பச்சை தக்காளியை விட வேக வைத்த தக்காளி ஏன் சிறந்தது ?

ஏன் வேக வைத்த தக்காளி சிறந்தது ?

பச்சை தக்காளியை விட வேக வைத்த தக்காளி ஏன் சிறந்தது ?

தக்காளி லைகோபீனின் அதாராமாக விளங்குகிறது. இந்த லைகோபீன் என்பது ஒரு தாவர ரசாயனம் ஆகும். தக்காளியின் சிவப்பு நிறத்திற்கு முக்கிய பொறுப்பு இந்த ரசாயனம். இது தவிர, லைகோபீன் என்பது ஒரு அதி சிறந்த அன்டி ஆக்சிடென்ட் ஆகும். இது புற்றுநோயைத் தடுப்பதில் சிறந்த தீர்வைத் தருகிறது. தக்காளியை பச்சையாக பயன்படுத்துவதை விட, சமைத்து பயன்படுத்தும்போது இதன் லைகோபீன் அளவு அதிகரிப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. இன்னும் எளிதாக சொல்லப்போனால், தக்காளியை பச்சையாக சாப்பிடுவதை விட, வேக வைத்து சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கிறது.


ஏன் வேக வைத்த தக்காளி சிறந்தது ?
புதிதாக பறிக்கபட்ட தக்காளியில் லைகோபீன்  அளவு ஒரு 100 கிராம் தக்காளியில் 0.88-7.74 மில்லி கிராம் அளவு இருக்கும் . அதுவே ஒரு தக்காளி கெட்ச் அப் அதே 100 கிராம் அளவில் 9.9-13.4 மில்லி கிராம் அளவு இருக்கும். சமைக்கும் போது  அல்லது மற்ற செயல்பாடுகளின் போது, தக்காளியில் உள்ள தண்ணீர் குறைந்து லைகோபீன் அளவு அதிகரிக்கிறது. ஆனால் அதே சமயம் புதிதாக வாங்கிய தக்காளியில் அதிக பலன்கள்  கிடைக்கும் . அதனை சமைக்குபோது அதிக நன்மைகள் நமக்கு கிடைக்கும்.  

ஆனால் தவறான செயலாக்கம் அல்லது பதப்படுத்தும் முறையால் லைகோபீன் அளவு குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு. சமைத்த தக்காளி உணவுகளை அதிக வெளிச்சத்தில் அல்லது காற்று இருக்கும் பகுதியில் வைப்பதால் அதன் லைகோபீன் அளவு குறையலாம். இதனால் தான் தக்காளி கொண்டு தயாரிக்கும் பொருட்கள் அதிகம் விரும்பப்படுவதில்லை மற்றும் இதன் நுகர்வும் குறைவாகவே இருக்கும். 

லைகோபீன் தக்காளியின் உட்பகுதியில் பிணைப்பு வடிவத்தில் உள்ளது. தக்காளி சமைக்கப்படும் போது, இந்த பிணைப்புகள் திறக்கப்படுகின்றன, மற்றும் லைகோபீன் பிணைப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறது, இதனால், லைகோபீன் உயிர்வாழ்வு அதிகரிக்கிறது. ஆகவே, நீங்கள் சமைத்த தக்காளியை உட்கொள்ளும்போது, அதிக லைகோபீன் உட்கொள்ளல் உண்டாகிறது. இதனால் உங்கள் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கிறது.

லிகோபீன் ஒரு கொழுப்பு-கரையக்கூடிய கலவை ஆகும். சமைப்பதைத் தவிர, தக்காளி பொருட்களுடன் கொழுப்பு சேர்ப்பதால், லைகோபீன் அளவு அதிகரிக்கிறது. உதாரணத்திற்கு, எண்ணெய் சேர்க்காமல் தயாரிக்கப்படும் சூப் அல்லது சாலடுடன் ஒப்பிடும்போது, எண்ணெய் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் தக்காளி சூப் அல்லது சாலட் இரத்தத்திற்குள் லைகோபீன் நுழைவை அதிகரிக்கிறது.. தக்காளியுடன் அவகாடோ சேர்க்காமல்  தயரிக்கப்படும் சால்சாவுடன் ஒப்பிடும்போது, அவகாடோ சேர்த்து தயாரிக்கப்படும் சால்சாவில் 4.4 மடங்கு அதிக லைகோபீன் உறிஞ்சுதல் உள்ளது ஒரு ஆய்வில் நிருபிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், அவகாடோவில் உள்ள கொழுப்பின் காரணமாக, தக்காளியில் உள்ள லைகோபீன் அளவு அதிகரித்து மேலும் அதிகமாக உறிஞ்சப்பட்டுள்ளது.

கடைசி தீர்ப்பு:
லைகோபீன் அதிகமாக கிடைக்க, தக்காளியை வேக வைத்து உண்ண வேண்டும். இயற்கையாக கொழுப்பு சத்து அதிகமாக இருக்கும் அவகாடோ போன்றவற்றுடன் சேர்த்து அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து சூப் அல்லது சாலட் செய்வதால் லைகோபீன் அளவு அதிகரிக்கும். எனவே மேலே கூறிய முறையில் முயற்சித்து லைகோபீன் அளவை அதிகரித்திடுங்கள் மற்றும் அதன் பலனைப் பெற்றிடுங்கள்.