சிறுநீரகத்தை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று

சிறுநீர் பாதை தொற்று என்பதை நாம் கேள்விபட்டிருப்போம். ஆனால் அதனை அனுபவிக்கும் சிலர் அதனைப் பற்றி பெரிதாக் எடுத்துக் கொள்வதில்லை.

சிறுநீரகத்தை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று

தொற்று ஏற்படும் நேரம் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்று அதற்கான மருந்துகள் எடுத்து , தொற்று தீர்ந்தவுடன் அவர்கள் வேலையே பார்க்கச் செல்கின்றனர். நாமும் அதனைப் பற்றி பெரிதாக யோசிக்கவில்லை. 

திடீரென்று ஒரு நாள், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றியது. இரண்டு நொடிக்கு ஒரு முறை சிறுநீர் கழிக்கும் உணர்வு உண்டானது. சிறுநீர் கழிக்கும்போது ஒரு வித வலி ஏற்பட்டது. முதலில் மலச்சிக்கலாக இருக்கும் என நினைத்தேன். பின், சென்ற முறை மலச்சிக்கல் ஏற்பட்டபோது எடுத்துக் கொண்ட மருந்தின்  பக்க விளைவாக இருக்கும் என்று யோசித்தேன். பிறகு காய்ச்சலாக இருக்கும் என்று தோன்றியது. கர்ப்பமாக இருக்குமோ என்றும் நினைத்தேன்.. ஆனால் UTI என்னும் சிறுநீர் பாதை தொற்று ...? இதை பற்றி நான் யோசிக்கவேயில்லை.

எல்லாப் பெண்களையும் போல் நானும் இந்த அறிகுறிகளை புறக்கணிக்க தொடங்கினேன். பத்து நாட்கள் சென்றது. கடுமையான காய்ச்சல், குளிர் என்னை வாட்டத் தொடங்கியது. எனது முதுகு மற்றும் வயிற்றின் அடிப்பகுதி வீங்கத் தொடங்கியது. உடனடியாக மருத்துவரிடம் சென்றேன். அப்போதுதான் தெரிந்து இது சிறுநீரக பாதிப்பு என்று.. எனது உறுப்பைக் காப்பாற்றிக் கொள்ள IV திரவம் பல பைகள் எடுத்துக் கொள்ள வேண்டி இருந்தது.,மேலும் பல வலி நிவாரணிகள் மற்றும் அன்டி பயோடிக் என்று மருந்துக் குவியல் பரிந்துரைகள் வழங்கப்பட்டன.

ஆனால் இவை அனைத்தையும் தடுத்திருக்க முடியும். மேலே கூறிய அறிகுறிகளைக் கண்டவுடன் மருத்துவமனை சென்றிருந்தால்... ஆகவே உங்களுக்கும் இதன் அறிகுறிகளை பற்றியும் சிறுநீரக பாதிப்பை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டிய காட்யம் உள்ளது. இந்த பதிவைப் படித்து அறிந்து கொள்ளுங்கள். எந்த ஒரு அறிகுறியையும் புறக்கணிக்காமல் உடனைடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவதால் ஆரம்பத்திலேயே உங்கள் நோயைக் கண்டறிந்து அதில் இருந்து மீண்டு வரலாம்.

UTI என்னும் சிறுநீரக பாதை தொற்று என்றால் என்ன?

UTI என்பது சிறுநீர் மண்டலம் அதாவது, சிறுநீர்ப்பை, சிறுநீரகம், அதனை இணைக்கும் குழாய்கள் போன்றவற்றில் கிருமிகளால் ஏற்படும் தொற்று ஆகும். உடலில் ஏற்படும் நோய்த்தொற்றுகளில் இரண்டாவது பொதுவான நோய்த்தொற்றாக அறியப்படுவது இந்த சிறுநீரக நோய்த்தொற்று. குறிப்பாக பெண்களிடம் இந்த தொற்று பரவலாக கானபப்டுகிறது. 

இதன் அறிகுறிகள்:
முதல் அறிகுறி, சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும் வலி. இது மிகவும் எரிச்சலாக இருக்காது. ஆனால் ஒரு வித அசௌகரியம் உண்டாகும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றும். ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் மிகவும் சிறிய அளவே வெளிவந்தாலும் இந்த உணர்வு மேலோங்கி இருக்கும். சில நேரம் சிறுநீரில் ஒரு வித துர்நாற்றம் வீசலாம், இரத்த திட்டுக்கள் கூட சில நேரம் தென்படலாம். மேலே கூறிய எல்லா அறிகுறிகளும் UTI இருப்பதற்கான அறிகுறிகள் தான். ஆகவே அலட்சியம் செய்ய வேண்டாம்.

சிறுநீரக தொற்று என்றால் என்ன?
சிறுநீரக பாதை தொற்றை கவனிக்காமல் அலட்சியம் செய்வதால் உண்டாவது சிறுநீரக தொற்று. கிருமிகள் சிறுநீர்ப்பையில் பரவி, மேலும் ஒரு அல்லது இரண்டு சிறுநீரகத்திலும் பரவி, இரத்தத்தை வடிகட்டி சிறுநீரை உற்பத்தி செய்யும் உறுப்புகளையும் அந்த கிருமிகள் தாக்குகிறது. காய்ச்சல், அடிவயிறு மற்றும் முதுகு வலி, அதிகரித்த வியர்வை மற்றும் குளிர், போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும். இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்வதால் நிரந்தமாக சிறுநீரக பாதிப்பு அல்லது இரத்தத்தில் விஷத்தன்மை கலப்பது, போன்ற அபாயகரமான விளைவுகள் ஏற்படலாம்.

சிறுநீர் பாதை தொற்று ஏற்படக் காரணம் மற்றும் அதனை தடுக்கும் முறை :
கிருமிகள் உடலுக்குள் நுழைவதற்கு பல காரணிகள் உண்டு. அதிலும் இளம் பெண்களுக்கு இந்த சிறுநீரக பாதை தொற்று ஏற்பட முக்கிய காரணம் பாலியல் தொடர்பு. உறவுக்கு முன்னும் பின்னும் சிறுநீர் கழிப்பதால் இந்த தொற்று ஏற்படுவது குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு. இப்படி செய்வதால் சிறுநீரக பாதையில் உள்ள கிருமிகள் வெளியேறலாம். பொதுவாக சிறுநீரக பாதையை சுத்தமாக வைத்திருப்பதால் தேவையற்ற கிருமிகளை தடுக்கலாம்.

மேலும், நீங்கள் சுவையான குருதிநெல்லி காக்டெய்ல் விரும்பி குடிப்பதால் மேலும் நன்மை கிடைக்கும். இந்த  சாறு சிறுநீரகத்தின் சுவர்களில் ஒட்டிக்கொண்டு பாக்டீரியாவை மிகவும் கடினமாக்குவதன் மூலம் யூடிஐகளை தடுக்க உதவுகிறது.

தொற்று ஏற்பட்ட பின் செய்வ வேண்டுபவை :
UTI அல்லது சிறுநீரக தொற்று ஏற்பட்டவுடன், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும். உங்கள் சிறுநீர் மற்றும் இரத்த பரிசோதனைக்கு பின் உங்களுக்கு தேவையான அன்டி பயோடிக்குகளை அவர் வழங்குவார். வலி நிவாரணிகள் உங்களுக்கு ஒருவித சௌகரியத்தை தந்தாலும், அவற்றால் உங்களுக்கு குணமளிக்க  இயலாது. மற்ற மாத்திரைகள் உங்கள் உடலுக்குள் சென்று வேலை செய்யும் வரை காத்திருத்தல் அவசியம்.

பொதுவாக அன்டி பயோடிக் மற்றும் அதிகமான திரவங்கள் உங்கள் நோயை விரைவில் குணப்படுத்தும். எல்லாவற்றிலும் மேலாக, எவ்வளவு சீக்கிரம் நீங்கள் இந்த பாதிப்பை அறிந்து கொள்கிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் சிகிச்சை பெற்று, குணமடையலாம்.

சில பெண்களுக்கு இந்த தொற்று அடிக்கடி ஏற்படும். சில பெண்களுக்கு இந்த பாதிப்பு நாட்பட்டு இருக்கும். ஆனால் இது தீர்க்க முடியாத பாதிப்பு அல்ல என்பதை மட்டும் மனதில் கொள்ளுங்கள். இதற்கான அறிகுறிகளை அறிந்தவுடன் சிகிச்சை எடுத்துக் கொள்வதால் விரைந்து இதில் இருந்து மீண்டு விட முடியும்.