மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் கொண்டு பருக்களை போக்கலாம்

முகத்தில் பருக்கள் தோன்றுவதற்கான காரணத்தில் முக்கியமான ஒன்று ஹார்மோன்களின் சமச்சீரின்மை. அளவுக்கு அதிகமான எண்ணெய்யை சுரப்பிகள் சுரக்கும்போது, அவை சரும துளையில் அடைக்கப்பட்டு , அவற்றுள் பாக்டீரியாக்கள் ஊடுருவி பருக்களாக மாறுகின்றன.

மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் கொண்டு பருக்களை போக்கலாம்

பருக்கள் பல்வேறு வடிவத்தில் பல்வேறு ஆழத்தில் சருமத்தில் ஊடுருவி இருக்கின்றன. வெண்புள்ளிகள், கரும்புள்ளிகள், கட்டிகள், பருக்கள் எல்லாம் ஒரே இனத்தை சேர்ந்த பல்வேறு ஆழத்தை கொண்டு  இருக்க கூடியதாகும்.

இவற்றை முற்றிலும் ஒழிக்க பென்ஸ்யில் பெராக்ஸைடு , டெட்ராசைக்ளின் போன்ற மருந்துகள் பயன்படுத்த படுகின்றன. வைட்டமின் மற்றும் மினெரல் மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வதால் பருக்கள் குறைகின்றன.

வைட்டமின்  ஏ :
வைட்டமின் ஏ பயன்படுத்துவதால் பருக்கள் அதிக அளவில் குறைகின்றன. இயற்கையான வைட்டமின் ஏ பொருட்களை எடுத்துக் கொள்வது மாத்திரைகளை விட பலன் அதிகம் தரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மாத்திரைகள் நன்மையை விட தீமையை அதிகம் தரும் என்று கூறுகின்றனர். வைட்டமின்கள் கொழுப்பில் கரைய கூடியவை. ஆகையால் அதிக அளவு உடலுக்குள் செல்லும்போது நச்சுக்களை உண்டாக்கும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள், வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை கேட்பது நல்லது.

வைட்டமின் ஏவால் தயாரிக்கப்பட்ட மேற்பூச்சுகள் பருக்களை குறைக்கும் தன்மை உள்ளது. ரசாயனத்தின் மூலமாக வைட்டமினை ரெட்டினோயிடாக மாற்றி சருமத்தில் செலுத்தப்படுகிறது. இவைகள் பருக்களின் சிகிச்சைக்கு பெரிதும் உதவுகிறது. விரைவாக பருக்களை போக்கி, சருமத்தை ஆற்றி, புதுப்பிக்கிறது.

குறைவான பக்க விளைவுகள் கொண்ட சில ரெடினாய்டு ப்ராண்டுகள் இங்கே கொடுக்க பட்டுள்ளன. அவை, டஜோராக் , டிஃபரின் , அக்கியூடன் போன்றவையாகும்.  கர்ப்பிணி பெண்கள் ரெடினாய்டு எடுத்துக் கொள்வது தடுக்கப்படுகிறது. இதனை பயன்படுத்துவதால், சருமத்தின் இயற்கையான யுவி  கதிர் பாதுகாப்பு பலவீனமாகிறது.

ஜின்க்:
ஜின்க் பருக்களை போக்க உதவும் ஒரு மினெரல் ஆகும். இதனை மாத்திரையாகவோ அல்லது மேல் பூச்சாகவோ பயன்படுத்தலாம்.
சமீபத்திய ஆய்வு ஒன்று, ஜின்க் பயன்படுத்துவதால் உடலில் எண்ணெய் உற்பத்தி குறைவதாக கூறுகிறது. பாக்டீரியா தொற்று மற்றும் வீக்கத்தை எதிர்த்து உடலை பாதுகாப்பதாகவும் கூறப்படுகிறது. உடலுக்கு ஜின்க் குறைந்த அளவு தான் தேவைப்படுகிறது. பெரியவர்களுக்கு தினசரி ஜின்க் தேவை அளவு 8-11 மி கி ஆகும். 30மி கி அளவு பாதுகாப்பான முறையில் எடுக்கும்போது பருக்கள் குறைகின்றன என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ஜின்க் அளவு அதிகரிக்கும்போது தீய விளைவுகள் உடலில் ஏற்படலாம். ஜின்க் அதிகமாகும் போது காப்பர் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு.
ஜின்க் லோஷன் பயன்படுத்துவது பருக்களை குறைக்கும். 1.2 சதவிகிதம் ஜின்க் அசிடேட் 4 சதவிகிதம் எரித்ரோமைசின்  கொண்ட லோஷனை பயன்படுத்தும்போது பருக்கள் மறைந்து தெளிவான சருமம் பெறலாம்.

வேறு வழிகள்:
வைட்டமின் ஏ மற்றும் ஜின்க் பயன்பாட்டுடன் வைட்டமின் ஈ, பருக்களை போக்க பெரிதும் உதவுகிறது. வைட்டமின் ஈ  15 மி கி அளவு தினசரி எடுத்துக் கொள்ளும்போது நல்ல பலன்கள்  கிடைக்கிறது.
டீ  ட்ரீ எண்ணெய்யின் ஜெல் வடிவத்தை 45 நாட்கள் தொடர்ந்து முகத்தில் தடவினால் பருக்கள் மறையும் . பென்சாயில் பெராக்ஸைட் க்கு ஒரு சிறந்த மாற்று டீ  ட்ரீ எண்ணெய். இரண்டும் ஒரே அளவு தீர்வை தருகின்றன. ஆனால் பென்சோயிலை விட குறைத்த அளவு எரிச்சல், அரிப்பு , தோல் உரிதல் போன்றவை டீ  ட்ரீ எண்ணெய் பயன்படுத்துவதால் உண்டாகும்.