எழுதுகிறேன் ஒரு கவிதை !

தமிழில் பல பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் கபிலன்.

எழுதுகிறேன் ஒரு கவிதை !

தமிழில் பல பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் கபிலன், இவருடைய மகள்

தூரிகை. எழுத்தாளர், ஆடை வடிவமைப்பாளர், ஸ்டைலிஸ்ட் என பல்வேறு

திறமைகளுடன் செயல்பட்ட இவர் திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு எதிரான பல விழிப்புணர்வு பதிவுகளை தனது சோஷியல்

மீடியாவில் தொடர்ந்து பதிவு செய்து கொண்டிருந்த தூரிகையின் இந்த முடிவு

எல்லாரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் கவிஞர் கபிலன் தன் மகள் தூரிகை குறித்து எழுதிய உருக்கமான

கவிதைகளை தமது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அது படிப்பவர்களின்

இதயத்தை கனக்க செய்வதாக உள்ளது.

 

கவிஞரின் கண்ணீர் கவிதை 

“எல்லா தூக்க மாத்திரைகளையும் அவளே போட்டுக்கொண்டால் நான் எப்படி

தூங்குவேன்”

“எங்கே போனாள் என்று தெரியவில்லை, அவள் காலணி மட்டும் என் வாசலில்”

 “மின்விசிறி காற்று வாங்குவதற்கா... உயிரை வாங்குவதற்காக.?” ,

“அவள் கொடுத்த தேநீர் கோப்பையில் செத்து மிதக்கிறேன், எறும்பாய்..?” 

“அவளுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா இல்லையா எனக்கு தெரியாது, அவளே என்

கடவுள்..!” 

“யாரிடம் பேசுவது.. எல்லா குரலிலும் அவளே பதிலளிக்கிறாள்..” 

“பகுத்தறிவாளன் ஒரு கடவுளை புதைத்து விட்டான்..!”  என்று மறைந்த தம்

மகள் தூரிகை குறித்து கபிலன் கண்ணீரால் கவிதை வடித்துள்ளார்.