ரஜினிகாந்த் நடித்த கெஸ்ட் ரோல் திரைப்படங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அவை என்னவென அறிய இங்கே படியுங்கள்.

ரஜினிகாந்த் நடித்த கெஸ்ட் ரோல் திரைப்படங்கள்!

நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நிறைய படங்களில் கதாநாயகனாக நடித்திருப்பது நமக்கு தெரியும். ஆனால் அவர் சிறப்பு தோற்றத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். அத்தகைய படங்களின் லிஸ்ட் இங்கே தந்துள்ளோம். பார்த்து என்ஜாய் பண்ணுங்க.

வள்ளி:

வள்ளி படத்திற்கு திரைக்கதை எழுதியது ரஜினிகாந்த் தான். இப்படத்தில் ரஜினி வீரையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். படத்தில் காதலனால் ஏமாற்றப்பட்ட கதாநாயகி பிரியா ராமனுக்கு உதவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து இருப்பார்.

அன்புள்ள ரஜினிகாந்த்:

இந்த படம் 1984 ஆம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்தில் ரஜினி , சூப்பர் ஸ்டார் ரஜினியாகவே நடித்திருப்பார். இது மரண நோயால் பாதிக்கப்பட்ட ஒரு அனாதை சிறுமியை (மீனா) பற்றிய கதை. இந்த சிறுமிக்கு ரஜினிகாந்துடன் எப்படி நட்பு ஏற்படுகிறது என்பதையும், இச்சிறுமி இறக்கும் வரை அவளை சிரிக்க வைக்க ரஜினிகாந்த் செய்யும் முயற்சியையும் சுற்றி கதை நகர்கிறது.

குசேலன் :

கதா பறயும்போல் என்ற மலையாள படத்தின் ரீமேக் தான் இந்த குசேலன். படத்தில் பசுபதி தான் கதாநாயகன். படத்தில் இவர் முடிதிருத்தும் பார்பராக நடித்திருப்பார். படத்திலும் ரஜினிகாந்த் ஒரு சூப்பர் ஸ்டாராக நடித்திருப்பார். படத்தில் பசுபதியும், ரஜினியும் பால்ய வயதில் நண்பர்களாக இருக்கிறார்கள். பின் சூழ்நிலையால் பிரிந்து விடுகிறார்கள். இந்நிலையில் ஒரு படப்பிடிப்பிற்காக ரஜினி, பசுபதியின் கிராமத்திற்கு வரும்போது என்ன நடக்கிறது என்பது தான் கதை.

லால் சலாம்:

ரஜினிகாந்த், தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் புதிய படத்தில் 'சிறப்பு தோற்றத்தில்' நடிக்க இருக்கிறார். படத்தின் கதாநாயகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் இதைப்பற்றி என்ன கூறியுள்ளார் என்றால் "இது ஒரு முக்கியமான கதாபாத்திரம், ரஜினி சாரை நிச்சயமாக நிறைய நேரம் ஸ்க்ரீனில் பார்க்கலாம்".