8 வயது சிறுமியின் வயிற்றில் 3 பவுண்ட் தலை முடி

சிறு வயதில் நமக்கு பழக்கமாகும் சில விஷயங்கள் நமது ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறையில் தாக்கத்தை உண்டாக்குவதாக உள்ளன.

8 வயது சிறுமியின் வயிற்றில் 3 பவுண்ட் தலை முடி

சிலருக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். சிலருக்கு விரல் சப்பும் பழக்கம் இருக்கும். சிலர் கோபமாக அல்லது மன அழுத்தம் அதிகமாக இருக்கும் நேரத்தில் பற்களைக் கடிப்பதையும் பழக்கமாக கொண்டிருப்பார்கள். இந்த பழக்கங்கள் நாளடைவில் நமக்கே தீங்கு விளைவிக்கின்றன. ஆகவே இத்தகைய பழக்கத்தை உடனடியாக கைவிடுவது நமது வாழ்க்கைக்கு நல்லது. இது போன்ற ஒரு வித்தியாசமான பழக்கத்தைக் கொண்டிருந்த 8 வயது சிறுமியின் வாழ்க்கை அனுபவத்தைப் பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.

அவருக்கு இருந்த வித்தியாசமான பழக்கம் தலை முடியை மென்று சாப்பிடும் பழக்கம். இந்த பழக்கத்தினால் அவருடைய வயிற்றில் இருந்து ஒரு பெரிய முடி பந்தை மருத்துவர்கள் எடுத்துள்ளனர். இந்த அதிர்ச்சி மிகுந்த அனுபவத்தைப் பற்றி அறிந்து கொள்ள வாருங்கள்..

அவளுடைய 2 வயதில் இருந்து தலைமுடியை சாப்பிட்டு வருகிறாள்:
ஃபைஃபை என்னும் 8 வயது சிறுமி தெற்கு சீனாவை சேர்ந்த குஆங் டாங் பகுதியை சேர்ந்தவள். இந்த சிறுமி தனது முடியை இழுத்து சாப்பிட்டு வருவதை 2 வயது முதல் செய்து கொண்டிருந்தாள் என்பது ஆய்வில் தெரிய வந்தது.
 
தலை முடியை மெல்லும் பழக்கத்தை அவள் தாய் நிறுத்தினார்:
இப்படி இந்த சிறுமி தலைமுடியை இழுத்து கடிப்பதைக் கண்ட அவள் தாய் அதனை நிறுத்தும்படி கூறியதாக ஆய்வுகள் கூறுகின்றன. அவள் அந்த பழக்கத்தை நிறுத்திய அடுத்த ஒரு மாதத்தில் அந்த சிறுமிக்கு உடல்நலத்தில் குறைபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. வாந்தி மற்றும் தீவிர வயிற்று வலி ஆகிய அறிகுறியுடன் அவளுக்கு காய்ச்சலும் இருந்தது. ஒரு வாரம் அவளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.

மருத்துவர்கள் பரிசோதனை:
மருத்துவர்கள் அந்த சிறுமிக்கு இரைப்பையை கழுவும் நடவடிக்கை மேற்கொண்டனர். அவளுடைய வயிற்றை சுத்தம் செய்வதற்கு மருத்துவர்கள் இந்த முறையை பின்பற்றினர். ஆனால் அவளின் வயிற்றில் ஒரு பெரிய முடி உருண்டை இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த முடி பந்து அவளுடைய வயிற்றில் ஒட்டிக் கொண்டிருந்தது.

உடனடியாக அறுவை சிகிச்சை :
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து தலைமுடியை வெளியில் எடுக்க முடிவு செய்து அதன்படி செய்தனர்.