தொண்டை வலிக்கு உப்பு நீர் 

தொண்டை கனத்து இருக்கும். எச்சில் கூட விழுங்க முடியாது. சாப்பாடு செல்லவே செல்லாது. தொண்டை வலியின் தொடர்ச்சியாக காதுக்கு கீழ் பகுதியும் வலிக்க ஆரம்பிக்கும். 

தொண்டை வலிக்கு உப்பு நீர் 

வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி… காதல் வந்தால் மட்டும் இல்லை, தொண்டை வலி வந்தாலும் தொண்டையில் இப்படிப்பட்ட உணர்வு தான் இருக்கும். இல்லையா?

இந்த வலியை குறைக்க எதாவது தீர்வு இருக்கிறதா?
இருக்கவே இருக்கிறது, சூடான உப்பு நீர். இதனை பாட்டி  வைத்தியம் என்று கூட சொல்ல முடியாது. முப்பாட்டி வைத்தியம் இல்லை இல்லை .. அதற்கும் முந்தய வைத்தியம். ஆனால் சரியான வைத்தியம். இப்போது இந்த உப்பு நீர் வைத்தியத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம். உப்பு தண்ணீர் கொண்டு என்ன செய்ய வேண்டும்? வாயில் ஊற்றி கொ

ப்பளிக்க வேண்டும். வறண்ட தொண்டையை சீராக்க உப்பு நீர் கொண்டு கொப்பளிப்பது நல்லது. 
 
இது ஒரு சிறிய வேதியல் செயல்பாடு; தண்ணீர் அடர்ந்த நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறுவது தான் இதன் செயல்பாடு. தொண்டையில் தொற்றால் பாதிக்கப்பட்ட திசுக்களில் இருந்து நீரை வெளியேற்றுவதற்கு தான் வெந்நீர் பயன்படுத்தப்படுகிறது. இதனால் தொண்டை வலி குணமாகிறது.
 


உப்பு நீரை கொண்டு எப்படி கொப்பளிப்பது?
 . வெதுவெதுப்பான நீரில் ½ ஸ்பூன் கல் உப்பு அல்லது தூள் உப்பு சேர்த்து கரையும் வரை கலக்கவும்.
 . தண்ணீர் மிகவும் சூடாக இருக்க கூடாது.
 . தலையை அண்ணார்ந்து பார்த்து வாயில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி கொள்ளவும்.
 . 30 நிமிடங்கள் அந்த நீரை கொண்டு வாயை கொப்பளிக்கவும்.
 . 1 கப் தண்ணீர் முழுக்க இதே முறையில் கொப்பளித்து துப்பவும்.
 . 4 மணி நேரத்திற்கு ஒரு முறை இதை தொடரவும்.
இதனால் உங்கள் தொண்டை மறுபடி பழைய நிலைக்கு மாறும்.

ஆஸ்மோசிஸ் வகை செயல்பாடு தான் இங்கே நடக்கிறது. உயர்ந்த அடர்த்தி இருக்கும் இடத்தில் இருந்து ஒரு கூறு குறைந்த அடர்த்தி இருக்கும் ஒரு இடத்திற்கு போவதுதான் ஆஸ்மோசிஸ் . தொண்டையில் பாக்டீரியாக்கள் ஊடுருவுவதால் தொன்டை வறட்சி ஏற்படுகிறது. உப்பு நீரின் அடர்த்தி அதிகம். இதில் இருக்கும் சோடியம் திசுக்களின் வழியே தொண்டைக்கு செல்கிறது. தொண்டையில் இருக்கும் நீர் குறைந்த அடர்த்தி உடையது. இந்த பாக்டீரியாவை அழிக்கும் ஒரு அரணாக சோடியம் செயல்படுகிறது. இந்த தொற்றால் அதிகரித்த திரவத்தை வெளியேற்றி பாக்டீரியாக்கள் தொண்டையில் தங்க முடியாமல் செய்கிறது. இதனால் வலி குறைகிறது. 

உப்பு நீர் கொண்டு கொப்பளிப்பதால் ஏற்படும் நன்மைகள்:
இந்த பயிற்சிக்கு அழற்சியை தடுக்கும் தன்மை உண்டு. இதன் நன்மைகளை இப்போது பார்ப்போம்.

இயற்கையான pH  அளவை நிர்வகிக்கிறது :
உப்பு நீர் , தொண்டையில் உள்ள பாக்டீரியாக்களை அழிப்பதன் மூலம் அமிலத்தின் அளவை சமன் படுத்தி ஆரோக்கியமான pH  அளவை நிர்வகிக்கிறது . சரியான pH  அளவை நிர்வகிப்பதன் மூலம் நல்ல பாக்டீரியாக்கள் மட்டும் தொண்டை மற்றும் வாயில் உற்பத்தியாகிறது. இதனால் தொற்றுகள் ஏற்படுவது குறைகிறது.

சளி தொந்தரவு குறைகிறது:
தொண்டை வலி மற்றும் அதிகமான சளி இருக்கும்போது இருமல் இருக்கும். இருமலோடு சளியும் சேர்த்து நம்மை சங்கடப்படுத்தும். உப்பு நீர் கொண்டு கொப்பளிக்கும்போது  சுவாச பாதையிலும், மூக்கு பகுதியிலும் இருக்கும் சளியை கரைத்து நீராக்கி வெளியிடுகிறது. உப்பு நீர் கொண்டு கொப்பளிப்பதால் தொண்டை வலி நீங்குவதோடு மட்டுமில்லாமல், இந்த வியாதிக்கு காரணமான பாக்டீரியா மற்றும் வைரஸ்களை வெளியாக்குகிறது.

வறண்ட இருமலை போக்குகிறது:
உப்பு நீருக்கு இருமலை அடக்கும் தன்மை உள்ளது. ஆகையால் வறண்ட இருமலை கட்டுப்படுத்துகிறது.

சுவாச பாதை தொற்றை நீக்குகிறது:
உப்பு சேர்க்கப்பட்ட வெந்நீரால் ஒரு நாளைக்கு 3 முறை கொப்பளிப்பது சுவாச பாதை தொற்றை 40% குறைக்கிறது என்று ஜப்பானில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவுகள் கூறுகின்றது.

டான்சிலை குறைக்கிறது:
தொண்டையின் பின்பக்கத்தில் திசுக்களின் புடைப்பை டான்சில் என்று கூறுவோம். இவற்றில் ஏற்படும் பாக்டீரியா தொற்று, தொண்டை வறட்சி, விழுங்குவதில் தொந்தரவு, போன்றவற்றை ஏற்படுத்தும். உப்பு நீர் கொண்டு கொப்பளிக்கும்போது  இந்த நிலைமை சீரடையும்.

நமது முன்னோர்களால் செய்து வரப்பட்ட இந்த வழக்கத்தில் எந்த ஒரு பக்க விளைவும் கிடையாது. ஆகையால் இந்த மருந்தை நமது சந்ததிக்கும் பரப்புவோம்.