இயற்கையான முறையில் உங்கள் சருமம் வெள்ளையாக மாற சில குறிப்புகள்

சரும நிறத்தில் வேறுபாடு உண்டாவதற்கு முக்கிய காரணம் , மரபணு அல்லது பாரம்பரியம் ஆகும். 

இயற்கையான முறையில் உங்கள் சருமம் வெள்ளையாக மாற சில குறிப்புகள்

சருமத்தில் மெலனின் இருப்பை பொறுத்தே மனித தோலின் நிறங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.  சருமம் கருப்பு முதல் இளஞ்சிவப்பு நிறம் வரை பொதுவாக வகை படுத்தப்படுகிறது. சருமத்திற்கு அடியில் இரத்த குழாய்கள் இருக்கும். 

நம்மால் சரும நிறத்தை மாற்ற இயலாது, ஆனால் அதன் அழகை இயற்கையான தீர்வுகள் கொண்டு பாதுகாக்க மற்றும் அதிகரிக்க முடியும்.

ரசாயன ப்ளீச் மூலம் சருமத்தை வெண்மையாக்க முயற்சிக்க வேண்டாம். இதனால் சருமம் சேதமடையலாம். இதற்கு மாற்றாக இந்த வீட்டுத் தீர்வுகளை முயற்சிக்கலாம். எலுமிச்சை, தயிர், தேன், வெள்ளரிக்காய், பச்சை உருளைக் கிழங்கு, தக்காளி போன்றவற்றிற்கு இயற்கையான ப்ளீச் போன்ற தன்மைகள் இருப்பதால் இவற்றைப் பயன்படுத்தலாம்.

வெண்மையாகவும் அழகாகவும் மாற சில எளிய வீட்டுக் குறிப்புகள் :
1. அரிசி மாவுடன் சிறிதளவு தயிர் சேர்த்து முகத்திற்கு தடவவும். பின்பு மென்மையாக சுழல் வடிவில் மசாஜ் செய்து, 5 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவவும்.

2. தயிர் ஒரு ஸ்பூன், சிறிதளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்தில் தடவவும். இதனால் சருமம் வெண்மையாகிறது.

3. உருளைக் கிழங்கு சாறு மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்தில் தடவவும். 

4. கொண்டைக்கடலை பொடியில் சிறிதளவு நீர் சேர்த்து கலந்து முகத்தில் தடவவும். 15-20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். இதனால் உங்கள் சருமம் வெண்மையாகிறது.

5. சிறிதளவு தயிர் மற்றும் தக்காளி சாற்றை கலந்து முகத்திற்கு தடவவும். பின்பு 20 நிமிடம் கழித்து குளிக்கவும்.

6. ஓட்சுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து முகத்திற்கு தடவி ஒரு ஸ்க்ரப் போல் பயன்படுத்தவும். இது ஒரு இயற்கை ஸ்க்ரப் என்பதால் இறந்த அணுக்கள் சருமத்தில் இருந்து விரைந்து வெளியேறி இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும். ஓட்சுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவுவதால் முகத்தின் அழகு இயற்கையாக அதிகரிக்கிறது.

7. சிறிதளவு பாலுடன் 3 துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும்.

8. எலுமிச்சை சாற்றுடன் தேன் சேர்த்து தயாரிக்கும் கலவை ஒரு இயற்கையான ப்ளீச். 

9. காய்ந்த எலுமிச்சை தோலை பொடியாக்கி சேமித்து வைத்துக் கொள்ளலாம். வீட்டில் தயாரிக்கும் பேஸ் பேக்குகளில் இந்த பொடியை சேர்ப்பதால் இயற்கை ப்ளீச்சின்  தன்மை கிடைக்கிறது.

10. பிரெஷ் பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்ளுதல், அதிகமான அளவு தண்ணீர் பருகுதல், கடுமையான வெயிலில் வெளியில் செல்லாமல் இருத்தல் போன்றவை சரும அழகை பாதுகாக்கும் முயற்சிகள் ஆகும்.

இறுதியாக, நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே உங்களை நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். கருமையாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம். கருப்பு ஒரு வித அழகுதான் என்பதை மறக்க வேண்டாம்.