கர்ப்ப காலத்தில் முள்ளங்கி சாப்பிடலாமா?

முள்ளங்கி பற்றி நீங்கள் இது வரை அறிந்து கொள்ளாத செய்திகளை இப்போது அறிந்து கொள்ளுங்கள்.

கர்ப்ப காலத்தில் முள்ளங்கி சாப்பிடலாமா?
கர்ப்ப காலத்தில் முள்ளங்கி சாப்பிடலாமா?

கர்ப்ப காலத்தில் முள்ளங்கி சாப்பிடலாமா?

இந்திய காய்கறிகளில் முள்ளங்கி ஒரு சுவை மிகுந்த காயாகும். பலரும் இதனை விரும்பி சுவைப்பதை நாம் அறிந்திருக்கிறோம். முள்ளங்கி பல வண்ணங்களில் விளைகிறது. இருந்தாலும் இது பொதுவாக காணப்படும் நிறம் வெள்ளை. மேலும் இதன் வடிவமும் பல வகை. குட்டையாக வட்ட வடிவத்தில் , நீளமாக , குறுகலாக என்று எல்லா வடிவத்திலும் இதனை நாம் காணலாம். முள்ளங்கியை வேக வைக்காமல் அப்படியே பச்சையாக சாப்பிடலாம். வேக வைத்து, சமைத்து சாப்பிடலாம். பொரித்து அல்லது பேக் செய்தும் சாப்பிடலாம். இருப்பினும், கர்ப்ப காலத்தில்? ஆம்  , கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் கவனமான தேர்வு வேண்டும் என்பதை நாம் அறிவோம்.

கர்ப்பிணி பெண்கள் முள்ளங்கியை தங்கள் உணவில் இணைத்துக் கொள்ளலாமா?
கர்ப்ப காலத்தில் பல உணவுகள் பாதுகாப்பற்றதாகவும் அபாயத்தை விளைவிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. கர்ப்ப காலத்தில் முள்ளங்கி உட்கொள்வதால் உண்டாகும் அபாயம் நேரடியாக இருப்பதில்லை. ஆனால் கர்ப்ப காலத்தில் முள்ளங்கி சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. சில சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி இதனை உட்கொள்ளலாம். அந்த குறிப்புகளைப் பற்றிய பதிவை இப்போது நாம் காணவிருக்கிறோம்.

முள்ளங்கியின் ஊட்டச்சத்து மதிப்பு விபரம்:
ஒரு கப் முள்ளங்கியில் பொட்டாசியம், போலேட், கால்சியம், இரும்பு, வைடமின் சி, வைடமின் ஏ, பி வைடமின்கள் , ஜின்க், மங்கனீஸ் போன்ற முக்கிய வைட்டமின் மற்றும் கனிமங்கள் அதிக அளவில் உள்ளன. ஆரோக்கியமான குழந்தை வளர்ச்சிக்கு போலேட் மிகவும் அவசியம். மற்றும் வைடமின் சி மற்றும் இரும்பு சத்து , இரத்த ஓட்ட மண்டல வளர்ச்சி மற்றும் பல்வேறு உறுப்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். பற்கள், எலும்புகள் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு கால்சியம் மிகவும் அவசியம்.
 
கர்ப்ப காலத்தில் முள்ளங்கி சாப்பிடுவதால் உண்டாகும் அற்புத நன்மைகள் :

முள்ளங்கியை கர்ப்பிணிகள் தங்கள் வழக்கமான உணவு அட்டவணையில் எடுத்துக் கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கின்றது. அவற்றுள் சிலவற்றை இப்போது நாம் காணலாம்.

1. மஞ்சள் காமாலையைப் போக்க உதவுகிறது:
முள்ளங்கி கல்லீரலுக்கு மிகுந்த நன்மை செய்கிறது. இது சிறந்த முறையில் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இரத்தத்திலும் கொழுப்பிலும் தீங்கு விளைவிக்கும் நச்சுகளை அகற்றுவதன் மூலம் கல்லீரலுக்கு முள்ளங்கி உதவி புரிகிறது. காய்கறிகளில் உள்ள குறிப்பிட்ட தாவர வேதிப்பொருட்கள் சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் உதவுகின்றன. இதனால் பிலிரூபின் தொகுப்பு மற்றும் மஞ்சள் காமாலை ஆகியவற்றின் வாய்ப்புகளை குறைக்கிறது.

2. எடையை கட்டுப்படுத்த உதவுகிறது:
முள்ளங்கியில் கலோரி எண்ணிக்கை குறைவு. ஆனால் இது எளிதில் வயிற்ரை நிரப்ப உதவுகிறது. இதனால் குறைந்த கலோரி அளவில் உங்கள் பசி எளிதில் அடங்குகிறது. கூடுதலாக, முள்ளங்கியில் கார்போ சத்து மற்றும் சர்க்கரை அளவு மிகவும் குறைவு மற்றும் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது மலச்சிக்கலுக்கு ஏற்ற உணவாகிறது.

3. புற்று நோய் தடுக்கப்படுகிறது :
ஐசோதியோசைநேட் மற்றும் சல்பரபேன் போன்ற பல சக்திமிக்க  புற்று நோய் எதிர்ப்பு காரணிகள் முள்ளங்கியில் இருப்பதாக அறியப்படுகிறது.

முள்ளங்கி

4. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது :
முள்ளங்கியில் பொட்டாசியம் சத்து மிகவும் அதிகம். இது இரத்த அழுத்தத்தைக் குறைத்து , இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. அந்தோசியானின் என்னும் அன்டி ஆக்சிடென்ட் இதய நோய் தாக்கும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

5. சிறுநீரக பிரச்சனைகளை போக்க உதவுகிறது :
முள்ளங்கியில் சிறுநீர் பிரிப்பு தன்மை உள்ளது. இதனால் சிறுநீர் வெளியேறுவதில் முன்னேற்றம் உண்டாகிறது. முள்ளங்கியில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மை காரணமாக, சிறுநீரக பாதையில் உள்ள வீக்கம், தொற்று, போன்ற பல பாதிப்புகளைப் போக்க உதவுகிறது. 

6. நீரிழிவு :
முள்ளங்கியில் க்ளைகமிக் குறியீடு மிகவும் குறைவாக உள்ளது. இதன் காரணமாக, முள்ளங்கியை உட்கொள்வதால் இரத்தத்தில் க்ளுகோஸ் அளவில் மாறுபாடு உண்டாவதில்லை. நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த செய்தி நன்மையானதாக இருக்கும். ஆகவே நீரிழிவு நோயாளிகள் இதனை எடுத்துக் கொள்வதில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை.

7. சரும நிலைகள் . :
வைடமின் சி, பி வைட்டமின்கள் மற்றும் ஜின்க் ஆகியவை சருமத்திற்கு சிறந்த பலனைத் தருபவையாக உள்ளன. கொலோஜென் என்பது சரும அணுக்களை ஒன்றோடொன்று இணைக்கும் ஒரு புரத கட்டமைப்பாகும். கொலோஜன் உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கு சில குறிப்பிட என்சைம்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் தரத்தை மேம்படுத்த இந்த ஊட்டச்சத்துகள் உதவுகின்றன. 

8. நோயெதிர்ப்பு சக்தி :
முள்ளங்கியில் வைட்டமின் சி சத்து இருப்பதால், தாய்மார்கள் மற்றும் அவர்கள் வயிற்றில் உள்ள குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. ஒரு கப் முள்ளங்கியை எடுத்துக் கொள்வதால் ஒரு நாளுக்கு தேவையான வைட்டமின் சத்தின் 30% பூர்த்தியாகிறது.

முள்ளங்கியை சாப்பிடும்போது பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் 

தினசரி உணவில் முள்ளங்கியை இணைத்துக் கொள்வது தனிச்சிறப்பு வாய்ந்தது என்பதை நாம் அறிந்து கொண்டோம். ஆனால் அதனை உட்கொள்வதற்கு முன்னர் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். அதனை இப்போது காண்போம்.


1. முள்ளங்கி ஒரு வேர் காய்கறியாகும். ஆகவே பொதுவாக முள்ளங்கியின் மேல்பகுதியில் சேறு அல்லது அழுக்கு படிவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆகவே, தொற்று பாதிப்புகளைத் தவிர்க்க, முதல் படியாக முள்ளங்கி அல்லது முள்ளங்கி முளைகளை உட்கொள்வதற்கு முன்னர் அதன் அழுக்குகளை முற்றலும் கழுவிவிட்டு உட்கொள்ளவும். தேவைபட்டால், முள்ளங்கியின் தோலை சீவிவிட்டு அதனை உட்கொள்ளலாம்.

2. இதே காரணத்திற்காக,முள்ளங்கியை பச்சையாக அப்படியே சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். முள்ளங்கியை சமைத்து சாப்பிடுவதால் அதில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் கிருமிகள் அழிக்கப்படுகின்றன.

3. முள்ளங்கியை நறுக்கிய பின், நறுக்கும் பலகையை தண்ணீர் மற்றும் டிடர்ஜென்ட் பயன்படுத்தி நன்றாக கழுவிய பின் மற்ற காய்கறிகளை நறுக்குவதால் மற்ற காய்கறிகளில் இந்த கிருமிகள் பரவுவதைத் தடுக்கலாம்.

4. வேர் காய்கறிகளான முள்ளங்கி, கேரட், நூல்கோல், உருளைக்கிழங்கு , பீட்ரூட் போன்றவற்றை சமைப்பதற்கு முன்னர், எப்போதும் கைகளை நன்றாக கழுவியபின் சமைக்கத் தொடங்குங்கள்.

கர்ப்ப காலத்தில் முள்ளங்கியை சாப்பிடுவதால் உண்டாகும் விளைவுகள் மற்றும் அபாயங்கள் :
மேலே கூறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்  வரையில் இத்தகைய ஊட்டச்சத்து மிகுந்த முள்ளங்கியை தவிர்க்க வேண்டிய எந்த ஒரு அவசியமும் இல்லை. எனினும், அதனை அழுக்கைப் போக்காமல் அல்லது சரியாக சமைக்காமல் உட்கொள்வதால் , சால்மோனெல்லோசிஸ், டோக்ஸோபிளாஸ்மோசிஸ் மற்றும் ஷிகெல்லோசிஸ் போன்ற ஆபத்தான நோய்த்தொற்றுகளுக்கு நீங்கள் வாய்ப்புக் கொடுக்கலாம். இதனால் அதிக காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு, உடல் வலி, மற்றும் கர்ப்ப காலத்தை பாதிக்கக்கூடிய இதர அறிகுறிகள் தோன்றலாம். இந்த தொற்று பாதிப்பு தீவிரமாகும் வேளையில் முன்கூட்டிய பிரசவம், கருச்சிதைவு மற்றும் குழந்தை இறந்து பிறப்பது போன்ற பாதிப்புகள் உண்டாகலாம்.

கர்ப்ப கால உணவு அட்டவணையில் முள்ளங்கியை எப்படி சேர்த்துக் கொள்வது?
உங்கள் உணவு அட்டவணையில் முள்ளங்கியை சேர்ப்பதற்கான செல வழிகள் இங்கே உள்ளன. அவற்றை இப்போது காணலாம்.

1. சூப் அல்லது ஸ்டூ போன்றவற்றில் முள்ளங்கியை மற்ற காய்கறிகளுடன் இணைந்து சேர்த்துக் கொள்வதால் ஒரு சுவைமிகு ஸ்நாக்ஸ் உங்களுக்கு கிடைக்கும்.
2. கூடுதல் ஊட்டச்சத்திற்காக , முள்ளங்கியை பாஸ்தா அல்லது நெய் சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம்.
3. பொதுவாக இந்திய சமையலில், முள்ளங்கியை சாம்பார், சட்னி போன்றவற்றில் பயன்படுத்துவார்கள்.

பெண்களின் வாழ்க்கையில் கர்ப்ப காலம் மிகவும் கடினமான காலம். ஆகவே இந்த காலத்தில் குழந்தை மற்றும் தாயின் உடல் ஆரோக்கியம் மிகவும் எச்சரிக்கையுடன் கையாளப்படவேண்டிய ஒன்றாகும். ஆகவே, ஒரு வெற்றிகரமான பிரசவத்திற்கு தேவையான எல்லா முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது மிகவும் அவசியம்.