கொழுப்பு கல்லீரல் நோயைக் கட்டுப்படுத்த உட்கொள்ளவேண்டிய உணவுகள் 

காட்டுத்தீ போல் உலகெங்கிலும் பரவி ஒரு ஒரு வித கல்லீரல் நோய் பாதிப்பு, மதுசாரா கொழுப்பு நிறை கல்லீரல் நோய் என்பதாகும். இதனை நான்-ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் டிசீஸ் (NAFLD) என்று ஆங்கிலத்தில் கூறுவர்.

கொழுப்பு கல்லீரல் நோயைக் கட்டுப்படுத்த உட்கொள்ளவேண்டிய உணவுகள் 

நாட்பட்ட கல்லீரல் நோய்க்கான ஒரு பொதுவான காரணங்களில் ஒன்றாக இந்த நோய் அமைகிறது. NAFLD நோய் பாதிப்பால், கல்லீரல் புற்று நோய், கல்லீரல் அழற்சி மற்றும் இதன் நீட்சியாக கல்லீரல் செயலிழப்பு போன்றவை ஏற்படுகின்றன. NAFLD பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பெரும்பாலும் உணவுமுறை மாற்றங்களை வழங்கி வருகின்றனர். ஆகவே இந்த உணவு முறை மாற்றங்களைக் கடைப்பிடிப்பதால் நோய் இன்னும் வளர்ச்சியடைவது தடுக்கப்படுகிறது . 

நீங்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி விவாதிப்பதற்கு முன், கொழுப்பு கல்லீரல் நோயாளிகள் உணவை உண்ணுவதில் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களைப் பற்றி சுருக்கமாக இங்கே காண்போம். 
உங்கள் உணவு திட்டம் தயாரிக்கும்போது கீழே குறிப்பிட்டுள்ளவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்,

  • கல்லீரலில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டும்
  • கல்லீரல் சேதமடைவதை குறைக்க வேண்டும்
  • இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்த வேண்டும்.
  • எளிதான முறையில் எடை குறைப்பை ஏற்படுத்த வேண்டும்.

உணவில் எவற்றைச் சேர்க்க வேண்டும்?
கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டிய அல்லது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய சில வகை உணவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. 

பச்சை காய்கறிகளை உணவில் இணைக்கலாம். தினமும் இரண்டு துண்டு பழங்கள் உண்ணுவதை மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம். ஆனால் பழங்களில் சர்க்கரை அதிகமாக இருக்கலாம். மறுபுறம் காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்வதில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது.

புரதம் அதிகம் உள்ள உணவுகளான கடல் உணவுகள் (கேனில் அடைக்கப்பட்டது அல்லது புதிதாக வாங்கியது) , கோழி இறைச்சி, பருப்பு வகைகள், நட்ஸ் மற்றும் விதைகள்  போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

பல்வேறு வகையான காய்கறிகள், மாவுச் சத்து கொண்டவை உட்பட அனைத்து வகையையும் உட்கொள்ளலாம். உருளைக்கிழங்கு மட்டும் தவிர்ப்பது நல்லது.

சர்க்கரை உணவுகளை நீங்கள் தவிர்ப்பதை இந்த மாவுச்சத்து உணவுகள் ஈடு செய்யும்.

பசி நேரத்தில் என்ன செய்யலாம்?
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு அளவு உங்களுக்கு போதுமானதாக இராது. ஆகவே பசி எடுக்கும் நேரங்களில் எல்லாம் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில்  மிகக் குறைந்த அளவு உணவை எடுத்துக் கொள்ளுங்கள். பசி நேரத்தில் உணவு உண்ணாமல் நேரம் கடத்தாதீர்கள். போதுமான அளவு உணவு எடுத்துக் கொண்ட பிறகு உங்கள் உடல் இயக்கத்தை கவனியுங்கள்.

மறுபுறம், உங்களுக்கு விருப்பமான ஆரோக்கிய சிற்றுண்டிகளை உணவு இடைவெளியின்போது எடுத்துக் கொள்ளலாம். அவற்றுள் சில,

கேன் செய்யப்பட்ட கடல் உணவுகளான , சிறிய கேன் சர்டைன் மீன்கள். 

பிரெஷ் அல்லது உறைந்த பெர்ரி பழங்கள் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன், மற்றும் தேங்காய் பால் அல்லது பாதாம் பால் கொண்டு தயாரிக்கப்பட்ட ஸ்மூதி போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

பல வகை விதைகள் மற்றும் பருப்புகள்.

பச்சை காய்கறிகளான கேரட், வெள்ளரிக்காய், செலெரி, ப்ரோகோலி போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

அவகாடோ டிப் எடுத்துக் கொள்ளலாம்.

பச்சை காய்கறி ஜூஸ் ஒரு கிளாஸ் பருகலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள், குறிப்பாக இனிப்புகள் மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள். 

மாவு அதிகம் உள்ள உணவுகள் 

எடை குறைப்பை பரிந்துரைக்கும் உணவு முறை

பொரித்த உணவுகள்

பிட்சா 

சிப்ஸ் மற்றும் பிஸ்கட் 

உணவு முறை மூலமாக கொழுப்பு கல்லீரல் நோயை எளிதாக கட்டுபடுத்த முடியும் என்பதை இந்த பதிவின் மூலம் நம்மால் அறிய முடிகிறது.

கல்லீரல் நோய் என்பது உலகம் முழுவதும் உள்ள பிரச்சனை.

ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றுவது இதில் மிகவும் முக்கியம்.

மது அருந்துவதை முற்றிலும் நிறுத்த வேண்டும்.

ஜன்க் உணவுகளுக்கு மாற்றாக, ஆரோக்கிய சிற்றுண்டிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.