ஓடி வந்து கண்ணீரைத் துடைக்கும் சாய்பாபா

துயருற்ற பக்தன் உண்மையான பக்தியுடன் சாய்பாபாவை அழைத்தால் அவர் ஓடி வந்து அவன் கண்ணீரை துடைப்பார்.

ஓடி வந்து கண்ணீரைத் துடைக்கும் சாய்பாபா

சாய்பாபா

தர்மங்கள் தாழும் போதும் அதர்மங்கள் ஓங்கும்போதும் இறைவன் பல ரூபங்களில் உலகில் அவதரித்து தர்மத்தை நிலை நாட்டி, மனிதர்களை காப்பாற்றுக்கிறார். இந்த அவதாரங்களில் சீரடி சாய்பாபா அவதாரமும் மிக முக்கியமானது. அனைவரும் அவரின் அருள் பெற வேண்டும் என்பதற்காக அவரின் மகிமையை பற்றி நான் படித்ததையும், எனக்கு தெரிந்தவற்றையும் இக்கட்டுரையின் மூலம் பகிர்கிறேன் .

சீரடி எப்படி புனித தளமானது:

சீரடி தளத்தில் வேப்ப மரத்தடியில் 16

வயது பாலகனாக சாய்பாபா தோன்றினார். எளியோரை இரட்சிப்பதற்காக கருணை கடலான சாய்பாபா இந்த சுக துக்கம் நிறைந்த உலகில் அவதரித்தார். சாயி பாபாவை  யாராவது இந்து என்றால் திருக்குரான் மந்திரங்களை ஓதி காண்பித்தார். அவரை யாராவது முஸ்லிம் என்றால் சமஸ்கிருத சிவ தோத்திரங்களை சொல்லி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். சாய்பாபா ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையின் சின்னமாக திகழ்கிறார். சீரடி சாய்பாபாவின் வரவால் உலகமே புனிதமானது.

போதனைகள்:

எல்லோருக்கும் இறைவன் ஒருவனே என்ற  ஆழ்ந்த உண்மை எளிதாக புரிய வைக்க  சாய்பாபா சிலருக்கு சிவன் ரூபத்திலும், சிலருக்கு விஷ்ணு ரூபத்திலும் காட்சி கொடுத்தார். 

நடந்ததை மறந்துவிடு இனிவரும் வாழ்வை நல்லபடியாக வாழ வேண்டும். நமது உள்ளுணர்வான அந்த ஆத்மாவை நினைத்து ஈஸ்வரனையே தியானம் செய்ய வேண்டும். கடவுளை வெளியே எங்கும் தேடாமல் அவர் நமக்குள்ளே இருக்கிறார் என்பதை உணர வேண்டும். அப்போது அவனுடைய   துன்பங்கள் தொலைந்து  தடைகள் நீங்கி, சுகங்கள் நிரம்பியவன் ஆகிறான். இது போன்ற போதனைகளை மக்களுக்கு போதித்தார். 

சாய்பாபாவின் அருள்:

  1. எவன் ஒருவன் பக்தியும் பொறுமையும் கொண்டு அவரை வழிபடுகிறானோ அவனுக்கு நிச்சயம் சாய் பாபா உதவுகிறார்.
  2. யாரெல்லாம் தூய எண்ணத்துடன் பாபாவை பிரார்த்திக்கிறார்களோ, அவர்களின் விருப்பங்களை சாய் பாபா பூர்த்தி செய்வார்.
  3. அவரை எந்த ரூபத்தில் பக்தன் பார்க்க விரும்புகிறானோ அதே ரூப ரூபத்தில் அவனுக்கு காட்சி அளிப்பார்.
  4. எவன் ஒருவன் அவரை அடைக்கலம் அடைகிறாரோ, அவன் பாரத்தை அவரே ஏற்பார்.
  5. எவன் ஒருவன்  சாய் நாமத்தை ஜெபிக்கிறானோ, அவன் பாவங்களில் இருந்து விடுபடுவான்.                           

சீரடி சாய்பாபா பற்றி தெரியாதவர் யாரும் உண்டா? சாயி பக்தியின் சக்தியை அறிந்த சில பக்தர்கள் அவரை பரமேஸ்வரன் அவதாரம் என்று கூறுகின்றனர். அவர் லீலைகளை கண்டு களித்தனர் யாரால் சொல்ல முடியும் சாயி இந்த உலகில் இப்போது இல்லை என்று அப்படி சொல்பவன் அறிய மூடனின்றி வேறு யாராக இருக்க முடியும். அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார். துயருற்ற பக்தன் உண்மையான பக்தியுடன் அவரை அழைத்தால் ஓடி வந்து அவன் கண்ணீரை துடைக்கிறார். சாய்பாபா பூத உடலில் இருந்த போது எத்தனையோ அற்புதங்கள் நிகழ்த்தினார். இன்றும் தூய மனதோடு அவரை பூஜித்தால் நிச்சயம் பலன் கிட்டும்.