கார்பங்கில் (Carbuncle) என்னும் நச்சுப்பருவைப் போக்க எளிய வீட்டுத் தீர்வுகள் 

ஒரே இடத்தில் பல கொப்பளங்கள் உண்டாகும் நிலையை மருத்துவ மொழியில் கார்பங்கில் (carbuncle) என்று கூறுவர். இதனை நச்சுப்பரு என்றும் பல்வாய்ப்பிளவை என்றும் கூறுவர்.

கார்பங்கில் (Carbuncle) என்னும் நச்சுப்பருவைப் போக்க எளிய வீட்டுத் தீர்வுகள் 

ஒரு கொப்பளம் உடலின் எதாவது ஒரு பகுதியில் ஏற்பட்டாலே மிகவும் அவஸ்தையாக இருக்கும். நிறைய கொப்பளங்கள் ஒரே இடத்தில் தோன்றினால் கேட்கவே வேண்டாம். இத்தகைய கூட்டுக் கொப்பளம் உண்டாகக் காரணம் பக்டீரியா தொற்றுகள். பொதுவாக இந்த வகைக் கட்டிகள் பஸ் என்னும் சீழால் நிரப்பப்படுகின்றன.   

பெரும்பாலும் இந்த தொற்று ஸ்டாபிலோகோகோஸ்  அவுரிஸ் அல்லது ஸ்ட்ரெப்டோ கோகோஸ் ப்யோஜின் பக்டீரியாவால் உண்டாகின்றன. இது ஒரு ஆபத்தான தொற்று நோயாகும். உடலின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு எளிதில் பரவக்கூடியது. நீங்கள் தொடர்பு கொள்ளும் மற்ற நபர்களுக்கும் இந்த பாதிப்பு பரவலாம். இத்தகைய நச்சுபருக்கள் உண்டாவதற்கு சில பொதுவான காரணங்கள் உண்டு. 

மயிர்க்கால் அழற்சி, ஆடைகளால் தொடர்ந்த உராய்வு, ஷேவிங், முடி வெட்டுவது, மோசமான சுகாதாரம், மோசமான ஊட்டச்சத்து, பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம், கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு போன்றவை இந்த பாதிப்பு ஏற்பட சில முக்கிய காரணிகளாகும்.

ஒரே இடத்தில் பல கட்டிகள் தோன்றுவது உடலின் எந்தப் பகுதியிலும் ஏற்படலாம். பொதுவாக இந்த வகை கட்டிகள் முதுகு பகுதியில், கழுத்து முனை, தோள்பட்டை மற்றும் தொடைப் பகுதிகளில் உண்டாகும். கட்டிகள் மிகச் சிறியது முதல் பெரியது வரை அதன் அளவுகள் வேறுபடும்.
 
ஒற்றைக் கட்டியுடன் ஒப்பிடும்போது பல்வாய்க் பிளவைகள் ஆழ்ந்த மற்றும் தீவிர தொற்று பாதிப்பை உண்டாக்குகின்றன. சில நேரங்களில் தழும்பையும் உண்டாக்கி விடுகின்றன.

பல்வாய்ப் பிளவையின் பொதுவான அறிகுறிகள், அரிப்பு, சரும எரிச்சல், மற்றும் தொடும்போது வலி போன்றவை ஆகும். சில நேரங்களில் சோர்வு, காய்ச்சல், குளிர், உடல்வாட்டம் போன்றவையும் உண்டாகலாம்.
பல்வாய்ப் பிளவை என்பது வலி மிகுந்ததாக இருந்தாலும், உங்கள் நொயெதிர்ப்பு மண்டலம் சுறுசுறுப்பாக இயங்கி தொற்றை எதிர்த்து போராடுவதை  உணர்த்தும் அடையாளமாக இது விளங்குகிறது , இதற்கிடையில் சில எளிய சிறப்பான இயற்கைத் தீர்வுகளைப் பின்பற்றுவதன் மூலம் தொற்றை எதிர்த்துப் போராடி, உங்கள் சரும நிலையை மேம்படுத்த முடியும். 

குறிப்பு:
கொப்பளங்கள் மிகவும் வலியுடையதாக இருந்தால், அல்லது கொப்பளதிற்கு அருகில் பல கட்டிகள் தோன்றினால் , ஒரு வார சிகிச்சைக்கு பின்னரும் எந்த ஒரு முன்னேற்றமும் காணப்படவில்லை என்றால் மருத்துவரை அணுகுவது அவசியம்.

கார்பன்கில் என்னும் பல்வாய்ப் பிளவுகளைப் போக்குவதற்கான 10 எளிய தீர்வுகள் இதோ உங்களுக்காக..

சூடு ஒத்தடம் :
சூடு ஒத்தடம் மூலம் கட்டிகளில் வெப்பத்தைப் பரப்புவது கட்டிகளுக்கு சிறந்த ஒரு சிகிச்சையாகும் என்கிறது அமெரிக்கன் அகடாமி ஆப் டேர்மடோலோஜி. பாதிக்கப்பட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க இந்த வெப்பம் உதவுகிறது , இதனால் நிறைய வெள்ளை அணுக்கள் மற்றும் அன்டிபாடிகள் தொற்றை எதிர்த்து போராட முடிகிறது. இதனால் வலி குறைகிறது , இயற்கையான முறையில் கட்டி கரைகிறது.

வெதுவெதுப்பான நீரில் ஒரு துணியை ஊறவிட்டு, பின்பு அந்த துணியில் உள்ள அதிக நீரை பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
  1. பாதிக்கப்பட்ட இடத்தில் அந்த வெதுவெதுப்பான துணியை வைத்து 10-15நிமிடங்கள் அப்படியே விடவும்.
  2. சீழ் வடியும் வரை ஒரு நாள் முழுவதும் இந்த முறையைப் பின்பற்றவும்.
  3. பிறகு அந்த இடத்தை சுத்தம் செய்து, மருந்து தடவுவதால், மேலும் தொற்று ஏற்படாமல் தடுக்கலாம்.
  
ஒவ்வொரு முறை அந்தத் துணியைப் பயன்படுத்திய பின்னர், வெந்நீரால் அந்தத் துணியை அலசி உயர் வெப்ப நிலையில் காய வைத்து பின்பு மறுமுறை பயன்படுத்தவும்.

 
2. டீ ட்ரீ எண்ணெய் :
கார்பன்கில் கட்டிகளுக்கான மற்றொரு சிறந்த தீர்வு டீ ட்ரீ எண்ணெய். இது ஒரு இயற்கையான நோய்க்கிருமி எதிர்ப்பி ஆகும். மற்றும் வலிமையான பக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் கொண்டது. இதனால் பிரச்சனையின் வேர் காரணத்துடன் போராட முடிகிறது. மேலும் இது ஒரு அழற்சி எதிர்ப்பு முகவராக செயல்பட்டு , வலியைக் குறைக்க உதவுகிறது. மேலும் குணப்படுத்தும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது.

 . ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யுடன் 3 அல்லது நான்கு துளிகள் டீ ட்ரீ எண்ணெய் சேர்க்கவும். இந்த எண்ணெய்க் கலவையில் பஞ்சை நனைத்து, கட்டிகளில் ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை தடவவும். இதனைக் கழுவ வேண்டாம். தொற்று பாதிப்பு பூரணமாக குணமாகும்வரை இதனைச் செய்து வரவும்.

 . இந்த கட்டிகளைப் போக்க மற்றொரு வழி உள்ளது. 5 அல்லது 6 துளிகள் டீ ட்ரீ எண்ணெய்யை வெதுவெதுப்பான நீர் உள்ள ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும். இந்த நீரில் ஒரு துணியை முக்கி எடுக்கவும். இந்த துணியை பாதிக்கப்பட்ட இடத்தில் பத்து நிமிடங்கள் தொடர்ந்து வைக்கவும். ஒரு நாளில் பல முறை இதனைச் செய்து வரவும்.

3. மஞ்சள் :
ஒரு சிறிய கட்டியாக இருந்தாலும், கார்பங்கில் போல் பல கட்டிகள் ஒன்றாக இருந்தாலும், மஞ்சள் சிறந்த ஒரு தீர்வைத் தருகிறது. மஞ்சளின் மிக அதிக கிருமி எதிர்ப்பு தன்மை மற்றும் நச்சுக் கொள்ளும் தன்மை மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை ஆகிய குணங்கள் குணப்படுத்தும் செயல்பாடுகளில் உதவி புரிகின்றன. அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தருகின்றன, மேலும் தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உதவுகின்றன.

2014ம் ஆண்டு "பயோமெட் ரிசர்ச் இண்டர்நேஷனல்" வெளியிட்ட ஒரு ஆய்வு, மஞ்சளில் உள்ள முக்கிய கூறான குர்குமினின் பக்டீரியா எதிர்ப்பு தன்மை மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மைப் பற்றி அடிக்கோடிட்டு காட்டுகிறது, 

 . அரை ஸ்பூன் மஞ்சள் தூளுடன், ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். இந்த பேஸ்டை உடலின் வெளிப்புறம் தடவ பயன்படுத்தலாம். இந்த பேஸ்டை பாதிக்கப்பட்ட இடத்தில் சுத்தமாகக் கை கழுவிய பின் தடவவும். பிறகு ஒரு பாண்டேஜ் கொண்டு கட்டியை மூடவும். ஒவ்வொரு 12 மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த பேஸ்டை மறுமுறைத் தடவி, பாண்டேஜை மாற்றவும்.

  . ஒரு கிளாஸ் கொதிக்க வைத்த பாலில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் நன்றாகக் கொதிக்க விடவும். பிறகு இந்த பாலைப் பருகவும். ஒரு நாளில் இரண்டு முறை இதனைப் பின்பற்றவும்.
  
4. வேப்பிலை (இந்தியன் லிலாக்)
இந்தியன் லிலாக் என்று அறியப்படும் வேப்பிலை, ஒரு சிறந்த நோய்க்கிருமி எதிர்ப்பி மற்றும் இதற்கு பக்டீரியா எதிர்ப்பு பண்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு போன்றவை இருப்பதால், சரும பாதிப்புகளான கட்டிகள், கொப்பளங்கள் மற்றும் நச்சுப்பருக்களைப் போக்க அதன் சிகிச்சைக்கு உதவுகின்றன.
  
 . வேப்பிலையை ஒரு கைப்பிடி எடுத்து, கழுவி விழுதாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்க்கவும். இந்த விழுதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, அரை மணி நேரம் அப்படியே விடவும். பின்பு அந்த இடத்தைக் கழுவவும். ஒரு நாளில் சில முறை இதனைப் பின்பற்றலாம்.

 . வேப்பிலை எண்ணெயில் பஞ்சை நனைத்து, நச்சுப்பருக்கள் உள்ள இடத்தில் தடவலாம். பிறகு 10 நிமிடம் கழித்து கழுவி விடலாம். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை இதனைப் பின்பற்றலாம்.
 
5. ப்ளாக் டீ ஒத்தடம்:
கட்டிகள், கொப்பளங்கள் மற்றும் நச்சுப்பருக்களில் சூடான ஒத்தடம் தருவது நல்ல தீர்வைத் தரும் என்பது அனைவரும் அறிந்ததே. வழக்கமான நீரில் ஒத்தடம் தருவதற்கு மாற்றாக, நீங்கள் ப்ளாக் டீ பயன்படுத்தி ஒத்தடம் கொடுக்கலாம்.

ப்ளாக் டீயில் உள்ள டானின் என்னும் கூறு அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டது, இது வலியைக் குறைத்து, தொற்றை சுத்தம் செய்ய உதவுகிறது.

 . ப்ளாக் டீ பையை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடங்கள் ஊற விடவும்.
 . பிறகு நீரில் இருந்து எடுத்து சற்று நேரம் குளிர வைக்கவும்.
 . பிறகு அந்த டீ பையை பாதிக்கப்பட்ட இடத்தில் ஒத்தி எடுக்கவும்.
 . 10 நிமிடங்கள் தொடர்ந்து இந்த முறையை பின்பற்றலாம். 
 . விரைந்து தீர்வு பெற ஒரு நாளில் சில முறை தொடர்ந்து இதனைப் பின்பற்றலாம்.
 
6. ஆப்பிள் சிடர் வினிகர் :
ஆப்பிள் சிடர் வினிகர் இயற்கையாகவே கட்டுப்படுத்தும் பண்பு கொண்ட ஒரு பொருள். இது நச்சுப்பருக்களில் சிறப்பாக செயல் புரிந்து நல்ல தீர்வைத் தருகிறது.
மேலும் ஆப்பிள் சிடர் வினிகர், அற்புதமான அழற்சி எதிர்ப்பு பண்பு, பக்டீரியா எதிர்ப்பு பண்பு போன்றவற்றைக் கொண்டிருப்பதால், கொப்பளங்கள் மற்றும் கட்டிகளைப் போக்க உதவுகிறது. மேலும் சருமத்தின் pH அளவை சமநிலையில் பராமரித்து, தழும்பு ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

 . வெதுவெதுப்பான, வடிகட்டாத ஆப்பிள் சிடர் வினிகரில் ஒரு துணியை முக்கி எடுத்துக் கொள்ளவும். ஈரப்பதம் மிக்க இந்த துணியை பாதிக்கபட்ட இடத்தில் 10 நிமிடங்கள் தொடர்ந்து வைக்கவும். ஒரு நாளில் 3 அல்லது 4 முறை இதனைப் பின்பற்றவும்.

  . ஒரு ஸ்பூன் வடிகட்டாத ஆப்பிள் சிடர் வினிகரை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் சேர்த்து கலக்கவும். இந்த நீரை ஒரு நாளில் இரண்டு முறை பருகலாம்.
  

7. எப்சம் உப்பு:
கார்பங்கில் என்னும் இந்த வகைக் கட்டிகளுக்கு சிறந்த தீர்வைத் தர எப்சம் உப்பு உதவுகிறது. கொப்பளங்களில் பக்டீரியா நிரப்பப்பட்ட சீழை வெளியேற்றி கட்டி விரைவில் கரைய உதவுகிறது. அதிக உறிஞ்சும் தன்மைக் கொண்ட எப்சம் உப்பு, சருமத்தில் உள்ள நச்சுகளையும் அழுக்குகளையும் வெளியேற்ற உதவுகிறது.
  
 . இரண்டு கப் வெதுவெதுப்பான நீரில், 1/4 கப் எப்சம் உப்பு சேர்க்கவும்.
 . இந்த நீரில் ஒரு துணியை முக்கி எடுக்கவும்.
 . இந்த துணியை பாதிக்கப்பட்ட இடத்தில் வைக்கவும்.
 .  10-15 நிமிடங்கள் அப்படியே விடவும்.
 . கொப்பளம் கரையும் வரை தொடர்ந்து தினமும் சில முறை இந்த செயலைப் பின்பற்றவும்.
 
8. தைல எண்ணெய் :
டீ ட்ரீ எண்ணெய்ப் போல், தைல எண்ணெயும் சிறந்த பலன்களைத் தரக் கூடியது. இவற்றின் பக்டீரியா எதிர்ப்பு பண்பு, காரணமாக, கொப்பளங்களை உருவாக்கும் அன்டி பயோடிக் எதிர்ப்பு பக்டீரியாவுக்கு எதிராக சிறந்த  செயல்புரிகிறது. கொப்பளம் உண்டாகும் வேர் காரணத்தை அறிந்து அவற்றைப் போக்குவதோடு மட்டுமில்லாமல், விரைந்து குணமளிக்கவும் உதவுகிறது.

 . தைல எண்ணெய்யில் பஞ்சை நனைத்து நேரடியாக பாதிக்கப்பட்ட இடத்தில் தடவலாம். பிறகு 10 நிமிடம் கழித்து அந்த இடத்தைக் கழுவலாம். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை இதனைப் பின்பற்றலாம். 

  . தைல எண்ணெய் 3 அல்லது 4 துளிகள் எடுத்துக் கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் எல்ம் தூளைச் சேர்க்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்க்கவும். இந்த விழுதை பாதிக்கபட்ட இடத்தில் தடவவும். காய்ந்தவுடன், அந்த இடத்தைக் கழுவவும். ஒரு நாளில் இரண்டு முறை இதனைப் பின்பற்றலாம்.
  

 9. நல்ல சுகாதாரம்:

நல்ல சுகாதாரத்தைப் பேணுவதால் கார்பன்கில் உருவாகாமல் தடுக்க முடியும். குறிப்பாக, தற்போது இருக்கும் கொப்பளங்கள் மற்றும் கட்டிகளின் சிகிச்சையில் சீரான சுகாதாரம் பின்பற்றப் படவேண்டும். சரியான சுகாதாரத்தை நிர்வகிப்பதால், தொற்று பாதிப்பு பரவாமல் தடுக்கப்படுகிறது.

 . சாப்பிடுவதற்கு முன் மற்றும் கழிவறைக்கு சென்று வந்த பின்னும் கைகளை மென்மையான சோப் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.
 . சருமத்தில் கிருமிகள் தங்காமல் இருக்க தினமும் குளிக்க வேண்டும். குறிப்பாக உடற்பயிற்சி செய்த பிறகு மற்றும் நீச்சல் பயிற்சிக்கு பிறகு கட்டாயம் குளிக்க வேண்டும். 
 . தினமும் உங்கள் ஆடைகள், துண்டு மற்றும் போர்வைகளை சூடான நீரில் துவைக்க வேண்டும்.
 . ஆடைகளைக் காய வைக்கும்போது அதிக வெப்பத்தில் காய வைக்கவும்.
 . நீங்கள் அடிக்கடி தொடும் இடங்களான கதவு கைப்பிடி, டாய்லட் சீட், பாத் டப் போன்றவற்றை கிருமி நாசினி பயன்படுத்தி அடிக்கடி சுத்தம் செய்யவும்.
 . தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும் துண்டு, போர்வை, ரேசர், ஆடைகள், விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
 
10. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்:
கொப்பளங்களுக்கும் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கும் நேரடித் தொடர்பு இல்லாமல் இருந்தாலும், ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உண்ணவே பரிந்துரைக்கப்படுகிறது. 

உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக வைத்துக் கொள்வதால் உடல் கிருமிகளை எதிர்த்து போராட முடிகிறது.
 . ஆப்பிள், ஆரஞ்சு, பெர்ரி, பப்ளிமாசு, போன்ற அன்டி ஆக்சிடென்ட் அதிகம் உள்ள பழங்களை உட்கொள்வதால் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஆதரவு கிடைக்கிறது.
 . பசலைக் கீரை, பரட்டைக் கீரை , வெந்தயக் கீரை போன்ற கீரை வகைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
 . சீமைத் தினை , பார்லி, போன்ற முழு தானியங்களை உட்கொள்வதால் உங்கள் நோயெதிர்ப்பு தன்மை அதிகரிக்கலாம்.
 . பதப்படுத்தப்பட்ட மற்றும் சுத்தீகரிக்கபட்ட உணவுகளை உட்கொள்வதை முடிந்த வரையில் தவிர்க்கலாம்.