விரைவில் குணமடைவேன்- சமந்தா

“நான் போராடிக் கொண்டிருக்கிறேன், விரைவில் பூரண குணமடைவேன்!"- என தன் உடல்நலப் பிரச்னை குறித்து சமந்தா சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். அதில் தனக்கு இருக்கும் உடல்நலப் பிரச்னை குறித்து வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

விரைவில் குணமடைவேன்- சமந்தா

தமிழில் அறிமுகமாகி, தற்போது  தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப் படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. 

 

 

 

சமந்தா  தனது சமூக வலைத்தளங்களில்  பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் தனக்கு இருக்கும் உடல்நலப் பிரச்னை குறித்து  வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

 

அப்பதிவில் “'யசோதா' பட டிரெய்லருக்கு நீங்கள் கொடுத்த வரவேற்பு மகிழ்ச்சியாக இருந்தது. நீங்கள் காட்டும் இந்த அன்பும் உறவும்தான், வாழ்க்கை என் மீது வீசும் முடிவில்லாத சவால்களைச் சமாளிக்க எனக்கு வலிமை தருகிறது. சில மாதங்களுக்கு முன்பு எனக்கு Myositis எனப்படும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இதைப்பற்றி குணமடைந்த பிறகு உங்களிடம் பகிரலாம் என்று நினைத்திருந்தேன்.

 

ஆனால், குணமாவதற்கு நான் எதிர்பார்த்ததை விடச் சற்று அதிக நாள்கள் எடுத்துக்கொள்கிறது. பிரச்சினைகளை நாம் எப்போதும்  முழு சக்தியுடன் எதிர்த்து நின்றே ஆகவேண்டும் என்பதில்லை. இருக்கும் பிரச்சனையை ஏற்றுக்கொள்வதுதான் எனக்கு இன்னும் கடினமான ஒன்றாக இருக்கிறது. நான் விரைவில் பூரண குணமடைவேன் என்று மருத்துவர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் எனக்கு நல்ல நாள்களும் இருந்தன, மோசமான நாள்களும் இருந்தன. சில சமயம், இனி ஒரு நாள் கூட என்னால் தாங்க முடியாது என்றெல்லாம் கூட எண்ணியிருக்கிறேன். ஆனால் எப்படியோ அந்த எண்ணங்கள் கடந்துவிடுகின்றன. இப்போது நான் குணமடையும் நாளை நெருங்கிவிட்டேன் என்று நினைக்கிறேன். நான் உங்களை நேசிக்கிறேன்... இதுவும் கடந்து போகும்!" எனப் பதிவிட்டுள்ளார்