கருவளையத்தை போக்குவது எப்படி?

கருவளையம் தோன்றுவதற்கான சில காரணங்கள் மற்றும் அவற்றைப் போக்குவதற்கான சில வழிகள்.

கருவளையத்தை போக்குவது எப்படி?

எல்லோருமே அழகாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். ஆனால் நமது அழகை சிதைக்கும் விதமாக உடலில் ஏதேனும் நிகழ்வுகள் தோன்றும். அவற்றுள் ஒன்று தான் கண்ணுக்கு கீழ் கருவளையம். அநேகமாக எல்லோரும் இதனை கடந்து வந்திருப்போம். இந்த கரு வளையம் தோன்றுவதற்கு சில காரணங்கள் உண்டு. அவை

* பாரம்பரியம் - நமது முன்னோர்களிடம் இருந்து வழி வழியாக தோன்றுவது 
* வயது முதிர்வு - சருமம் சுருங்கி விரியும் தன்மை இழக்கப்படுவது  .
* தொடர்ந்து அழுவது 
* கண்ணுக்கு கீழே நீர் தேங்கி இருப்பது.
* குறைந்த தூக்கம் 
* ஆரோக்கியமற்ற உணவுகள் 
* நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்வது.
கருவளையத்தால் எந்த ஒரு பாதிப்பு இல்லை . ஆனால் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது என்பதால் அதை போக்க சில வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தண்ணீர் :
தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். குளிர்ந்த நீர் உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். ஆகவே நிறைய தண்ணீர் குடியுங்கள்.பஞ்சை தண்ணீரில் நனைத்து 10 நிமிடங்கள் கண்களில் வைப்பதால்  கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

உருளை கிழங்கு:
உருளை கிழங்கில் வைட்டமின்களும் மினரல்களும் அதிகமாக உள்ளது. இவை சோர்வு மற்றும் சுருக்கத்தை போக்க உதவுகிறது. சருமத்திற்கு மென்மையை தருகிறது. 
* உருளை கிழங்கை வட்டமாக நறுக்கி உங்கள் கண்களில் வைத்து கொள்ளவும். 
* கண்களை மூடி 10 நிமிடங்கள் இருக்கவும்.
* பின்பு கண்களை குளிர்ந்த நீரால் கழுவவும்.
இதனை காலை மற்றும் மாலை வேளைகளில் செய்து வரும்போது ஒரு வாரத்தில் நல்ல பலனை உணர்வீர்கள்.

ரோஸ் வாட்டர்:
* ரோஸ் வாட்டருக்கு ஆன்டி ஆக்ஸிடென்ட் தன்மை உள்ளது. வைட்டமின் ஏ  மற்றும்  சி அதிகமாக உள்ளது. ஒப்பனை பொருட்கள் தயாரிப்பில் இது பயன்படுத்தப்படுகிறது. சருமத்திற்கு மிகவும் ஏற்றது. ரோஸ் வாட்டர் சருமத்திற்கு இயற்கையான பொலிவை தருகிறது.
* பஞ்சை எடுத்து ரோஸ் வாட்டரில் நனைத்து கண்களில் வைத்து கொள்ளவும்.
* கண்களை மூடி சிறிது நேரம் படுத்திருக்கவும்.
* 10 நிமிடம் கழித்து பஞ்சை எடுத்து விடவும்.

வெள்ளரிக்காய் சாறு:
கண் பகுதிக்கு வெள்ளரிக்காய் சாறு மிகவும் ஏற்ற ஒரு பொருள். இதன் புத்துணர்ச்சியூட்டும் தன்மை கண்களுக்கு தளர்ச்சியை நீக்கி புத்துணர்ச்சியை தருகிறது. இதனை கண்களில் தடவுவதால் மன அழுத்தம் கூட நீங்குகிறது.
* வெள்ளரிக்காயை  நறுக்கி சாறு எடுத்துக் கொள்ளவும்.
* பஞ்சை அந்த சாறில் நனைத்து கண்களில் வைக்கவும்.
* 15 நிமிடங்கள் கழித்து கண்களை கழுவவும்.

செவ்வந்தி பூ :
தளர்ச்சியை போக்குவதற்கு செவ்வந்தி பூ நல்ல ஒரு தீர்வு. மனச்சோர்வு மற்றும் அழுத்தத்தால் ஏற்படும் கருவளையத்திற்கு செவ்வந்தி பூ டீ நல்ல தீர்வை கொடுக்கும். இரவு உறங்க செல்வதற்கு முன் இந்த டீயை பருகலாம்.  செவ்வந்தி பூ டீ பையை தண்ணீரில் நனைத்து, கண்களில் வைக்கலாம். 10 நிமிடம் கழித்து அதனை எடுத்து விடலாம்.

பழங்கள் மற்றும் காய்கறிகள்:
நிறைய பழ வகைகளையும் காய்கறி வகைகளையும் எடுத்து கொள்ளலாம். இரவில் நீண்ட நேரம் கண் விழித்து படிப்பது, கம்ப்யூட்டரில் வேலை செய்வது போன்றவற்றை குறைப்பது நல்லது.