காலை உணவு சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்வதால் டைப் 2 நீரிழிவு அபாயம் குறைகிறது 

ஊட்டச்சத்து நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் பெற்றோர்கள் பல ஆண்டுகளாக ஊட்டச்சத்து மிக்க காலை உணவு ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு முக்கியம் என்பதை பரிந்துரைத்து வந்தாலும், இன்றும் பலர் தங்கள் காலை உணவை புறக்கணித்து வருகின்றனர்.

காலை உணவு சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்வதால் டைப் 2 நீரிழிவு அபாயம் குறைகிறது 

ஒரு வாரத்திற்கு ஒரு முறை காலை உணவைத் தவிர்ப்பதால் நோய் வளர்ச்சிக்கான அறிகுறிகள் இருப்பதாக புதிய தகவல் தெரிவிக்கிறது.

பழங்கள், முட்டை, பிரட் போன்ற ஆரோக்கியமான காலை உணவு டைப் 2 நீரிழிவு பாதிப்பைப் போக்குகிறது.

அமெரிக்கர்கள் பத்து பேரில் ஒருவர் காலை உணவைத் தவிர்ப்பதாக NPD ஆய்வறிக்கை கூறுகிறது. 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு தி அமெரிக்கன் சொசைட்டி ஃபார் ந்யுட்ரிசியனிலிருந்து  தி ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியானது, காலை உணவு உடலுக்கு  நல்லது என்பதை கண்டுபிடிப்பதற்கான தரவுகளுக்கு பங்களிக்கிறது. இந்த ஆய்வில் ஒரு வாரத்திற்கு ஒருமுறை காலை உணவை தவிர்ப்பதால் டைப் 2 நீரிழிவு உண்டாவதற்கான வாய்ப்பு 6% அதிகரிப்பதாக கூறுகிறது. அதுவே, ஒரு வாரத்திற்கு நான்கு முதல் ஐந்து முறை தவிர்ப்பதால் இந்த வாய்ப்பு விகிதம் 55% ஆகிறது.

டுஸ்ஸெல்டார்ஸில் உள்ள ஜெர்மன் நீரிழிவு-மையத்தில் ஜூனியர் ஆராய்ச்சி குழுவின் முறையான விமர்சனக் குழு தலைவராக இருந்த சப்ரினா ஷெலெசின்கர், எம்.எஸ்.சி., பி.எச்.டி மற்றும் அவரது சக ஊழியர்கள் 90,000 க்கும் அதிகமான தனிநபர்களைக் குறிக்கும் ஆறு வெவ்வேறு ஆராய்ச்சி  ஆய்வாளர்களிடமிருந்து சுகாதார தகவலை ஆய்வு செய்தனர். இவர்களில் 4,935 பேர் நீரிழிவு நோயைக் கொண்டிருந்தனர்.  .

ஒரு வாரத்தில் ஒவ்வொரு நாள் காலை உணவைத் தவிர்ப்பதால் நீரிழிவிற்கான அபாயம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தொடர்ந்து 5 நாட்கள் காலை உணவித் தவிர்ப்பதால் நீரிழிவு அபாயம் அதிகரிப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். காலை உணவை தவிர்க்காதவர்களை விட காலை உணவைத் தவிர்ப்பவர்களுக்கு நீரிழிவு உண்டாகும் அபாயம் 32% வரை இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஒரு நபரின் எடையைப் பொருட்படுத்தாமல் நீரிழிவிற்கான அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்:

ஒரு நபருக்கு நீரிழிவு ஏற்பட, உடல் எடையும் ஒரு காரணம் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் காலை உணவை தவிர்ப்பவர்கள் மத்தியில் உடல் எடை என்பது ஒரு பகுதி காரணம் மட்டுமே. உடல் எடை மற்றும் உயரத்தின் அடிப்படையில் உடலின் கொழுப்பை கணக்கிடுவது BMI என்னும் உடல் குறியீட்டு எண்ணாகும். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் படி, இந்த BMI 30 க்கு மேல் இருந்தால் உடல் பருமன்  என்று கணக்கிடப்படுகிறது.

"BMI கணக்கில் எடுத்துக் கொண்ட பின்னரும் ,  காலை உணவை தவிர்ப்பது, நீரிழிவு நோய்க்கான அதிகப்படியான ஆபத்தோடு தொடர்புடையதாக இருந்தது "என்று டாக்டர் ஷெலெசிங்கர் பத்திரிகை வெளியீட்டில் கூறினார். 

உடல் பருமன் என்பது டைப் 2 நீரிழிவிற்கான ஒரு நன்கு அறியப்பட்ட காரணி என்பதை அவரும் அவரது சக ஊழியர்களும் ஒப்புக் கொள்கின்றனர். சாதாரண எடை உள்ளவர்களை விட, உடல் பருமன் உள்ளவர்கள் பெரும்பாலும் காலை உணவைத் தவிர்க்கின்றனர் . மேலும் உடல் எடை எதுவாக இருந்தாலும் முக்கியமாக காலை உணவைப் புறக்கணிப்பவர்களுக்கு நீரிழிவு உண்டாகும் அபாயம் அதிகரிப்பதாக இவர்களின் ஆய்வு குறிப்பிடுகிறது.

இது மிகவும் முக்கியம். ஏனென்றால், காலை உணவைத் தவிர்ப்பவர்கள் உடல் பருமன் அதிகம் உள்ளவர்களாக இருப்பதாக பலரும் நினைப்பதால் , டைப் 2 நீரிழிவு அபாயத்திற்கான காரணம் அதிகரிப்பதாக பாஸ்டனில் உள்ள ஹார்வர்ட் மருத்துவ  பள்ளியின் ஜோஸ்லின் நீரிழிவு மையம் உடல் பருமன் மருத்துவ திட்டத்தின் மருத்துவ இயக்குனர் ஒசாமா ஹாடி கூறுகிறார். ஆனால் இவர் இந்த ஆய்வில் ஈடுபடவில்லை. உடல் எடையை சரி செய்த பின்னரும் நீரிழிவு அபாயத்திற்கான தொடர்பு இன்னமும் இருப்பதாக இந்த ஆரய்ச்சி கூறுகிறது 

காலை உணவை எடுத்துக் கொள்ளாதது , மற்ற ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களுடன் தொடர்பு உடையதாக இருக்கலாம்: 

காலை உணவுக் தவிர்ப்பவர்களுக்கான உயர்த்தப்பட்ட நீரிழிவு ஆபத்துகள் மற்ற ஆரோக்கியமற்ற வாழ்க்கை நடத்தைகள் சம்பந்தப்பட்டவையாக இருக்கலாம் என்று ஆய்வு ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். காலை உணவைப் புறக்கணிப்பவர்கள் , பெரும்பாலும் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவராக, உடற்பயிற்சி செய்யாதவராக , மது அருந்துபவராக இருக்கலாம் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. 

காலை உணவைத் தவிர்ப்பவர்கள், ஒரு நாளின் முடிவில் அதிக கலோரிகள் கொண்ட உணவை எடுத்துக் கொள்வதாகவும் பல ஆய்வுகள் நிரூபணம் செய்துள்ளதாக சியாட்டிலிலுள்ள ஸ்வீடிஷ் மருத்துவ மையத்தில் உள்ள ஒரு நீரிழிவு கல்வியாளர் ஜேன் ரஸ்ட்ரோம் கூறுகிறார். கலோரிகள் அதிகம் உள்ள உணவால் உடல் எடை அதிகரிக்கிறது, உடல் எடை அதிகரிப்பால் டைப் 2 நீரிழிவிற்கான அபாயம் அதிகரிக்கிறது என்று அமெரிக்க நீரிழிவு அசோசியஷன் தெரிவிக்கிறது.

நீரிழிவு நோயாளிகள் ஒரு நாளில் மூன்று முதல் ஐந்து முறை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் உணவு உட்கொள்ள ரஸ்ட்ரோம் பரிந்துரைக்கிறார். தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் உணவு உட்கொள்வதால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

ஒரு ஆரோக்கியமான காலை உணவை எடுத்துக் கொள்வதால் மேலும் பல கூடுதல் நன்மைகள் கிடைப்பதாக பல அறிவியல்  ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. நவம்பர் 2012 இல் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் லைஃப்ஸ்டைல் மெடிசனில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் காலை உணவை சாப்பிடும் இளைஞர்கள் தினமும் ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுப்பதாகவும் , தங்கள் உடல் எடையை சிறப்பாக நிர்வகிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்கான நீரிழிவு அபாயம் குறைவதாக கூறப்படுகிறது. அதுவே காலை உணவைத் தவிர்ப்பவர்களுக்கு நேரெதிர் பலன்கள் உண்டாவதாக கூறப்படுகிறது. மேலும் , காலை உணவை எடுத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்வதால் இதய நோய், இரத்த குழாய் நோய் மற்றும் வாதம் போன்றவை உண்டாகும் அபாயமும் குறைவதாக அமெரிக்கன் ஹார்ட் அசோசியஷன் கூறுகிறது.

மறுபுறம், உடல் பருமனை தவிர்ப்பது, அவ்வப்போது உண்ணாவிரதம் இருப்பது ஒரு பகுதியாக சுகாதார நலன்களைக் கொண்டிருக்கும் என்று மே 10, 2015 இல் சர்வதேச உடல் பருமன் பற்றிய பத்திரிகையில்  ஒரு கட்டுரையில் வெளியிடப்பட்ட சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

"பல நோயாளிகள் இந்த வகை உண்ணாவிரதத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள், மேலும் குளுக்கோஸ் கட்டுப்பாடு மற்றும் சிறந்த எடை இழப்பு இருப்பதைக் கண்டறிந்துள்ளனர், ஆனால் இது சரியான உணவு, பொருத்தமான கலோரி உட்கொள்ளல் மற்றும் குறைந்த கார்போ உட்கொள்ளல் ஆகியவற்றுடன் இணைந்துள்ளது" என்று ரிஸ்ட்ரோம் கூறுகிறார். எவ்வாறாயினும், நீரிழிவு நோயாளர்களுக்கு அல்லது வேறு விதமான நோயாளிகளிக்கு  , என்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி இந்த உண்ணா விரதத்தில் மேலும் பல ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

நீரிழிவு நோயாளிகளுக்கு தேவையான ஆரோக்கியமான காலை உணவு என்ன ?

உயர்ந்த அளவு பதப்படுத்தப்பட்ட இறைச்சி, குறைந்த அளவு முழு தானியங்கள் ஆகியவை கொண்ட உணவு  நீரிழிவு ஆபத்துடன் தொடர்புடையதாக  ஷெலெசின்கர் மற்றும் சக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு ஆரோக்கியமான காலை உணவு பரிந்துரைக்க வரும்போது, ரிஸ்ட்ரோம் மிகவும் மிதமான கார்போ அளவு கொண்ட நலிவான புரதமும் காய்கறிகளும், முட்டை மற்றும் முழு தானிய சிற்றுண்டி , யோகர்ட் மற்றும் ப்ளூபெர்ரி, நறுக்கப்பட்ட கொட்டைகள், சியா விதைகள் ஆகியவற்றை பரிந்துரைக்கிறார். நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளக் கூடாத உணவுகள், முழு தானியம் அல்லாத சுத்தீகரிக்கப்பட்ட தானியம், பால், ஜூஸ், வெள்ளை பிரட் ஆகியவை ஆகும். அதாவது, அதிகம் பதப்படுத்தப்பட்ட , உயர் கார்போ அளவு கொண்ட காலை உணவு  உணவுக்கு பின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதாக இவர்கள் கூறுகின்றனர். 

இந்த ஆய்வுகள்  பெரிய அளவிலான மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தாலும், அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து ஆறு விசாரணைகளை மட்டுமே உள்ளடக்கியது  என்று டாக்டர் ஹாம்டி கூறுகிறார். காலப்போக்கில் இந்த அறிகுறிகள் மக்களுடனான நேரடி விசாரணையில் இறங்காமல் ஒரு பகுப்பாய்வாக வரையறுக்கப்பட்டுள்ளது. "காலை உணவு சாப்பிடும் முறையை மட்டுமல்லாமல், நீரிழிவு ஆபத்துக்கான காலை உணவை அதிகரிப்பதற்கும் மேலதிக ஆய்வுகள் தேவைப்படுகின்றன," என்று ஷெலெசின்கர் கூறுகிறார். முடிவாக, வழக்கமான மற்றும் சம நிலையான ஒரு காலை உணவு நீரிழிவு உள்ளவர்களுக்கும் மற்றவர்களுக்கும் கட்டாயம் அவசியம் என்பது எல்லா தரப்பு மக்களுக்கும் பரிந்துரைக்கப்படும் செய்தியாகும்.