ஆண்களுக்கும் பெண்களுக்குமான இதய நோய் - வியப்பூட்டும் வேறுபாடுகள்

பெண்களின் இதயமும் ஆண்களின் இதயமும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் கொண்டவை. இந்த வேறுபாட்டை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆண்களுக்கும் பெண்களுக்குமான இதய நோய்  - வியப்பூட்டும் வேறுபாடுகள்

பெண்களின் இதயமும் ஆண்களின் இதயமும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்தாலும், இவை இரண்டிலும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. உதாரணத்திற்கு, பெண்களின் இருதயத்தின் உட்புற அறைகள் சற்று சிறியதாக இருப்பதால் இவர்களின் இருதயம் சற்று சிறியதாக தோற்றமளிக்கும். இந்த அறைகளை பிரிக்கும் சுவர்கள் மிகவும் மெலிதாக இருக்கும். ஆண்களின் இதயத்தை விட பெண்களின் இதயம் வேகமாக இரத்தத்தை பம்ப் செய்கிறது. அதே நேரம் ஒவ்வொரு முறையும் 10% குறைவாக இரத்தத்தை வெளிக் கொணர்கிறது. பெண்கள் அதிக அழுத்தத்தில் இருக்கும்போது , அவர்களின் நாடித்துடிப்பு அதிகமாகி, இதயம்  அதிக இரத்தத்தை வெளியாக்குகிறது. ஆண்கள் அதிக அழுத்தத்தில் இருக்கும்போது, அவர்கள் தமனிகள் சுருங்கி, இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.

இந்த வேறுபாட்டை ஏன் கவனத்தில் கொள்ள வேண்டும்?

இந்த பாலின வேறுபாடு பற்றி அவசியம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். காரணம், இதய நோய் அறிகுறி, சிகிச்சை மற்றும் இதய நோயின் தாக்கத்தால் உண்டாகும் பலன் ஆகியவற்றில் இந்த பாலின வேறுபாடு முக்கிய பங்காற்றுகிறது.

கரோனரி தமனி நோய் (Coronary Artery Disease - CAD)

மாரடைப்பிற்கு காரணமான CAD , உருவாகும் விதம் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே விதமாகும். இரத்தத்தில் சேரும் அதிக கொழுப்பு இதய தமணிகளின் சுவற்றில் படிந்து தடுப்புகளை உண்டாக்குகிறது. இந்த தடுப்புகள் மெதுவாக வளர்ந்து , கடினமாக மாறி, தமனிகளை மெல்ல குறுக்கி விடுகிறது. இதனால் இரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதன் காரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது.

இதை தவிர, ஆண்களுக்கு ஏற்படாத சில அபாய விளைவுகளும் பெண்களுக்கு உண்டாகலாம். மாரடைப்பின் வேறு சில அறிகுறிகளும் பெண்களுக்கு ஏற்படுகிறது. அறிகுறிகள் தென்படும்போதும், சோதனை மூலம் இந்த நோயைக் கண்டுபிடிப்பது கடினமாகும்.

மாரடைப்பிற்கு பின், ஆண்களைப் போல் பெண்கள் விரைவில் குனமடைவதில்லை. காரணம், சில நேரங்களில், பெண்களுக்கு சிறந்த சிகிச்சைகள் கிடைப்பதில்லை. மற்றொரு காரணம், பெண்கள் மிகவும் தாமதமாகவே தாங்கள் அபாய கட்டத்தில் உள்ளதை உணர்கிறார்கள். கரோனரி தமனி நோய் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபடும் 6 வழிகளை இப்போது காணலாம்.

1. ஆண்களுக்கு இல்லாத சில அபாய விளைவுகள் பெண்களுக்கு உண்டு. பெண்களுக்கு மட்டுமே காணப்படும் சில வகை நோய்கள் இந்த கரோனரி தமனி நோய்க்கு காரணமாக அமைகின்றது. கருப்பை நீர்க்கட்டி , என்டோமெட்ரியோசிஸ் என்னும் இடமகல் கருப்பை அகப்படலம், கர்ப்பகால நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவை இவற்றுள் அடங்கும். Endometriosis என்னும் இடமகல் கருப்பை அகப்படலம், CAD வளர்ச்சி நிலையை 400% அதிகரிப்பதாக அதுவும் 40 வயதுக்கு குறைவான பெண்களைத் தாக்குவதாக கூறப்படுகிறது. பாரம்பரிய அபாய காரணிகளான உயர் இரத்த அழுத்தம், உயர் சர்க்கரை அளவு, உயர் கொலஸ்ட்ரால் அளவு, புகை பிடிப்பது, உடல் பருமன் போன்றவை பெண்களுக்கும் பாதிப்பை உண்டாக்குகிறது. ஆண்களைப் போலவே பெண்களையும் பாரம்பரியமாக இதய நோய் தாக்கலாம், குறிப்பாக தந்தை அல்லது சகோதரர் 55 வயதிற்கு முன்னர் CAD உடன் அல்லது ஒரு தாய் அல்லது சகோதரி 65 வயதிற்கு முன் கண்டறியப்பட்டிருந்தால் அந்த குடும்ப பெண்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படலாம். 

2. பெண்களுக்கு அதிக வயது முதிர்விற்கு பின் மட்டுமே மாரடைப்பு ஏற்படுகிறது. பெண்களை விட ஆண்களுக்கு இளம் வயதில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. பெண்கள் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜென் பாதுகாப்பு வளையமாக செயல்பட்டு மாரடைப்பு வராமல் தடுக்கிறது. ஆகவே மெனோபாஸ் காலகட்டதிற்கு பின் ஈஸ்ட்ரோஜென் அளவு குறையும் போது மாரடைப்பு அபாயம் உண்டாகிறது. இதனால், பெண்களுக்கு பொதுவாக மாரடைப்பு ஏற்படும்  காலம் சராசரியாக 70 வயதைக் கடந்து என்பது அறியப்படுகிறது. ஆண்களுக்கு சராசரியாக 66 வயதில் மாரடைப்பு ஏற்படுகிறது என்பது அறியப்படுகிறது. 

3. பெண்களுக்கு உண்டாகும் மாரடைப்பின் அறிகுறி வேறாக உள்ளது. நெஞ்சு வலி அல்லது நெஞ்சை அழுத்துவது போன்ற உணர்வு, பொதுவாக ஆண்களின் மாரடைப்பிற்கு முக்கிய அறிகுறியாக கருதப்படுகிறது. சில பெண்களும் இதே அறிகுறியை உணர்கின்றனர், ஆனால் இதத் தவிர வேறு விதமான அறிகுறிகளையும் அவர்கள் உணர்கின்றனர். திரைப்படங்களில் காணப்படுவது போல் திடீரென்று நெஞ்சை பிடித்துக் கொண்டு சாய்வது போலல்லாமல் ,  மார்பு-இறுக்கமான வலியைப் போலல்லாமல், பெண்கள் பெரும்பாலும் மாரடைப்புக்கு முன்னால் மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு முன் நுட்பமான அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள்.

  அலட்சியம்  செய்யக்கூடாத சில அறிகுறிகள்:
1. புது விதமாக உங்கள் உடல் சோர்வாக காணப்படும். நீங்கள் உங்களை பெரிதும் வருத்திக் கொள்ளாத சூழ்நிலையிலும் மிக அதிக சோர்வாக உணர்வீர்கள். ஆனால் உங்களால் தூங்க முடியாது. நெஞ்சு கனமாக இருப்பது போல் உணர்வீர்கள். உதாரணத்திற்கு ஒரு சின்ன உடல் செயல்பாடு அதாவது உங்கள படுக்கையை சுத்தம் செய்து படுப்பது கூட இயல்பிற்கு மீறிய சோர்வை உங்களுக்கு உண்டாக்கலாம். ஒரு வழக்கமான உடல் பயிற்சிக்கு பின்னரும் மிகவும் பலவீனமாக உணரலாம். 

2. மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகலாம். வியர்த்து கொட்டலாம். உங்களை நீங்கள் வருத்திக் கொள்ளாத நிலையிலும், நெஞ்சு வலியுடன் கூடிய சோர்வு உண்டாகி, மேலும் எதாவது சிறிய வேலை செய்த பின் இந்த சோர்வு இன்னும் மோசமாவது , அல்லது காரணமே இல்லாமல் சளி பிடித்து, உடல் குளிர்ச்சி அடைவது போன்ற அறிகுறிகள் தென்படுமானால் சற்று கவனமாக இருக்கவும். மற்றும் படுக்கும்போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு பின் எழுந்து உட்காரும்போது இந்த நிலை சீராவதும் ஒரு வித அறிகுறியாகும்.

3. கழுத்து, முதுகு அல்லது தாடையில் வலி ஏற்படுவது ஒரு அறிகுறியாகும். நீங்கள் ஏதேனும் வேலை செய்யும் போது மூட்டு அல்லது தசைகளில் வலி ஏற்பட்டு, வேலையை நிறுத்தியவுடன் அந்த வலி குறைவதை நீங்கள் உணர்கிறீர்களா என்று பரிசோதித்து பாருங்கள். இந்த வலி குறிப்பாக கைகளில் அதுவும் ஆண்களுக்கு இடது கையில் இந்த வகை அசௌகரியம் ஏற்படலாம். மேலும் ஒரு வித வலி நெஞ்சில் தொடங்கி, உங்கள் முதுகு வரை பரவினால், அல்லது இரவில் உங்கள் உறக்கத்தை கெடுத்து விழிக்கச் செய்யும் ஒரு வித வலி , அல்லது இடது கீழ் பக்க தாடையில் ஏற்படும் வலி போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.

நோய்க்கண்டறிதல் :

1. பெண்களுக்கு இந்த கரோனரி தமனி நோய் இருப்பதை கண்டறிவது மிகவும் கடினம். ஆஞ்சியோகிராம் என்று பரவலாக அறியப்படும் ஒரு வகை எக்ஸ் ரே படம் மூலம் இதயத்தின் பெரிய தமனிகளில் உள்ள குறுகல் மற்றும் தடுப்புகளை அறிந்து கொள்ளக் முடியும். இது  ஒரு முதல் தர நோய் கண்டறியும் முறையாகும். ஆனால் பெண்களுக்கு உண்டாகும் CAD பாதிப்பு சிறிய தமனிகளை பாதிப்பதால் இவற்றை ஆஞ்சியோகிராம் மூலம் தெளிவாக கண்டறிய முடியாது. ஆகவே ஆஞ்சியோ கிராம் பரிசோதனைக்கு பின் இதயத்தில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று சான்று பெற்ற பெண்கள் தொடர்ந்து இதய நோய் பாதிப்பிற்கான அறிகுறிகளைக் கொண்டிருந்தால் , பெண்கள் இதய நோய் கண்டறிதலில் நிபுணத்துவம் பெற்ற சிறந்த இதய நோய் நிபுணரை கண்டு  மீண்டும் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
 
2. ஆண்களுக்கு ஏற்படும் மாரடைப்பை விட பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பு மிகவும் கடினமானது. ஆண்களைப் போல் இவர்களுக்கு எளிதில் குனமாவதில்லை. நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுப்பது பெண்களுக்கு மிகவும் அவசியமாகிறது. சில நேரங்களில் மருத்துவமனையிலேயே இவர்களின் இறப்பும் நிகழ வாய்ப்புள்ளது. இதற்குக் காரணம்,  மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பெண்கள் நீரிழிவு அல்லது அதிக இரத்த அழுத்தம் போன்ற அதிக சிகிச்சை அளிக்கப்படாத ஆபத்து காரணிகளைக் கொண்டுள்ளனர். இன்னும் சில நேரங்களில் , பெண்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வதை  விட தங்கள் குடும்பத்தின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்வதும் ஒரு காரணமாகிறது.

3. மாரடைப்பிற்கு பின் பெண்கள் சரியான மருந்துகளை உட்கொள்வதில்லை. முதன்முறை மாரடைப்பிற்கு பின் , பெண்களுக்கு இரத்தம் உறையும் அபாயம் அதிகம் இருப்பதாக அறியப்படுகிறது. இந்த வகை இரத்தம் உறைதல், மற்றொரு மாரடைப்பிற்கு  காரணமாக உள்ளது. இப்படி இரத்தம் உறைவதைத் தடுக்க இவர்களுக்கு எந்த ஒரு மருந்தும் வழங்கப்படுவதில்லை என்பதன் காரணம் என்ன என்பது விளங்கவில்லை. பெண்களுக்கு முதல் மாரடைப்பிற்கு பின் அடுத்த 12 மாதங்களில் மற்றொரு மாரடைப்பு வருவதற்கு இதுவே பதிலாக அமைகிறது. இந்த சூழல் ஆண்களுக்கு உண்டாவதில்லை.

4. இதயம் செயலிழப்பு:

ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதால் தசைகள் இயல்பாக சுருங்கி விரியும் தன்மை தடுக்கப்படுகிறது. இதனால் இதய செயலிழப்பு உண்டாகிறது. மறுபுறம், பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம், நாட்பட்ட சிறுநீரக நோய், மற்றும் இதய துடிப்பிற்கு ஏற்ற விதத்தில் இதயம் தசைகள் சுருங்கி விரியும் தன்மையை தடுக்கும் வேறு நிலைகள் ஆகியவை பெண்களுக்கு இதய செயலிழப்பை உண்டாக்கும் காரணிகளாகும்.
இதய செயலிழப்புடன் வாழும் ஆண்களின் வாழ்நாளை விட அதிக நாட்கள் பெண்கள் வாழ்கிறார்கள். ஆனால் சுவாச பிரச்சனை, குறைந்த உடல் செயல்பாடு, போன்றவற்றிற்காக அடிக்கடி மருத்துவ சிகிச்சை பெறுவது அல்லது வீட்டிலேயே செவிலியர் உதவி பெறுவது போன்றவை அவசியமாகிறது.

5. அசாதாரண இதயத் துடிப்பு:

ஏட்ரியல் ஃபிப்ரிலேஷன் Atrial Fibrillation(afib) என்பது ஒரு ஒழுங்கற்ற, அடிக்கடி வேகமான துடிக்கும் இதயத் துடிப்பாகும். இந்த நிலையைக் கொண்டிருக்கும் பெண்களுக்கு இதய நோய் அறிகுறி அதிகமாக இருப்பதாகவும், இவர்களின் வாழ்க்கை முறை மோசமானதாக இருப்பதாகவும், வாதம் உண்டாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும், ஆண்களை விட அதிக தீய விளைவுகள் இவர்களுக்கு இருப்பதாகவும் சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. AFIB பாதிப்பு உள்ள பெண்கள் ஆண்களை விட அதிக நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டி இருக்கும். ஆனால் இந்த பிரச்சனைகளைத் தாண்டி, AFIB பாதிக்கப்பட்ட பெண்கள் ஆண்களை விட அதிக நாட்கள் உயிர் வாழ்கின்றனர். 
 
6. உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்:

நீங்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மாரடைப்பில் இருந்து உங்களைக் காத்துக் கொள்ள இதுவே சரியான தருணம் என்று நினைத்துக் கொள்ளுங்கள். இன்னும் கால தாமதம் செய்ய வேண்டாம். இதற்கான சில வழிமுறைகள் இதோ உங்களுக்காக..

 . புகை பிடிப்பதை நிறுத்துங்கள் அல்லது புகை பிடிக்கும் பழக்கத்தை தொடங்காதீர்கள்.
 . உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.(குறைந்தது ஒரு நாளில் அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்)
 . அதிக பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மீன், போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். விலங்கு உணவு குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள். எளிய கார்போ உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். பதப்படுத்தபட்ட உணவுகளை குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள். 
 . சராசரி உடல் எடையை பராமரித்துக் கொள்ளுங்கள். இரத்த அழுத்தம், கொழுப்பு அளவு, இரத்த சர்க்கரை அளவு ஆகியவற்றை பராமரியுங்கள்.