நேர்மறை எண்ணங்கள்

நேர்மறை எண்ணங்கள் ஒருவரின் வாழ்க்கையை சிறப்பாக்கும் அளவிற்கு வல்லமை கொண்டது. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று எண்ணினால் எதையும் நம்மால் எளிதில் சாதிக்க முடியும்.

நேர்மறை எண்ணங்கள்

 நேர்மறை எண்ணங்களே நம் வாழ்க்கையை முன்னேற்றும்:

  நேர்மறை எண்ணங்களை வெளிப்படுத்துவது ஒருவரின் நல்ல அணுகுமுறையே ஆகும்.   நேர்மறை   எண்ணங்கள்  ஒருவரின் வாழ்க்கையை சிறப்பாக்கும் அளவிற்கு வல்லமை கொண்டது. நல்ல விஷயங்களை   சிந்தித்தல்,  பேசுதல்,  பார்த்தல்,  கேட்டல், செய்தல்  , இவை அனைத்தும் நேர்மறை எண்ணங்களாகும்.

'நடப்பதெல்லாம் நன்மைக்கே' என்று எண்ணினால் எதையும் நம்மால் எளிதில் சாதிக்க முடியும். நேர்மறை எண்ணங்களினால்  நம் மனம் தெளிவு பெறும். அந்தத் தெளிவு எந்த சூழலிலும் நம்மை சாதுர்யமாக கையாள வைக்கும்.

 நேர்மறை எண்ணங்களால் விளையும் நன்மைகள்:

  •   நம் வாழ்க்கையை  மேம்படுத்தி சாதிக்க செய்கிறது,
  • மூளைக்கு புத்துணர்வை ஊட்டுகிறது,
  • மன அழுத்தம் குறைகிறது ,
  • துன்பங்களைத் தாங்கும் சக்தி நமக்கு கிடைக்கிறது,
  •  ரத்த அழுத்தத்தை குறைக்கிறது,
  •  இதய நோயிலிருந்து நம்மை காக்கிறது,
  •  நல்ல தூக்கத்தை தருகிறது,
  •  நெடுநாள் வாழ உதவுகிறது,
  •  நிம்மதியான, சந்தோசமான  வாழ்க்கையை தருகிறது.

 நம் வாழ்க்கையை சிறப்பாகவும், அழகாகவும் மாற்ற நேர்மறை எண்ணங்களை இவற்றின் மூலம் வளர்க்கலாம்:

  •  வாய்விட்டு சிரித்தல், 
  • மகிழ்ச்சியான தருணங்களை நினைத்து பார்த்தல்,   
  •  நேர்மறை எண்ணங்களை கொண்ட மனிதர்களோடு பழகுவதினால் ,  
  • மற்றவர்களுக்கு உதவி செய்வதால்,
  • புறம்  பேசுபவர்களின் வார்த்தைகளை மதிக்காமல் இருத்தலினால்,   
  • தினசரி  தியானம் செய்வதினால்
  • நல்ல  தூக்கத்தினால்,
  • காற்றோட்டமான  இடங்களுக்கு செல்வதினால்,
  • நம் கோபத்தை கட்டுப்படுத்துவதினால்,
  • வீட்டிலோ,வெளியிலோ விளையாடும்  விளையாட்டினால்,
  • உடல் பயிற்சிச் செய்வதினால்,
  • இசையை கேட்பதினால், பாடுவதினால்,
  •  நடனத்தினால்,
  • புத்தகம் படித்தல் ,வரைதல், கவிதைகள், கட்டுரைகள் எழுதுதல் போன்ற பல நல்ல பழக்கங்களை மேற்கொள்வதினால்,
  • மேலும் ,  நம்முடன் அன்போடு  பழகுவோருடன் நீண்ட நேரம் பொழுதை  செலவிடுவதாலும், நம் எண்ணங்கள் நேர்மறை எண்ணங்களாக மாறும். 

 நேர்மறை சிந்தனையின்   சிறப்பை பற்றி   பல அறிஞர்களும்,  ஞானிகளும்,  சிந்தனையாளர்களும்     கூறியிருக்கின்றனர். அதில் சிலவற்றை பார்ப்போம்,

  • விவேகானந்தர்:"நீங்கள் உங்களை  வலிமையானவனாக  நினைத்தால் வலிமையானவர்களாக  மாறுவீர்கள்". 
  • கண்ணதாசன் :"பூமியில் இருப்பதும்,  வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே !" இருக்குமிடம் எதுவோ நினைக்கும் இடம் பெரிது போல் வரும் உயரமும் புதுப்புது உலகமும் அவரவர் உள்ளங்களே , இவ்வாறு அவரவர் எண்ணத்தின் படி தான் வாழ்க்கை இருக்கும் என்பது அர்த்தம்". 
  • புத்தர் :  "சிந்தனை எதுவோ , அதுவாகவே நீ ஆகிறாய்".
  • அப்துல் கலாம் :" சாவி இல்லாத பூட்டை உருவாக்குவதில்லை , அதுபோல் தீர்வு இல்லாத பிரச்சனைகளை இறைவன் அனுமதிப்பதில்லை".

அறிஞர்கள், ஞானிகள், சிந்தனையாளர்கள் மற்றும் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரும் எது "நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்" , இதை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் அர்ஜுனனுக்கு சொன்னது - கீதா சாரம்.

நேர்மறை எண்ணங்கள் நம் உடலையும் , உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். "வாழ்க்கை சொர்க்கம் ஆவதும் நரகம் ஆவதும்  நம்  எண்ணங்களை பொறுத்தே". "இல்லாததை நினைத்து ஏங்காமல், இருப்பதை வைத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும் ". "எந்த செயல்  நமக்கு பிடிக்கவில்லையோ அதை  நாம் மற்றவர்களுக்கு செய்யாதிருத்தலே மேல்". இதைப்போன்று பல நல்ல விஷயங்களை நாம் மேற்கொண்டோம் என்றால்  நம் வாழ்க்கை சொர்க்கம் ஆகிவிடும். நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.