ஷவர்ஹெர்ட்டை சுத்தம் செய்வது எப்படி?

ஷவரில் இருந்து வெளிவரும் நீர், நாலாபுறமும் தெறித்து சிதறுகிறதா ? அல்லது சரியான விசையில் வராமல் நீர் விட்டு விட்டு வெளி வருகிறதா ? ஆம் என்றால், உங்கள் ஷவரில் இருக்கும் துளைகளில் மினரல்கள் அடைத்து கொண்டிருக்கும்.

ஷவர்ஹெர்ட்டை சுத்தம் செய்வது எப்படி?

ஷவரின் தலையை எப்படி சுத்தம் செய்வது :
ஸ்கரப்பர் ஸ்பான்ச் மூலம் உங்களால் முடிந்த அளவிற்கு ஷவர்ஹெட்டில் படிந்திருக்கும் அழுக்கை அகற்றவும். 
இன்னும் நீர் சரியாக விழவில்லையா ? தண்ணீர் மற்றும் வினிகரை சரி பாதி அளவிற்கு ஒரு கப் எடுத்துக் கொள்ளவும்.
இதனை ஒரு பிளாஸ்டிக் பையில் ஊற்றிக் கொள்ளவும். ஷவர்ஹெட் இந்த  பையில் உள்ள நீரில் மூழ்கும் படி வைத்து பையை ஷவரோடு சேர்த்து கட்டவும். 
20 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை ஷவர் ஹெட் இந்த நீரில் ஊறட்டும்.
நன்கு ஊறிய பின், அந்த பையை பிரித்து மீதம் உள்ள அழுக்கை அகற்றவும். இப்போது ஷவரை திறந்து நீரை வேகமாக சிதற செய்யவும். இப்போது எல்லாம் முடிந்தது. ஷவரில் உள்ள மொத்த அழுக்கும் வெளியேறிவிடும்.


ஷவரை எப்படி பராமரிப்பது :
இப்போது உங்கள் ஷவர் சீரான பயன்பாட்டிற்கு தயார். நீங்களும் சந்தோசமாக குளிக்கலாம். ஷவரில் உள்ள மற்ற பாகங்களை சுத்தம் செய்வது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம். 

பூஞ்சை காளான் படர்ந்த இடங்கள் :
உங்கள் குளியலறையின் கதவு மற்றும் வெண்டிலேடரை திறந்து வைத்து கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த நறுமணத்துடன் இருக்கும் டப் அண்ட் டைல் ஸ்ப்ரே கிளீனரை எடுத்துக் கொள்ளவும். சிஎல்ஆர் பிரெஷ் சென்ட் பாத் மற்றும் கிச்சன் கிளீனர் அமேசானில் $15க்கு விற்பனையாகிறது. ஷவரை 3 பகுதியாக சுத்தம் செய்ய தொடங்குங்கள். இதனால், புகை வெளிவராது, மற்றும் சுத்தம் செய்வதற்குள் கிளீனர் காய்ந்து விடாமல் இருக்கும் என்று கூறுகிறார் போர்ட். முதல் பகுதியில் கிளீனரை ஸ்ப்ரே செய்து சில நிமிடங்கள் ஊற விடவும். பிறகு அதனை சுத்தம் செய்ய தொடங்குவதற்கு முன் அடுத்த பகுதியில் கிளீனரை ஸ்ப்ரே செய்யவும். முதல் பகுதியை சுத்தம் செய்யும் நேரத்தில் அடுத்த பகுதி ஊறி விடும். 

ஈரமான ஸ்கரப்பர் ஸ்பான்ச் கொண்டு முதல் பகுதியை நன்றாக துடைக்கவும். ஒரே நேரத்தில் நீளமான பகுதியை துடைப்பதால் குறைந்த நேரத்தில் அதிக இடத்தை துடைக்க முடியும். பிறகு ஸ்பாஞ்சை நீரில் முக்கி எடுக்கவும். ஒரு கப் தண்ணீரால் துடைத்த இடத்தை கழுவிக் கொள்ளவும். முதல் பகுதியை சுத்தம் செய்தவுடன், மூன்றாம் பகுதியில் கிளீனரை ஸ்ப்ரே செய்யவும். அந்த பகுதி ஊறுவதற்குள் இரண்டாம் பகுதியை சுத்தம் செய்யலாம். பிறகு மூன்றாவது பகுதியை சுத்தம் செய்யலாம். முழுவதும் சுத்தம் செய்த பிறகும், அங்கும் இங்குமாக இருக்கும் சில அழுக்குகளை போக்க, ஒரு மடங்கு ப்ளீச் மற்றும் இரண்டு மடங்கு தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். சிறிது நேரம் இந்த கலவை ஊறட்டும். பிறகு ஷவரை திறந்து தண்ணீரை வெளியேற்றவும். பின், இந்த ஸ்ப்ரே பாட்டிலில் உள்ள நீரை வெளிப்புறமாக ஷவரில் தெளிக்கவும். 

ஷவரின் வடிநீர் தட்டில் அடைப்பு ஏற்பட்டால் :

வடிநீர் தட்டு அல்லது பைப்களில் அடைப்பு ஏற்பட்டால் அமிழ்த்தியை(plunger) பயன்படுத்தி அடைப்பை போக்கலாம். இதே அமிழ்த்தியை பயன்படுத்தி ஷவரில் அடைப்பு ஏற்பட்டாலும் போக்கலாம். ஷவரின் வடிநீர் தட்டின் மூடியை திறந்து  கொள்ளவும். பின்பு அமிழ்த்தியை பயன்படுத்தி அடைப்பை போக்கவும். அப்படியும் அடைப்பு போகவில்லை என்றால் ரசாயன கிளீனரை பயன்படுத்தலாம். பவர் ஜெல், லிக்விட் ப்லம்ர் போன்றவை சந்தையில் கிடைக்கின்றது. அமேசானில் இதன் விலை $18. தயாரிப்பு நிறுவனங்கள் குறிப்பிட்ட முறையில் அவற்றை பயன்படுத்தவும். அப்படியும் அடைப்பு சரியாகவில்லையென்றால் ப்ளம்பரை அழைத்து நீங்கள் பின்பற்றிய  முறைகளை கூறி அதனை சரி பார்க்கச் சொல்லவும்.