இறந்த அணுக்களை நீக்க உதவும் ஸ்க்ரப்

இறந்த அணுக்களை எப்படி வெளியேற்றுவது என்பதற்கான விளக்கம் தான் இந்த பதிவு.

இறந்த அணுக்களை நீக்க உதவும் ஸ்க்ரப்

உங்களுடைய சருமம்  எந்த வகையாக இருந்தாலும், அவற்றில் மேல் பரப்பில் உள்ள இறந்த அணுக்களை குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து நீக்கிட வேண்டும். இறந்த அணுக்கள் வெளியேற்றப்படுவதால், சரும துளைகள் சுத்தமாகின்றன. சருமம் மென்மையாகிறது. இதனால் பருக்கள், கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் போன்றவை ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன. 

நமது சருமம் இயற்கையாகவே புதுப்பிக்கும் தன்மையோடு இருக்கும். சருமத்தின் மேல் படிவத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறுவதும், மேல் படிவத்துக்கு அடியில் இருக்கும் படிவத்தில் புதிய அணுக்கள் தோன்றுவதும் இயற்கை. வயது அதிகரிக்கும்போது இந்த பணியில் ஒரு தேய்மானம் உருவாகிறது. ஆகவே நாம் மற்ற பொருட்களை பயன்படுத்தி வெளியில் இருந்து இந்த சரும புதுப்பித்தலை மேற்கொள்கிறோம். 
என்ன தான், மாய்ஸ்ச்சரைசேர், டோனர் , க்ளென்சர் போன்றவற்றை பயன்படுத்தினாலும், இறந்த அணுக்களை வெளியேற்றாமல் சருமத்திற்கு பொலிவு கிடைக்காது. ஆகவே சருமத்தை எப்படி பொலிவாக்கலாம் என்று தெரிந்து கொள்வோம்.

பேக்கிங் சோடா:
1 ஸ்பூன் பேக்கிங் சோடா 
1 வைட்டமின் ஈ மாத்திரை 
தண்ணீர் 

வைட்டமின் ஈ மாத்திரையில் உள்ள எண்ணெய்யை பேக்கிங் சோடாவுடன் சேர்க்கவும். இந்த கலவையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி 3 நிமிடம் மசாஜ் செய்யவும். பின்பு நீரால் முகத்தை கழுவவும். இதனை வாரம்  ஒரு முறை செய்வதால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீக்கப்படுகிறது.

எப்சம் உப்பு:
1 கப் எப்சம் உப்பு 
1 கப் தேங்காய் எண்ணெய் 
10 துளி லாவெண்டர் எண்ணெய் 

தேங்காய் எண்ணெய் மற்றும் லாவெண்டர் எண்ணெய்யுடன் உப்பை சேர்க்கவும். இந்த கலவையை சருமத்தில் தடவி நன்றாக தேய்க்கவும். சிறிது நேரம் கழித்து வெந்நீரால் கழுவவும். இதனை வாரம்  ஒரு முறை செய்துவந்தால் சருமம் புத்துணர்ச்சி பெரும்.

காபி கொட்டை :
2-3 ஸ்பூன் காபி தூள் 
1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் 
தண்ணீர் 
 
தேங்காய் எண்ணெய்யுடன்  காபி தூளை சேர்க்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து சருமத்தில் தடவவும். மசாஜ் செய்யும்போது மேல் நோக்கி மசாஜ் செய்யவும். 5 நிமிடங்கள் தொடர்ந்து மசாஜ் செய்தவுடன் தண்ணீரால் கழுவவும். காபி குடிப்பதால் மட்டும் உடல் புத்துணர்ச்சி அடைவதில்லை. காபி தூளை சருமத்திற்கு பயன்படுத்துவதாலும் சருமம் புத்துணர்ச்சி அடைகிறது.

ஓட்ஸ்:
2 ஸ்பூன் ஓட்ஸ் 
தண்ணீர் 

தண்ணீருடன் ஓட்ஸ் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து சருமத்தில் தடவவும். மென்மையாக மசாஜ் செய்து பின்பு தண்ணீரால் முகத்தை கழுவவும். ஓட்ஸ் ஒரு ஸ்க்ரப் போல் இறந்த அணுக்களை நீக்க உதவுகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள எல்லா குறிப்புகளையும் முகத்தை போல் கை, கால், பாதம், முதுகு போன்ற இடங்களிலும் பயன்படுத்தலாம்.

சருமத்தில் இறந்த செல்களை நீக்கியவுடன் மாய்ஸ்ச்சரைசேர் பயன்படுத்தவும். இதனால் சருமம் நீர்ச்சத்துடன் ஆரோக்கியமாக இருக்கும்.

சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைக்க சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
 . எப்போதும் சருமத்தில் எண்ணெய்த்தன்மையை இழக்க வேண்டாம்.
 . நல்ல ஸ்க்ரப்களை பயன்படுத்துவது நல்லது.
 . சரும பராமரிப்பை தொடர்ச்சியாக மேற்கொள்வது நல்ல பலனை தரும்.
 . சரும தன்மை மற்றும் தேவைக்கேற்ப சரும புதுப்பித்தலை மேற்கொள்ள வேண்டும்.
 . வறண்ட மற்றும் கடினமான சருமத்தை வாரத்திற்கு 2 முறை புதுப்பித்து கொள்ளலாம். அதற்குமேல் செய்ய கூடாது.
 . எண்ணெய் சருமமாக இருந்தால் வாரத்திற்கு 3 முறை செய்யலாம்.
 . சருமத்தை ஸ்க்ரப் கொண்டு மசாஜ் செய்யும்போது சூழல் வடிவத்திலும், மேல் நோக்கியும் மசாஜ் செய்வதால் நீண்ட நாட்கள் சருமம் திடமாக இருக்கும்.
 . சருமத்தை புதுப்பிக்க வைக்க சந்தையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தாமல் நம் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்துங்கள். செலவும் குறையும். நல்ல பலனும் கிடைக்கும். எந்த பக்க விளைவும் ஏற்படாது.