கர்ப்ப காலத்தில் இரத்த சோகையைப் போக்குவதற்கான சிறந்த தீர்வுகள் 

கர்ப்ப காலத்தில் இரத்த சோகையைப் போக்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

கர்ப்ப காலத்தில் இரத்த சோகையைப் போக்குவதற்கான சிறந்த தீர்வுகள் 

பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இரத்த சோகை உண்டாவதால் கருவில் உள்ள குழந்தையில் வளர்ச்சியில் பாதிப்பு உண்டாகிறது. ஆகவே இந்த சிக்கலைத் தவிர்க்க , இரத்த சோகைக்கான சிகிச்சையை எடுத்துக் கொள்வது அவசியமாகிறது. கர்ப்ப காலத்தில் இரத்த சோகையைத் தடுக்க உதவும் சில எளிய தீர்வுகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

இரத்தத்தில் இரும்பு சத்து குறைபாடு தோன்றுவதும் போதுமான அளவு வைட்டமின் பி12 இல்லாமல் இருப்பதும் இரத்த சோகை என்று அறியப்படுகிறது. கூடுதலாக, இது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் அளவுகளை உற்பத்தி செய்வதிலிருந்து தடுக்கும் பரம்பரை காரணிகளால் ஏற்படலாம். இரத்த சோகையைப் பொறுத்த வரையில் உடல் உறுப்புக்கள் மற்றும் திசுக்களுக்கு தேவையான ஆக்ஸிஜனுக்கு உடல்  கடினமாக உழைக்க வேண்டும், இது உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் சோர்வு ஆகியவற்றை விளைவிக்கிறது. இந்த பதிவில் நாம் கர்ப்ப காலத்தில் உண்டாகும் இரத்த சோகைக்கான தீர்வுகளைப் பற்றி காணலாம்.

கர்ப்ப காலத்தில் பாரம்பரிய காரணங்களால் பெண்களுக்கு இரத்த சோகை  உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. இரத்தத்தில் ஹீமோக்ளோபின் அளவு குறைவாக இருப்பது தான் இதன் அர்த்தம். ஆகவே இத்தகைய பாதிப்பு உங்கள் கர்ப்பகாலத்தில் பாதிப்பை உண்டாக்க முடியும்.

இரத்த நீர்ம மிகைப்பு அல்லது ஹீமோ டைல்யுஷன் என்ற நிலையின் காரணமாக, சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் ஹீமோக்ளோபின் அளவு கர்ப்ப காலத்தில் குறைய நேரலாம். இந்த செயல், கருவின் வளர்ச்சிக்கான ஊட்டச்சத்துகளாக மாற்றப்படும் கூறுகளை குறைக்கிறது.

ஆகவே கர்ப்பிணிகள் எந்த உணவை எடுத்துக் கொள்வதால் இத்தகைய சிக்கல்களைத் தடுக்க முடியும் என்பது பற்றி உணர்ந்து கொள்வது அவசியம். ஆகவே இரத்த சோகைக்கான சிகிச்சையை எடுத்துக் கொள்வதால் தாய் மற்றும் குழந்தை பாதுகாக்கப்படுகின்றனர்.

கர்ப்பகாலத்தில் கருவில் இருக்கும் குழந்தை இரத்தக் குழாய்களை நம்பியே வளர்கின்றனர். இரத்த சோகை இருக்கும்பட்சத்தில், குழந்தையின் தேவையை பூர்த்தி செய்ய தாயின் உடல் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. இது பூர்த்தி அடையாத நிலையால், கருவின் வளர்ச்சியில் பல்வேறு பாதிப்புகள் உண்டாகிறது. முன்கூட்டியே குழந்தை பிறப்பது, குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பது போன்றவை இதனால் உண்டாகும்  சில சிக்கல்களாகும்.

இரத்த சோகையைத் தடுக்க, கர்ப்ப காலத்தில் பெண்கள், வைட்டமின் பி மற்றும் இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கர்ப்பகாலத்தில் இரத்த சோகையைப் போக்குவதற்கான சில உணவுகள்:

  1. இறைச்சி 
  2. மீன்
  3. முட்டை
  4. தானியம்
  5. பச்சை காய்கறிகள்

போன்றவை இதற்கான உணவுகளாகும்.

கீழே குறிப்பிட்டுள்ள சில உணவு வகைகள் கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளின் உதாரணமாகும்.

கர்ப்ப காலத்தில் இரத்த சோகை உண்டானால் தினமும் மூன்று கப் பால் குடிக்கவும். வைட்டமின் ஏ, பி, சி போன்றவை பாலில் அதிகம் இருப்பதால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கிறது.

ஒரு நாளில் மூன்று அல்லது நான்கு கப் ஓட்ஸ் சாப்பிடவும். ஓட்ஸ் நார்ச்சத்தை வழங்குவதால் கருவில் உள்ள குழந்தை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வளர்கிறது.

கர்ப்ப காலத்தில் அடிக்கடி மீன் சாப்பிடலாம். (குறிப்பாக டூனா, சார்டின், சல்மான் போன்றவை) இவற்றில் வைட்டமின் பி சத்து அதிகம் இருப்பதால் உடலுக்கு நன்மை தருகிறது.

கார்பன் ஏற்றப்பட்ட பானங்களைப் பருகுவதைக் காட்டிலும் தக்காளி சாறு பருகலாம். இதில் வைட்டமின் ஈ மற்றும் சி சத்து அதிகமாக உள்ளது.

இரும்பு சத்தைப் பெறுவதற்கு க்ரானோலா சாப்பிடலாம். தானியங்கள் , பருப்பு வகைகள், நட்ஸ் போன்றவற்றை உட்கொள்வதால், உடலுக்கு போதிய ஊட்டச்சத்தும் நார்ச்சத்தும் கிடைக்கிறது.

கர்ப்பகாலத்தில் இரத்த சோகையைப் போக்க சில வகை ஸ்மூதி தயாரிப்புகள் :

1. ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக் பெர்ரி மற்றும் ஆப்பிள் ஜூஸ் ஸ்மூதி :

தேவையான பொருட்கள்:

  • 5 பெரிய ஸ்ட்ராபெர்ரி
  • 1 ஆப்பிள் 
  • 5 ப்ளாக் பெர்ரி
  • 1 கப் தண்ணீர் (20௦  மி லி )
  • 1 ஸ்பூன் தேன் (25கிராம்)

செய்முறை:
பழங்களைக் கழுவி, ஒரு கப் தண்ணீர் மற்றும் தேன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
இந்த கலவை முழுவதும் ஒரே நிறமாக மாறுவது வரை அரைக்கவும்
பிறகு அந்த சாற்றை வடிகட்டி பருகவும்.
ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு முறை இதனைப் பருகலாம்.

2. ஆப்பிள் மற்றும் கொய்யா ஜூஸ்:

தேவையான் பொருட்கள் :

  • 1 சிவப்பு ஆப்பிள்
  • 2 கொய்யா 
  • 1 கப் தண்ணீர் (20௦  மி லி )
  • 1 ஸ்பூன் தேன் (25கிராம்)

செய்முறை:
ஆப்பிள் மற்றும் கொய்யாவை கழுவி அரைத்துக் கொள்ளவும்.
இரண்டையும் விரும்பினால் தோலுடன் அரைத்துக் கொள்ளலாம்.
இந்த சாற்றில் தேன் மற்றும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். 
இந்த சாற்றை வடிகட்டி பருகவும்.
காலையில் மற்றும் மதிய உணவிற்கு பின் இந்த சாற்றை பருகலாம்.

3. கேரட், பீட்ரூட், மற்றும் வாட்டர் கிரேஸ் ஜூஸ் :

தேவையான பொருட்கள்:

  • 4 கேரட்
  • 2 கப் வாட்டர் கிரேஸ் 
  • 1 பீட்ரூட்

செய்முறை:
கேரட் மற்றும் பீட்ரூட்டின் தோலை சீவிக் கொள்ளவும்.
வாட்டர் கிரேஸ்சைக் கழுவி, மற்ற காய்கறிகளுடன் அரைத்துக் கொள்ளவும். 
இந்த சாற்றை வடிகட்டிப் பருகவும்.
இந்த சாற்றை தினமும் இரண்டு அல்லது மூன்று முறை பருகுவதால் உடலுக்கு இரும்பு சத்து கிடைக்கிறது.

மேலே கூறிய தீர்வுகளைப் பின்பற்றியும் இரத்த சோகைக்கான அறிகுறிகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை மேற்கொள்ளவும்.
 
மேலே கூறிய உணவுகளை தவறாமல் கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்வதால், இரத்த உற்பத்தி அதிகரித்து, உடல் செயல்பாடுகள் சீராகிறது . இதனால் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி மேம்படுகிறது.