நாட்பட்ட வியாதிகளால் நீங்கள் பாதிக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்தும் உங்கள் பாதங்கள்

உங்கள் பாதங்கள் வெளிப்படுத்தும் 10 நுண்ணிய அறிகுறிகள்

நாட்பட்ட வியாதிகளால் நீங்கள் பாதிக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்தும் உங்கள் பாதங்கள்

உங்கள் பாதங்களின் தோற்றம் உங்களுக்கு பல்வேறு அறிகுறிகளை உணர்த்துகின்றன. நீரிழிவு, தைராய்டு,மற்றும் நாட்பட்ட வியாதிகளால் நீங்கள் பாதிக்கப்பட்டிருப்பதை உங்கள் பாதங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகின்றது. 

தைராய்டு:
தைராய்டு உறுப்பு சரியாக இயங்காதபோது, தைராய்டு ஹார்மோன்கள் உற்பத்தி குறைகிறது. இதனால் உடலில் வளர்சிதை மாற்றம், திசுக்களின் வளர்ச்சி, எலும்பு மற்றும் உணர்ச்சி அமைப்பு முன்னேற்றம் ஆகியவை பாதிக்கப்படுகிறது. தைராய்டு பிரச்சனைகள் சருமத்தில் அதிகபட்ச வறட்சியை உண்டாக்குகின்றன என்கிறார் இல்லினாய், நேப்பர்வில்லேயில் ஒரு கால் சிகிச்சை நிபுணர் மார்லின் ரீட், டி.பி.எம். பாதங்களில் வெடிப்பு அல்லது பிளவு ஏற்பட்டு, இரண்டு நாட்கள் க்ரீம் தடவியும் வறட்சி குறையாமல் இருந்தால், தைராய்டு பிரச்சனை உள்ளதா என்று மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. கால் விரல் நகங்கள் உடைவதும் கூட தைராய்டு பிரச்சனையின் அறிகுறியாகும்.

வழுக்கையான கால் விரல்: 
தமனி சார்ந்த நோயின் காரணமாக இந்த பாதிப்பு ஏற்படலாம். கால் விரல்களில் உள்ள முடி திடீரென்று மறையும்போது அது உடலில் இரத்த ஓட்ட குறைபாடு இருப்பதை உணர்த்துகிறது, அதாவது இரத்தக் குழாயில் நோய் இருப்பதால் இந்த நிலை உண்டாகிறது. இதனை PAD என்று கூறுவர். 

காலின் கீழ் பகுதி மற்றும் விரல்களில்  முடி வளர்ச்சி குறைவது, பர்பிள் நிறத்தில் கால் விரல்கள் மாறுவது, தோல் பகுதி மெலிதாகவும் தளதளவென்றும் மாறுவது போன்றவை PAD நோயின் அறிகுறிகள் ஆகும் என்று கூறுகிறார், நியுயார்க்கில்  உள்ள நார்த் ஷோர் யுனிவர்சிட்டி மருத்துவமனையிலுள்ள ஒரு மருத்துவ நிபுணர் சுசான் ஃபுக்ஸ் (DPM). அமெரிக்காவில் 8 மில்லியன் மக்கள் இந்த PAD நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். . இதன் பக்க விளைவுகள் தெளிவாகத் தோன்றாவிட்டாலும், பாதத்தில் துடிப்பை சோதித்து பார்ப்பதால் மற்றும் எக்ஸ்.பீம் மூலம் இதனை கண்டுபிடிக்கலாம். உடைந்த பாதங்களில் எக்ஸ் பீம் எடுக்கும்போது விநியோக பாதைகளில் ஒரு வித கடின தன்மையை உணர முடிகிறது, 99 சதவிகித நேரங்களில் இதே தன்மையை இதய நாளங்களிலும் காண முடிகிறது என்று கேரி ஏ. பிச்னி, DPM , மெர்சி மருத்துவ மையத்தில் கால் மற்றும் கணுக்கால் புனரமைப்பு நிறுவனம் ஆகியவற்றின் மருத்துவ  நிபுணர் கூறுகிறார்..

ஆறாத புண் :
நீரிழிவின் காரணமாக இந்த நிலை உண்டாகலாம். கட்டுப்படுத்த முடியாத க்ளுகோஸ் அளவின் காரணமாக நரம்புகள் பாதிக்கப்பட்டு, இரத்த ஓட்டம் மோசமடையலாம். இதனால் பாதங்கள் வரை இரத்த ஓட்டம் இல்லாமல் இருக்கலாம். ஒரு காயத்தில் இரத்த ஓட்டம் இல்லாத நேரத்தில் தோல் பகுதி மறுசீரமைக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறது. நீரிழிவால் பாதிக்கப்படும் எண்ணற்றவர்கள் முதல் கட்டமாக பாதத்தில் பாதிப்படைகின்றனர். என்று கூறுகிறார் ரீட். கால்  தடதடப்பு, பாதங்களில் சிவந்து போவது போன்றவை நீரிழிவின் வெவ்வேறு அறிகுறிகளாகும்.

விரிவாக்கப்பட்ட கல்விரல் :
நீங்கள் சாப்பிடும் சில உணவால் இந்த நிலை உண்டாகலாம். இறைச்சி மற்றும் மது அதிகமாக அருந்துபவரா நீங்கள்? இந்த பாதிப்பிற்கு காரணம் இவையாகவும் இருக்கலாம். இது கீல்வாதம் என்று கூறப்படும் மூட்டுகளின் அழற்சியாகவும் இருக்கலாம். சிவப்பு இறைச்சிகள், மற்றும் சில மதுபானம் ஆகியவற்றில் காணப்படும் ப்யுரின் என்னும் செயற்கை கலவை உடலில் யூரிக் தன்மை அளவை அதிகரிப்பதன் மூலம் தாக்குதலைத் தூண்டலாம். பொதுவாக இந்த யூரிக் அமிலம் மலம் வழியாக வெளியேற்றப்படுகிறது. ஆனால் இதன் உற்பத்தி அதிகரிப்பதால் அல்லது வெளியேற்றத்தில் பாதிப்பு உண்டாவதால் சிலருக்கு பாதிப்பு உண்டாகலாம். பல நேரங்களில் இந்த யூரிக் அமிலம் காலின் பெரு விரலில் படிகிறது என்று கலிபோர்னியாவில் உள்ள சாண்டா மோனிகாவின் ப்ரென்விஸ் செயின்ட் ஜான்ஸ் ஹெல்த் சென்டரில் பாப் பாரபீயன், டிபிஎம், கூறுகிறார்.

நோயாளி, கனமான , சிவந்த மற்றும் வீங்கிய மூட்டுகளுடன் காலையில் கண்விழிக்கக் கூடும். இது மிகவும் கடினமாக இருக்கும். மருத்துவர்கள் இந்த நிலையைக் குறைக்க மருந்து வழங்கலாம். மற்றும் ப்யுரின் குறைந்த உணவை பரிந்துரைக்கலாம்.

கால்விரல் நகங்களுக்கு அடியில் சிறிய சிவப்பு கோடுகள் :
இதய நோயின் காரணமாக இது உண்டாகலாம். கால்விரல் அல்லது விரல் நகங்களுக்கு கீழே உள்ள சிவப்பு கோடுகள் சிப் ஹேமாரேஜ்கள் என்று அறியப்படும் உடைந்த நரம்புகளால் உண்டாகலாம். நகங்களின் அடிபகுதியை இரத்த குழாய் தீங்கு விளைவிக்கும்போது இந்த பாதிப்பு உண்டாகிறது. இதயத்தில் எண்டோ கார்டிடிஸ் என்னும் பாதிப்பு இருப்பதை இந்த அறிகுறி உணர்த்துகிறது. இதயத்தில் பேஸ் மேக்கர் பொருத்தியவர்கள், இதய நோய் பாதிப்பு உள்ளவர்கள், கீமோ தெரபி எடுத்துக் கொள்கிறவர்கள், எச் ஐ வி நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோர் இந்த எண்டோ கார்டிடிஸ் நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த பாதிப்பை சரி செய்யாமல் விடும்போது உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. உங்கள் கால் விரல் அல்லது கை விரலில் சிப் ஹெமாரேஜ் காணப்பட்டு , நகங்களில் எந்த ஒரு பாதிப்பும் இருந்தால் இதயம் மற்றும் இரத்த ஓட்டத்தை பரிசோதிக்கவும்.

விரல் நுனிப் பெருக்கம்:
கால் மற்றும் கை விரல்களில் விரல் நுனிப் பெருக்கம் பாதிப்பு ஏற்படுவது , நுரையீரல் வளர்ச்சி, தொடர்ச்சியான நுரையீரல் பழுது, இரத்தக் குழாய் தொடர்பான நோய் அல்லது குடல் தொற்று ஆகியவற்றுடன் இணைந்தது. நுரையீரல் புற்று நோய் மற்றும் இரத்தக் குழாய் சார்ந்த நோய் போன்றவை வாஸ்குலர் எதிர்ப்பை குறைக்கிறது. இதனால் விரல் நகம் மற்றும் விரல் நுனியில் இரத்தம் அதிகமாகப் பாய்கிறது. இதனால் திசுக்கள் வீக்கமுற்று, விரல் நுனிகள் பெரிதாகின்றன. ஆகவே உங்கள் விரல்கள் சாதாரணமாக தோற்றமளிக்காமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதிக்கலாம்.

விரல் நகங்களில் குழிகள்:
சொரியாசிஸ் காரணமாக இந்த நிலை உண்டாகலாம். நகங்களில் சிறிய இடைவெளி, பள்ளம், வீரல் போன்றவை இருந்தால் அது நக சொரியாசிஸ் ஆகும். நக சொரோயாசிஸ் உள்ள பலருக்கும் சரும சொரியாசிஸ் பாதிப்பும் இணைந்திருக்கும். நக சொரியாசிஸ் பாதிக்கப்பட்ட நபர்களில் 5 % பேர் மட்டுமே சரும சொரியாசிஸ் பாதிப்பு இல்லாமல் இருக்கின்றனர். உங்களுக்கு சொரியாசிஸ் பாதிப்பு இல்லாமல் இருந்தாலும் நகத்தில் குழி ஏற்பட்டால் உடனடியாக அதனை கவனிக்க வேண்டும் என்று பிச்ன்னி கூறுகிறார். நகத்தில் வெள்ளை திட்டுக்கள் அல்லது கோடுகள் கூட உண்டாகலாம். சொரியாசிஸ் பாதிப்பை போக்குவதற்காக க்ரீம் அல்லது ஸ்டீராய்டு ஊசி பரிந்துரைக்கப்படலாம். 

ஸ்பூன் வடிவத்தில் நகம் :
இரத்த சோகை மற்றும் லூபஸ் என்னும் தோல் அழி நோய் காரணமாக இந்த நிலை ஏற்படலாம். ஸ்பூன் வடிவ கை மற்றும் கால் விரல்கள் பாதிப்பை கொயலோநிசியஸ் என்றும் கூறுவார். இந்த பாதிப்பில் அழுத்தமின்மை குறைபாடு, ஹீமோகுரோமாடோசிஸ் (இரும்புத் தாக்கம்) , ரேனாட் தொற்று (கை மற்றும் கால் விரல்களில் இரத்த ஓட்டத்தை பாதிக்கும் நோய்) மற்றும் லூபஸ் (உடலின் பாதுகாப்பு கட்டமைப்பான அணுக்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளைத் தாக்குகிறது. பொதுவாக பிறந்த குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு சில நேரம் ஏற்படலாம். ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த பாதிப்பு சரியாகி விடும். ஒரு வேளை  உங்கள் விரல்கள் ஸ்பூன் வடிவத்தில் மாறினால், உடனடியாக மருத்துவரிடம் சென்று ஒரு இரத்த பரிசோதனை செய்து காரணத்தை அறிந்து கொள்ளவும். 

கால் விரல் நகத்திற்கு கீழே ஒரு நேர் கோடு :
தோல் புற்று நோயாக இருக்கலாம். கால் விரலுக்கு அடியில் ஒரு மங்கலான கோடு இருந்தால், அது அக்றல் லேண்டிஜினஸ் மெலனோமா அல்லது மூடிய மெலனோமா என்ற ஒரு வகை சரும பாதிப்பாக இருக்கலாம். நகத்தின் அடியில் இருந்து ஒரு கருமையான கோடு வளர்ந்து நகத்தை முற்றிலும் அழித்து விடுகிறது என்று கூறுகிறார் பிச்ச்னி . இதனை தோல் சிகிச்சை நிபுணர் கண்டுபிடிக்க முடியும். பொதுவாக சுகாதார குறைபாடு கொண்ட நபர்களுக்கு இந்த பாதிப்பு உண்டாகலாம்.

உயர்ந்த வளைவு :                                

இது ஒரு நரம்பு பாதிப்பாக இருக்கலாம். கால் பாதம் அதிக உயரமான வளைவுகள் கொண்டிருந்தால் நரம்பு மண்டல பாதிப்பாக இருக்கலாம் என்று கூறுகிறார் பிச்ச்னி .  சில நேரம், கால் பாத தசைகள் வளைந்து இருந்தால் அதுவும் நரம்பு மண்டல பாதிப்பு நிலையான சார்கோட் மேரி டூத் (CMT) என்றும் கூறப்படுகிறது. நரம்பு விளிம்பை பாதிக்கும் பரவலான நரம்பு பாதிப்பை போல் CMT பாதிப்பும் நடையில் மாற்றத்தை உண்டாக்கும், பாதத்தை மரத்து போக வைக்கும் , காலின் கீழ் பகுதியில் தசைகள் இழப்பு ஏற்படும், பின்பு அடுத்த சில காலங்களில் உங்கள் உடலில் ஒப்பீட்டளவில் மாறுபாடு தோன்றும். அசாதாரணமான மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள். உங்கள் பாதங்களில் எந்த ஒரு மாற்றம் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதித்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார் ரீட் .