உச்சந்தலையின் நச்சுகளைப் போக்க வழிமுறைகள்

உங்கள் தலைமுடியின் நச்சுகளைப் போக்குவதற்கான சில வழி முறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன

உச்சந்தலையின் நச்சுகளைப் போக்க  வழிமுறைகள்

தலையில் அரிப்பு, முதி உதிர்வு, அடர்த்தி குறைவது போன்றவை தலை முடி வளர்ச்சியின் பாதிப்பை உண்டாக்கும் பிரச்சனைகளாகும். சேதமடைந்த மற்றும் ஆரோக்கியமற்ற தலை முடியின் அறிகுறிகளாக இவைகள் பார்க்கப்படுகின்றன. ஆனால் உங்கள் தலை முடி வலிமையை அதிகரிக்க பல்வேறு வழிகள் உள்ளன. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுதல், கடினமான பாதிப்புகளைத் தரும் கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தாமல் இருத்தல், மற்றும் உச்சந்தலையில் உள்ள நச்சுகளைப் போக்குதல் போன்றவை கூந்தல் ஆரோக்கியமாக வளர சில வழிகள் ஆகும்.

தலை முடியின் நச்சுகளைப் போக்க என்ன செய்ய வேண்டும்?
உங்கள் தலைமுடியின் நச்சுகளைப் போக்குவதற்கான வழிகள் உங்களுக்கு தெரியவில்லையா? இங்கே அதற்கான சில வழி முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பின்பற்றி நச்சுகள், அழுக்கு மற்றும் கழிவுகளை தலைமுடியில் இருந்து அகற்றலாம்.

வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை சாறு:

தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய் (துருவியது) - 2 ஸ்பூன் 
எலுமிச்சை சாறு - 3 ஸ்பூன்

செய்முறை:
துருவிய வெள்ளரிக்காய் 2 ஸ்பூன் மற்றும் எலுமிச்சை சாறு 3 ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். 
இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் உச்சந்தலை மற்றும் தலை முடியில் முழுவதுமாக தடவவும்.
ஒரு மணி நேரம் இந்த கலவை உங்கள் தலையில் ஊறட்டும். 
பிறகு எப்போதும் போல் ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தி தலையை அலசவும்.
வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை சாறு ஆகிய இரண்டும் தலைமுடியில் உள்ள நச்சுகளை அகற்றும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் தக்காளி விழுது :

தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
தக்காளி விழுது - 1 ஸ்பூன் 

செய்முறை:
2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் அரைத்த தக்காளி விழுது ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.
இந்த விழுதை உங்கள் தலைமுடியில் தடவவும்.
45 நிமிடங்கள் இந்த விழுது உங்கள் தலையில் ஊறட்டும்.
பின்பு, குளிர்ந்த நீரால் தலையை அலசவும்.
இந்த மூலப்பொருட்களில் உள்ள அன்டி ஆக்சிடென்ட் தலை முடி மற்றும் உச்சந்தலையில் உள்ள நச்சுகளைப் போக்க உதவும்.


ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் தேன்:

தேவையான பொருட்கள்:
ஆப்பிள் சிடர் வினிகர் - 1 ஸ்பூன்
தேன் - 2 ஸ்பூன்

செய்முறை:
ஒரு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகருடன் 2 ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளவும்.
இந்த கலவையை உங்கள் உச்சந்தலை மற்றும் முடியில் தடவவும்.
ஒரு மணிநேரம் இந்த கலவை உங்கள் தலையில் இருக்கட்டும்.
பின்பு வழக்கமான ஷாம்பூ மூலம் உங்கள் தலையை அலசவும்.
ஆப்பிள் சிடர் வினிகரின் கட்டுப்படுத்தும் தன்மை மற்றும் தேனின் கிருமி நாசினி தன்மை ஆகியவை இணைந்து தலையில் உள்ள நச்சுகளைப் போக்கி அழுக்கை அகற்றி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.

மேலே கூறிய குறிப்புகளில் ஒன்றை பின்பற்றி தலைமுடியில் இருக்கும் நச்சுகளைப் போக்கி தலை முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். வலிமையான மற்றும் பொலிவான கூந்தல் விரைவில் உங்களுக்கு கிடைக்கும்.