எளிய முறையில் கண்ணுக்கு கீழே உள்ள சுருக்கங்களை போக்கலாம்

இயற்கையான தீர்வுகள் மூலம் கண்களுக்கு கீழ் உண்டாகும் சுருக்கங்களை போக்குவது கண்களுக்கு நன்மையை செய்யும்.

எளிய முறையில் கண்ணுக்கு கீழே உள்ள சுருக்கங்களை போக்கலாம்

சூரிய ஒளியின் தாக்கத்தாலும், வயது முதிர்வினாலும் கண்களுக்கு கீழ் உண்டாகும் சுருக்கங்கள்  நம்மை கவலை கொள்ளச் செய்யும் ஒரு விஷயம் தான். கண்களுக்கு கீழே  உள்ள பகுதியில் குறைந்த அளவு கொலாஜென் மற்றும் எலாஸ்டின் இருப்பதால் மிகவும் மெலிதாக இருக்கும் . இதுவே எளிதில் சுருக்கங்கள் தோன்ற  காரணமாயிருக்கிறது. இந்த சுருக்கத்தை இரசாயன பொருட்கள் கொண்டு போக்க முயற்சிப்பது சிறந்த தீர்வு இல்லை. ஆதலால் இதற்கான தீர்வுகள் இயற்கையான முறையில் இருப்பது கண்களுக்கு நன்மையை செய்யும்.

இயற்கையான தீர்வுகள் மூலம் கண் சுருக்கங்களை போக்குவது பற்றி இப்போது காண்போம்.

தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய்யை சுருக்கங்களில் தடவுவதால் ஈர்ப்பத்தை  அதிகரிக்கும் . தேங்காய் எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகம் இருப்பதால், சருமத்தை புதுப்பித்து நீர்ச்சத்தை அதிகரிக்கும். ஆகையால் தேங்காய் எண்ணெய் கொண்டு முகத்தை மசாஜ் செய்வது நல்ல பலனை கொடுக்கும். இரவில் இதனை செய்து காலையில் குளிக்கும்போது முகத்தில் உள்ள கோடுகள் மற்றும் சுருக்கங்கள் மெல்ல மறையும்.. முகமும் ஈரப்பதத்தோடு இருக்கும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள் மாஸ்க்:
* 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யுடன் 1 சிட்டிகை மஞ்சள்தூள்  சேர்த்து கலக்கவும்.
* இந்த கலவையை சுருக்கங்களில் தடவவும்.
* 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும்.
* தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து பாதாம் எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய் போன்றவற்றையும் பயன்படுத்தி சுருக்கங்களை நீக்கலாம்.

ஆலிவ் எண்ணெய் :
கருவளையம் மற்றும் கண் சுருக்கத்திற்கு ஆலிவ் எண்ணெய் ஒரு சிறந்த தீர்வாகும். இதில் இருக்கும் வைட்டமின் ஈ மற்றும் கே வயது முதிர்வை தடுக்கும். கண்ணுக்கு கீழே உள்ள பகுதி விரைவில் ஈரப்பதத்தை இழக்கும் தன்மை உள்ளவை. ஆலிவ் எண்ணெய்யை அந்த இடத்தில்  அடிக்கடி தடவுவதால் முகம் ஈரப்பதத்தோடு இருக்கும். உங்கள் முகம் இளமையுடன் இருக்க ஆலிவ் எண்ணெய்யுடன் சில துளி எலுமிச்சை சாறு சேர்த்து மசாஜ் செய்யலாம்.

ஆலிவ் எண்ணெய் மசாஜ்:
* ஆலிவ் எண்ணெய்யை எடுத்து முகத்தில் தடவவும்.
* 10 நிமிடங்கள் நன்றாக மசாஜ்  செய்யவும்.
* 5 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.
* இதனை தொடர்ந்து செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.

யோகர்ட்:
* யோகார்டில் லாக்டிக் அமிலம் மற்றும் அல்பா ஹைட்ராக்சி அமிலம் உள்ளது. இந்த அமிலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, கோடுகளை வர விடாமல் செய்கிறது . இதனால் சுருக்கங்கள் தடுக்கப்படுகிறது. யோகர்ட் கொண்டு செய்யும் இந்த மாஸ்க்கை பயன்படுத்தி சுருக்கங்களை போக்கலாம்.

யோகர்ட் பேஸ் பேக் :
* 1 ஸ்பூன் யோகர்டுடன் 1 ஸ்பூன் தேன் சேர்த்து சில துளிகள் ரோஸ்  வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
* இந்த கலவையை முகத்தில் தடவவும்.
* 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும்.

திராட்சை:
எந்த வகை திராட்சையாக இருந்தாலும் இவற்றிற்கு ஊட்டச்சத்துகளில் எந்த குறைவும் இல்லை. ரீசேர்வட்டால் என்ற ஒரு ஆன்டிஆக்ஸிடென்ட் இதில் உள்ளது. இது சுருக்கங்கள்  வருவதை தாமத படுத்துகிறது.

திராட்சை மாஸ்க்:
* 5-7 திராட்சைகளை எடுத்து நன்றாக மசித்து கொள்ளவும். 
* இதனுடன் தேன் அல்லது யோகர்ட் சேர்த்து கலக்கவும்.
* இந்த கலவையை முகத்தில் தடவவும்.
* 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும்.

அவகேடோ:
சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வைட்டமின்களான வைட்டமின் ஏ மற்றும் ஈ அவகேடோவில் உள்ளது. இது சருமத்திற்கு ஈரப்பதத்தை  தந்து, கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது. 

அவகேடோ மாஸ்க் :
* 1 அவகேடோவை எடுத்து நன்றாக விழுதாக்கி கொள்ளவும்.
* அந்த விழுதை  முகத்தில் தடவவும்.
* 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும்.

குளிர்ந்த நீர் :
குளிர்ந்த நீரால் முகத்தை கழுவுவதால் வயது முதிர்வு தாமத படுகிறது. இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. ஓரளவுக்கு குளிர்ச்சியாக நீர் இருத்தல் அவசியம். அதிகமான குளிர்ச்சியுடைய நீர், சரும செல்களை பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அடிக்கடி குளிர்ந்த நீர் பருகுவதால் உடல் நீர்ச்சத்தோடு இருக்கும்.

மேலே கூறிய முறைகளை தொடர்ந்து பின்பற்றி வரும்போது விரைவில் கண்ணுக்கு கீழ் உள்ள சுருக்கங்கள் மறையும் . நீங்களும்  இளமையாக தோன்றுவீர்கள் !