ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் மற்றும் தழும்புகளை போக்குவதற்கான வழிகள்

பல்வேறு காரணங்களால் உண்டாகும் தழும்பை போக்க உதவும் சில தீர்வுகள் பற்றி இப்போது அறிந்து கொள்வோம்

ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் மற்றும் தழும்புகளை போக்குவதற்கான வழிகள்

பருக்களை கிள்ளுவதால் சருமத்தில் தழும்புகள் ஏற்படுகின்றன. இவை சில நேரங்களில் மறைந்தது போல் தோன்றும். சிலநாட்களில் சருமத்தில் இருக்கும் அழுக்குடன் சேர்ந்து கருப்பாக மாறக்கூடும். சருமத்தில் வளரும் திசுக்களால் இவை ஏற்படுகின்றன. கருவுற்றிருக்கும்போது அதிக எடை கூடுவதால், அதன் பிறகு எடை இழக்கும்போது தழும்புகள் தோன்றலாம். இதனை ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் என்று கூறுவர்.  ஹார்மோன் கோளாறுகளும் தழும்புகளின்  காரணமாகலாம்.

தழும்புகளை போக்குவதற்கு ஊட்டச்சத்துகள் முக்கியமாக தேவைப்படுகிறது. இன்றைய நவீன யுகத்தில் லேசர் சிகிச்சை மூலம் இதனை சரி செய்ய முடியும். ஆனால் இயற்கை தீர்வுகள் உடலில் இந்தத் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. 
1. உடலுக்கு புரத சத்துகளை அதிகரிக்கவும், தழும்புகளை போக்கவும் வைட்டமின் கே ஒரு அத்தியாவசியமான ஒரு ஊட்டச்சத்தாகும். பச்சை காய்கறிகளில் வைட்டமின் கே அதிகமாக உள்ளது. இலைகளை உடைய காய்கறிகள், ஸ்ப்ரிங் ஆனியன், முட்டைகோஸ், மூலிகைகள், வெள்ளரிக்காய் போன்றவை வைட்டமின் கே சத்து கொண்டவையாகும். 
2. கற்றாழை வைட்டமின் ஈ அதிகம் கொண்டது. இதனை நேரடியாகவோ அல்லது பேஸ்ட் போல் செய்தோ தழும்புகள் உள்ள  இடத்தில்  தடவுவதால் தழும்புகள் மறையும்.
3. கர்ப்பகாலத்தில் கொக்கோ பட்டர் எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த தழும்புகள் வராமல் தடுக்கலாம். 
4. லாவெண்டர் ஆயில் இன்று பல கடைகளில் கிடைக்கின்றன. ஒரு நாளில் 3 முறை இந்த எண்ணெய்யை தழும்புகளில் தடவுவதால் தழும்புகள் மறையும். இது ஒரு ஆன்டிசெப்டிக்  மற்றும் கிருமி  நாசினியாகும். இந்த ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் அல்லது தழும்புகளை நீக்க ரோஸ் வாட்டரும் பயன்படுத்தலாம்.
5. உடல் எடை அதிகரிப்பும் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் அல்லது தழும்புகள் ஏற்பட காரணமாய் உள்ளதால் , புரத சத்துக்களை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள் . எண்ணெய் மற்றும் சர்க்கரை பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள். இதன்மூலம் எடையும் குறையும் தழும்புகளும் தடுக்கப்படும். 
6. எலுமிச்சை பழத்தை பாதியாக நறுக்கி, அதில் சில துளி க்ளிசரின் ஊற்றி தழும்புகளில் தடவலாம். இதனை தினசரி 2 முறை செய்ய வேண்டும். இதனால் தழும்புகள் மற்றும் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் குறையும்.
7. சருமம் ஈரப்பதத்தோடு இருப்பதால் சருமத்தில் கோடுகள் ஏற்படாது. ஆகையால் கிளிசரின்  அல்லது வேறு மாய்ஸ்ச்சரைசேர் பயன்படுத்தி சருமத்தை ஈரபதத்தோடு வைத்திருங்கள்.
8. பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் சருமத்தில் மசாஜ் செய்வதால் தழும்புகள் விரைவாக  மறையும்.
மேலே குறிப்பிட்டுள்ள இயற்கை தீர்வுகளை மேற்கொண்டு தழும்புகள் மற்றும் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸில் இருந்து விடுதலை பெறுங்கள்.