மன அழுத்த மேலாண்மை  நுட்பங்கள்

வாருங்கள்! இப்போது மன அழுத்த மேலாண்மை நுட்பங்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

மன அழுத்த மேலாண்மை  நுட்பங்கள்

நீங்கள் கடுமையான மன அழுத்தத்திலிருந்து அதிலிருந்து வெளிப்பட நினைத்தால் முதலில் உங்களுக்கு ஒரு சபாஷ்!  நீங்கள் அந்த பாதிப்பில் இருந்து வெளிவரக்கூடிய முக்கிய இடத்தில் இப்போது உள்ளீர்கள்.  மன அழுத்த மேலாண்மையை செயல்படுத்த இங்கு குறிப்பிட்டிருக்கும் குறிப்புகள் நீங்கள் அந்த செயல்பாட்டில் எதிர்கொள்ளும் சவால்களை சிறந்த முறையில் எதிர்கொள்ள வழிவகுக்கிறது. மேலும் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கிறது.  

 குறிப்பு 1:

மன அழுத்தத்திற்கான காரணத்தை அகற்றிவிடுங்கள்.  அதாவது மன அழுத்தத்திற்கான அடிப்படைக் காரணத்தை அறிந்து அதனை தனிமை படுத்துவதால்,  அதன் காரணமாக ஏற்படும் சிறுசிறு மனச்சோர்வுகள் தானாகவே அகற்றப்படும்.  எவ்வளவு விரைவாக நீங்கள் அந்த காரணத்தை கண்டு பிடிக்கிறீர்களோ அந்த அளவுக்கு விரைவாக நீங்கள் அந்த பாதிப்பில் இருந்து வெளியேற முடியும். 

 குறிப்பு 2:

உங்கள் பேட்டரியை ரீசார்ஜ் செய்யுங்கள்.  அதாவது  உங்களுடைய வழக்கமான வேலைகளிலிருந்து சற்று ஓய்வெடுக்க முயற்சியுங்கள். உங்கள்  குடும்பத்தினருடன் நேரம் செலவழியுங்கள்.  உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கை பின்பற்றுங்கள்.  இயந்திரம் கூட 24/7  வேலை செய்வதால்  அடுத்த சில நாட்களில் பழுது ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு.  ஆகவே உங்கள் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைக்க  கற்றுக்கொள்ளுங்கள்.

குறிப்பு 3:

தற்காலிக தீர்வு எந்த ஒரு பாதிப்பையும் முழுமையாக நீக்குவது இல்லை.  அதுபோலவே  நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் மற்றும் ஆற்றலைக் கொடுக்கும் பானங்கள் உங்கள் பாதிப்பை அல்லது பாதிப்பின் அறிகுறியே மறைத்து வைக்கும்.  ஆனால் உண்மையாகவே அவை உங்களை விட்டு நீங்குவது இல்லை, மாறாக இன்னும் மோசமான பாதிப்பை உண்டாக்கும்.  ஆகவே நிரந்தர தீர்வை கண்டறிய முயற்சியுங்கள். 

 குறிப்பு 4:

உங்கள் வேலை நேரத்தை பற்றி பகுப்பாய்வு செய்யுங்கள்.  மேலும் உங்கள் உடல்நலம் குறித்து அவ்வப்போது மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள்.  பாதிப்பிற்கான மருந்துகளை சரியான நிபுணரிடம் கேட்டறிந்து  அவற்றைப் பின்பற்றுங்கள்.