உங்கள் பிள்ளைகள் அறிவாளியாக இருக்க வேண்டுமா?

அடிப்படை உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமானது ஒமேகா 3 . 

உங்கள் பிள்ளைகள் அறிவாளியாக இருக்க வேண்டுமா?

மனிதர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக  குறிப்பிட்ட பரிசோதனைகளை அடிக்கடி மேற்கொள்வது நன்மை பயக்கும். அந்த வகையில் ஒமேகா 3 பரிசோதனையை வருடத்திற்கு ஒரு முறை செய்வது நமது உடல் நலத்தை பாதுகாக்க உதவும் ஒமேகா 3 யின் குறைபாடு பல வியாதிகளை தோற்றுவிக்கும். 

ஒமேகா 3 கொழுப்புகள் தாவரங்களில் இருந்தும் கிடைக்கப்படுகின்றன. கடல் வாழ் உயிரினங்களில் இருந்தும் கிடைக்க படுகின்றன. ALA , DHA மற்றும் EPA போன்றவை ஒமேகா 3 கொழுப்புகளாகும். இவற்றில் DHA மற்றும் EPA , சால்மன், சர்டைன் , அன்கோவி போன்ற மீன் வகைகள், மற்றும் கடல் உணவுகளில் அதிகம் கிடைக்க படுகின்றன. இவை இரண்டும்  உடலுக்கு தேவையான  அத்தியாவசிய கொழுப்புகளாக அறிய படுகிறது, அல்பா  லினோலெனிக்  அமிலம்(Alpha Linolenic Acid -AHA ) என்பது 18-கார்பன் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆகும். இது தாவர உணவாகிய ஆளி விதைகளில் அதிகமாக உள்ளன. ALA  ஒமேகா 3 கொழுப்புகள் பொதுவாக எங்கும் கிடைக்க கூடிய கொழுப்புகளாகும். இந்த AHA  வில் 1-3% தான் DHA  வாக மாற்ற முடியும். 

DHA என்பது ஒவ்வொரு அணுவிலும் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான கூறாகும் . கடல் வாழ் உயிரினங்களில் இருந்து கிடைக்கப்படும் DHA ஒமேகா 3 இதய ஆரோக்கியத்தை கீழ் கண்டவாறு பாதுகாக்கின்றன . 
* இரத்த அழுத்தத்தை  குறைத்து சீரற்ற இதய  துடிப்பை தடுக்கிறது.
* புதிய இரத்த நாளங்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றது .
* தமனிகளின் உள்சுவர்களில் கொழுப்புகள் படிவதை கட்டுப்படுத்தி ட்ரிகிளிசெரைடுகள் உருவாக்கத்தை குறைக்கிறது.
* இரத்த நாளங்களில் இரத்தம் உறைவதை தடுக்கிறது.
* வீக்கத்தை  குறைக்கிறது.
* செரிமானம், தசைகளின் செயலாற்றல், பார்வை திறன், கவனம் மற்றும் படிப்பு , அடிப்படை செல் பிரிவு போன்றவற்றில் முக்கிய பங்காற்றுகிறது.  
* செல்களுக்கு  இடையே தொடர்பை சீராக்க இவை உதவுகின்றன. 
* சூரிய ஓளியை சரியான முறைகள் உடல் உறிஞ்ச உதவுகின்றன.

ஒமேகா 3 இண்டெக்ஸ் டெஸ்ட் :
உடலில் உள்ள ஒமேகா 3 யின் அளவை பரிசோதிக்க ஒமேகா 3 இண்டெக்ஸ் டெஸ்ட் எடுத்து பார்க்க வேண்டும். பொதுவாக உடலில் ஒமேகா 3,  8% இருக்க வேண்டும். இதைவிட குறைவாக இருந்தால் ஒமேகா 3 யை அதிகரிக்க உண்டான வழிகளை மேற்கொண்டு மறுபடியும் பரிசோதனை செய்ய வேண்டும். ஒவ்வொரு டெஸ்டிற்கும் இடையில் 3 முதல் 6 மதம் இடைவெளி வேண்டும்.
ஒவ்வொருவரின் வாழ்க்கை முறை , உணவு முறை , உடல் செயல்பாடு இவற்றை பொறுத்து அவர்களின் ஒமேகா 3 தேவை மாறுபடும். ஓட்ட பந்தய வீரர்களுக்கு அதிக அளவு ஒமேகா 3 தேவைப்படும். அவர்கள் சராசரியான அளவு  ஒமேகா 3 உட்கொள்ளும்போது அவை தசை சவ்வுகளுக்கு செல்லாமல் , எரிபொருளாக மாறிவிடும். இதற்கு காரணம் அவர்களின் அதிகமான உடல் செயல்பாடு. 

தினசரி உட்கொள்ளல் :
ஒமேகா 3 தினசரி உட்கொள்ளல் அளவு  பெரியவர்களுக்கு , 200மிகி முதல் 500 மிகி அளவு என்று பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்பமாக  உள்ளவர்கள், தாய் பால் கொடுப்பவர்கள் குறிப்பிட்ட அளவை விட அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.

DHA  குறைபாடு:
குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு DHA பெரிதும் துணை புரிகிறது. ஒமேகா 3 குறையும் போது படிப்பதில் கோளாறு, டிஸ்லெக்சியா, ஆட்டிசம் , நடத்தை கோளாறு போன்றவை ஏற்படுகின்றன. கண் பார்வை வளர்ச்சிக்கு ஒமேகா 3 அதிகம் தேவை படுகிறது. குறை பிரசவத்தை தடுக்கிறது . DHA குறைபாட்டால் அறிவாற்றல் குறைகிறது. 

ஒமேகா 3 பரிசோதனை மூலம் உங்கள் உடலில் ஒமேகா 3ன் அளவை அறிந்து , அதனை மேம்படுத்தி அறிவாற்றலுடன் இருங்கள்.