தழும்புகளை போக்கும் நவீன சிகிச்சை முறைகள்

உடலின் ஒரு பகுதியில் காயம் ஏற்படும்போது, சில நாட்களில் அந்த காயம் ஆறி , தழும்பு மட்டும் நீடித்து விடுகிறது, அத்தகைய தழும்புகள், முகம், அல்லது வெளியில் தெரியும் பகுதியில் அமைந்துவிட்டால் அது நமது அழகை குறைத்து காட்டும். இங்கே சில நவீன வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தி தழும்புகளை மறைக்கலாம் .

தழும்புகளை  போக்கும் நவீன சிகிச்சை முறைகள்

டெர்மாப்ராஷன் (Dermabrasion)
இது தழும்புகளை நீக்குவதில் ஒரு பிரசித்தி பெற்ற முறை. இந்த சிகிச்சையை தோல் நோய் மருத்துவர் தான் செய்ய முடியும். முகத்தின் மேல் பரப்பை ஒரு ப்ரஷ் அல்லது வீல் கொண்டு தோல் உரித்து  இறந்த செல்களை  வெளியேற்றி சருமத்தை  புதிப்பிப்பர். 

இந்த முறையில் சில சிக்கல்கள் உண்டு. அவை,
   * தொற்று 
   * சருமம் கருமை நிறமாக மாறுவது 
   * சருமம் சிவந்து வீக்கமடைவது 
   * சீரற்ற சரும மேற்பரப்பு உண்டாவது 

நன்மைகள்:
   * பலர், சிகிச்சைக்கு பிறகு தழும்புகள் மறைந்து காணப்படுகின்றனர்.

தீமைகள்:
   * மிகவும் அசௌகரியமானது.
   * சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு ஏற்புடையது அல்ல.
   * தன்னுணர்வு அற்ற நோயாளிகளுக்கு ஏற்றதல்ல.

கெமிக்கல் பீல்(Chemical  Peels ):
இந்த முறையில், மென்மையான அமிலம், சருமத்தின் மேல் பரப்பில் தடவப்படும். இதனால் மேல் பகுதி உரிந்து, புதிய மேல் பரப்பு உருவாகும். 

கெமிக்கல் பீல் 3 வகைப்படும் .
   * டீப்  பீல் - இதில் பீனால் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறை பொதுவாக பலராலும் பயன்படுத்தப்படுவதாகும். இது சருமத்திற்குள்  ஆழ்ந்து ஊடுருவும்.
   * சூப்பர் பிசியல் பீல் - இதன் தாக்கம் மிதமாக இருக்கும். தழும்புகளால் உண்டாகக்கூடிய நிறமாற்றத்தை  குறைக்கும்.
   * மீடியம் பீல் - நிறமாற்றத்திற்கு பயன்படும். இதில் இருக்கும் க்ளைகோலிக் அமிலம், வயது முதிர்வை தடுக்கும் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.
சரும சிகிச்சையில் புகழ் பெற்ற ஒரு சிகிச்சை இந்த கெமிக்கல் பீல்.  தகுந்த தோல் நோய் மருத்துவரிடம் தான் இந்த சிகிச்சையை பெற வேண்டும்.

நன்மைகள்:
   * பரவலாக எங்கும் சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றன 
   * தழும்புகளை தவிர, வயது முதிர்வால் ஏற்படும் கோடுகள் சுருக்கங்கள் போன்றவற்றிற்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
   * மென்மையான, இளமையான தோற்றம் கிடைக்கிறது.

தீமைகள்:
   * கெமிக்கல் பீல் செய்வதன் மூலம், சருமத்தில்  சூரிய ஒளி படுவதால், எரிச்சல், கோடுகள் போன்றவை தோன்றுகின்றன. 
   * சென்சிடிவ் சருமத்திற்கு எரிச்சலை கொடுக்கிறது. குறிப்பாக எக்சீமா போன்ற பாதிப்பு உள்ள சருமம்  விரைவில் எரிச்சல் அடைகிறது.
   * சோரியாசிஸ் போன்ற நோய் பாதிப்பு உள்ளவர்களின் அறிகுறிகள் மேலும் தீவிரமடைகின்றன.
   * கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை.
   * அடர்ந்த நிறம் உள்ளவர்களுக்கு நல்ல தீர்வை வழங்குவதில்லை.

லேசர் சிகிச்சை:
லேசர் சிகிச்சையிலும் சருமத்தின் மேல் பரப்பு நீக்கப்படுகிறது. ஆசிட் அல்லது வேறு உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் அதிக திறனுள்ள லேசர் கதிர்கள் செலுத்தப்பட்டு சருமத்தின் மேற்பரப்பை  அகற்றுகின்றனர்.
லேசர் சிகிச்சை 2 வகைப்படும். 1. எர்பியம் 2. கார்பன் டை ஆக்சைட் . எர்பியம் என்பது பாதுகாப்பான முறையாகும். கார்பன் டை ஆக்சைட்  முறையில் தழும்புகள் விரைவில் குணமாகின்றன. சிகிச்சை முடிந்து காயம் முற்றிலும் குணமாகும் வரை  சிகிச்சை மேற்கொள்ள பட்ட இடத்தை பேன்டேஜ் கொண்டு மூடி வைக்க வேண்டும்..  

நன்மைகள்  :
   * மற்ற சிகிச்சைகளை விட எளிதில் குணமாகும்.(3 - 10 நாட்கள்)

தீமைகள்  :
   * அடர்த்தியான நிறம் உள்ளவர்களுக்கு பொருந்தாது.
   * பருக்கள் உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல.
   * தொற்று  ஏற்படலாம்.
   * தோலின் நிறம் பாதிப்படையலாம்.
இன்னும் பல வகையான சிகிச்சை முறைகள் தழும்புகளை மறைக்க உதவுகின்றன. ஒவ்வொருவரின் பட்ஜெட் , ரிஸ்க் மற்றும் தழும்பின் தன்மையை பொறுத்து சிகிச்சையின் தரம் மாறுபடும். தோல் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து சிறந்த தீர்வை பயன்படுத்தலாம். எந்த ஒரு சிகிச்சையும் நிரந்தரமாக தழும்புகளை போக்க முடியாது. அதன் தோற்றத்தை மறைக்க  அல்லது குறைக்க முடியும்.