறை உங்கள் வயிற்றில் கோளாறு ஏற்பட்டால், புதிதாக தயாரிக்கப்பட்ட ஹாப் இலைத் தேநீரைப் பருகி உடனடி தீர்வைக் காணலாம். இந்த நிலையில் மயக்கம் அல்லது நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.
 
2. அல்சருக்கு சிகிச்சை அளிக்கிறது:
காய வைத்த ஹாப் மலர்கள் மற்றும் சில அத்தியாவசிய மூலிகைகள் போன்றவை அல்சர் பாதிப்பிற்கும் நெஞ்செரிச்சல் பாதிப்பிற்கும் நல்ல முறையில் சிகிச்சை அளிப்பதால் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த செடியில் காணப்படும் கூறுகள் அல்சரை உண்டாக்கும் கிருமிகளை அழிக்க உதவுகிறது. இந்த மூலிகை பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் ஏற்படக்கூடிய சாத்தியம் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், மருத்துவர் பரிந்துரை இல்லாமல் இதனைப் பயன்படுத்துவதை விட , மருத்துவரிடம் இது பற்றி கேட்டு அறிந்த பின் இதனைப் பயன்படுத்தலாம்.
 
3. தலைவலிக்கு சிறந்த தீர்வைத் தருகிறது:
பதற்றமாக இருக்கும்  நரம்புகளுக்கு நிவாரணம் அளித்து, தலைவலியைப் போக்க ஹாப் மலர்கள் உதவுகின்றன. உங்கள் உளவியல் ஆரோக்கியத்தில் ஒரு மயக்க விளைவை இந்த மலர்கள் உண்டாக்குவதால், தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி போன்ற பாதிப்புகள் எளிதாக குறைகிறது. மேலும் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. தொடர்ச்சியாக இந்த மலர்களை உட்கொண்டு வருவதால், தோள்பட்டை மற்றும் கழுத்து தசைகள் இறுக்கம் விலகி, டிமென்ஷியா , சித்த பிரமை போன்ற பாதிப்புகள் தடுக்கப்படுகிறது. இரவு உறங்கச் செல்வதற்கு முன் ஹாப் தேநீர் ஒரு கப் பருகுவதால், வலிகள் மறைந்து, ஒரு குழந்தை போல் விரைந்து தூங்கி விடலாம்.

4. சுவாசம் தொடர்பான் பிரச்சனைகளைப் போக்குகிறது:
சுவாச கோளாறுகளில் எரிச்சல் மற்றும் அழற்சி போன்றவை பொதுவான கோளாறுகள் என்று  மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஹாப் பயன்படுத்துவதால் சுவாச பாதையில் அழற்சி மறைந்து, எரிச்சல் குறைவதாக மூலிகை மருத்துவர்கள் கூறுகின்றனர். ஹாப் மலர்களில் தொடர்ச்சியான இருமல் மற்றும் அடைப்பைக் கட்டுப்படுத்தும் பண்புகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சுவாசப் பாதையில் தொற்று பாதிப்பைக் கட்டுக்குள் வைக்க அடிக்கடி ஹாப் தேநீரை சுவைக்கலாம். சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை கண்டறிய மருத்துவ ஆலோசனைப் பெறுவதும் ஒரு விதத்தில் நன்மை தரும்.

5. வாய் வழி சுகாதாரத்தை பராமரிக்க உதவுகிறது:
ஹாப் மலர்களில் அழற்சி எதிர்ப்பு தன்மை காரணமாக ஒட்டுமொத்த வாய் வழி சுகாதாரத்தை பாதுகாப்பான முறையில் பராமரிக்க உதவுகிறது. இந்த செடி, பல் வலியை போக்குவது மட்டுமல்ல, வாய் தொடர்பான வியாதிகள் மற்றும் இதன் அறிகுறிகளையும்  போக்க உதவுகிறது. பல் மருத்துவரைக் காண்பதை வழக்கமாகக்  கொண்டவர்கள், இந்த செடியை தொடர்ச்சியாக பயன்படுத்தி வருவதால் வாய் தொடர்பான தொந்தரவுகள் குறையும் .

6. உளவியல் ஆரோக்கியம் அதிகரிக்கிறது:
எக்சந்தோஹுமோல் என்னும் கூறின் ஆதாரமாக விளங்குவது ஹாப். ஆக்சிஜெனேற்ற சேதம் மற்றும் அழற்சி உங்கள் மூளையில் உள்ள அணுக்களை பாதிக்காமல் பாதுகாக்க ஹாப் பயன்படுகிறது.  ஆக்சிஜெனேற்ற அழுத்தம், உடலின் முக்கிய உறுப்புகளை சேதப்படுத்தி அதன் செயல்பாடுகளை முடக்குகிறது . இத்தகைய பாதிப்பு, அல்சைமர் போன்ற நாட்பட்ட நோய்களுக்கு பாதை வகுக்கிறது. உளவியல் ஆரோக்கியத்தை நிர்வகிக்கவும் ஹாப் உதவுகிறது. ஆக்சிஜெனேற்ற அழுத்தம் உடலை பாதிக்காமல் தடுக்கவும், அதே நேரத்தில் அறிவாற்றலை மேம்படுத்தவும் ஹாப் உதவுகிறது.

7. புற்று நோய்க்கான சிகிச்சை:
புற்று நோயைத் தடுக்க, ப்ரீ ரேடிகல் மற்றும் புற்று நோய் அணுக்களுடன் எதிர்த்து போராட அன்டி ஆக்சிடென்ட் மிகவும் முக்கியமானது. ஹாப், அன்டி ஆக்சிடென்ட்டின் ஆதாரமாக விளங்குவதால், கருப்பை புற்று நோய், குடல் புற்று நோய் போன்ற பல்வேறு புற்று நோய்க்கும் சிறந்த  முறையில் சிகிச்சை அளிக்க உதவுகிறது. இருப்பினும், புற்று நோயாளிகளின் தினசரி உணவில் எளிய முறையில் இதனை இணைக்கத் தொடர்பான பல்வேறு ஆய்வுகள் நடந்தவண்ணம் உள்ளன.

8. உச்சந்தலை ஆரோக்கியம்:
அன்டி அக்சிடென்ட் அதிகம் உள்ள உணவை உட்கொள்வது உடலுக்கு மிகவும் அவசியம். இவை எண்ணிலடங்கா பல்வேறு உடல் உபாதைகளுக்கான சிகிச்சைக்கு குறிப்பாக உச்சந்தலை தொற்று பாதிப்பிற்கு நல்ல தீர்வைத் தருகிறது. ஹாப் இந்த பிரிவில் சிறந்த விளங்கும் மூலிகை என்பதால் உச்சந்தலைக்கு சிறந்த ஆரோக்கியத்தைத் தருகிறது. உங்கள் கூந்தலின் வேர்க்கால்களை வலிமையாக்கி , முடி உதிர்தலுக்கான  அறிகுறிகளைப் போக்குகிறது. குறைந்த காலகட்டத்தில் முடி வளர்ச்சியை அதிகரிக்கும் சில வைட்டமின்கள் ஹாப்பில் உள்ளது குறிப்பிடப்படவேண்டிய செய்தியாகும்.

பீர் ஷாம்பூ மூலம் தலை அலசுவதைப் பற்றி பல தோல் சிகிச்சை நிபுணர்களும் ஸ்டைலிஸ்டும் பரிந்துரைப்பதைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கலாம். மேலும் கூடுதலாக, பழங்கால மக்கள் இந்த முறையை தங்கள் வீட்டில் பின்பற்றிய தகவலும் உள்ளது. இருப்பினும், தொற்று பாதிப்பு ஏற்பட்ட உச்சந்தலையில் தொடர்ந்து எரிச்சல் இருந்தால் தோல் சிகிச்சை நிபுணரிடம் சென்று சரியான தீர்வுகளுக்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

9. இளமையான சருமத்திற்கு :
உங்கள் சருமத்தை இயற்கையாகவே இளமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்னும் கனவு மெய்படும் நாள் வெகு விரைவில் உள்ளது. மூலிகை மருந்துகளின் ஒரு பகுதியாக மட்டும் இல்லாமல், ஹாப் சரும நிலையை மேம்படுத்தும் பல்வேறு எளிய வெட்டு வைத்தியங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஹாப்பில் உள்ள குறிப்பிட்ட அளவு அன்டி ஆக்சிடென்ட் , சருமத்தில் சேதம் உண்டாக்கும் அணுக்களை எதிர்த்து போராட உதவுகிறது. இந்த சரும சேதம் காரணமாக இளம் வயதிலேயே சருமத்தில் சுருக்கம் ஏற்பட்டு சதை தொங்கும் நிலை உண்டாகிறது. உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு போதுமான அளவு அன்டி ஆக்சிடென்ட் கிடைக்கும்போது இந்த பாதிப்புகள் சிறந்த முறையில் களையப்படுகின்றன. இந்த செய்லபாடுகள் மூலம் உங்கள் சருமம் தெளிவாக, பொலிவாக பளபளப்பாக மாறுகிறது.

10. உடல் எடை குறைப்பில் உதவுகிறது :
உங்கள் உடல் எடையை சீராக நிர்வகிக்க காய்ந்த ஹாப் மலர்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட தேநீர் பருகுவதை வழக்கமாகக் கொள்ளலாம். இந்த மூலிகையில் காணப்படும் ரசாயனம் உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து, அதிக உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. ஆகவே உடல் பருமன் உள்ளவர்கள், மூலிகை தேநீர் பருகுவதை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இது உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது. எடை குறைப்பிற்கான முயற்சியில் நீங்கள் ஈடுபடும்போது குறைந்த உணவுத் தேர்வு மட்டுமே உண்டு. ஹாப் தேநீர் பருகுவதால், மிக அதிக ஊட்டச்சத்துகள் கிடைக்கும் , அதே சமயம் குறைவான கலோரிகள் மற்றும் கொழுப்பு சத்து மட்டுமே இந்த தேநீரில் உள்ளது.

முடிவுரை:
இயற்கை ஆதாரங்களில் உடலுக்கு எதிர்வினை உண்டாக்கும் ரசாயனங்களும் பதப்படுத்தும் பொருட்களும் இருப்பதில்லை என்பது உறுதி. இதன் காரணமாக மட்டுமே பலரும் மூலிகைப் பொருட்களை பயன்படுத்த நினைக்கின்றனர். எந்த ஒரு நாட்பட்ட நோய்களும் உங்களை நெருங்காமல் தடுக்க, ஹாப்பை எந்த ஒரு வடிவத்திலும் உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இருப்பினும் எந்த ஒரு இயற்கைப் பொருட்களையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதாலும் உடல் ஆரோக்கியத்தில் மாறுபாடு ஏற்படலாம். கூடுதலாக, உங்கள் மருத்துவரிடம் சென்று உங்கள் உடல் நிலை குறித்து பரிசோதனை செய்து மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம். சுயமாக எந்த ஒரு மருந்தையும் எடுக்க வேண்டாம்.