உங்கள் மனதிற்கு பிடித்தமான தொழிலை உங்கள் ராசியின் மூலம் அறிந்து கொள்ளலாம்

ஒருவன் தொழிலில் வெற்றி அடைவது என்பது வாழ்க்கையில் வெற்றி அடைவதின் ஒரு முக்கிய பகுதியாகும்.

உங்கள் மனதிற்கு பிடித்தமான தொழிலை உங்கள் ராசியின் மூலம் அறிந்து கொள்ளலாம்

ஒவ்வொரு மனிதனின் கனவும் வேறுபடும் . ஆனால் எல்லா மனிதனுக்கும் இருக்கும் ஒரு பொதுவான கனவு, அவன் செய்யும் தொழிலில் முன்னுக்கு வருவது என்பதாகும்.  அப்படி இருக்கும்போது, ஒவ்வொரு மனிதனின் தொழில் முன்னேற்றத்தில் ராசியில் தொடர்பு நிச்சயம் உள்ளது. நேரடியாகவோ , மறைமுகமாகவோ, ஜோதிடம் உங்கள் தொழில் முன்னேற்றத்தைக் கணிக்க பெருமளவில் துணை புரிகிறது. உங்கள் ராசிக்கேற்ற தொழில் எது என்பதை உணர்ந்து கொள்ள இந்த பதிவை நிச்சயம் படியுங்கள். உங்கள் முன்னேற்றத்திற்கான வழியாகவும் இது இருக்கலாம்.

மேஷம் :
ராசிகளில் மிகவும் இளமையான ஒரு ராசி, மேஷம். மேஷ ராசியினர், வலிமையானவர்கள். அவர்களின் விருப்பங்களும் வலிமையாக இருக்கும். துடிப்பானவர்கள், உற்சாகம் மற்றும் போட்டி மனப்பான்மை கொண்டவர்கள். கமிஷன் அடிப்படையிலான வேலைகள், குறிப்பாக ஒரு போனஸ் கிடைக்கும் வேலையில் அவர்கள் அதிக கவனம் செலுத்த விரும்புவார்கள். மேஷ ராசியினரின் தைரியம் மற்றும் துணிச்சலால், நமது அன்றாட வாழ்வின் ஹீரோக்களான காவல்துறை அதிகாரிகள், தீயணைப்பு போராளிகள் போன்றவர்கள் இந்த ராசியைச் சேர்ந்தவர்களாக பெரும்பாலும் இருக்கலாம். இவர்கள் சிறந்த ஊக்குவிப்பாளராக இருப்பார்கள். இவர்களின் வெளிப்படை தன்மை காரணமாக மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரத் துறையில் நல்ல பெயர் கிடைக்கும். 

சிறந்த வேலை - தொழிலதிபர், சிப்பாய், மீட்பு பணியாளர்; அரசாங்கம், அரசியல், தொலைக்காட்சி, பொழுதுபோக்கு ஆகிய துறைகளில் சிறப்பாக வேலை செய்யலாம். .


ரிஷபம் :
ரிஷப ராசியினர் விரும்பும் ஒரு முக்கிய விஷயம் ஸ்திரத்தன்மை. சில முக்கிய உத்தரவாதங்களுக்காக இவர்கள் கடினமாக உழைப்பார்கள். அதாவது, சிறந்த நன்மைகள், விடுமுறைக் காலம், நல்ல வேலை, பாதுகாப்பு போன்றவை இவர்கள் ஒரு தொழிலில் எதிர்பார்க்கும் அம்சங்களாகும். இவர்கள் குழு உறுப்பினராக நல்ல முறையில் நம்பகத்தன்மையுடன் செயலாற்றுவார்கள். உறுதி, பொறுமை, நேர்மை, சரியான போக்கு போன்றவை இவர்களின் சிறப்புகளாகும். ரிஷப ராசியினருக்கு அழகின் மீது அதிக ஆர்வம் உண்டு என்பதால், பூக்கள், உணவு, நகைகள், மற்றும் விலையுயர்ந்த பொருட்களுடன் வேலை செய்வது மிகவும் பிடிக்கும். தெளிவான மற்றும் வலிமையான குரல் வளம் உள்ளவர்களாக இருப்பதால், அறிவிப்பாளர், பொது பேச்சாளர், வரவேற்பாளர் போன்ற துறைகளில் பிரகாசிக்கலாம். 

சிறந்த வேலைகள் - கணக்காளர் , கல்வியாளர் , என்ஜினியர், வக்கீல், வடிவமைப்பாளர், நிலம் தொடர்பான வேலை , சமையல் தொழில் 
 
மிதுனம்:
மிதுன ராசினரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள அவர்களை எப்போதும் புத்திசாலித்தனமாக ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். மிதுனம் என்பது இரட்டையர்களைக் குறிக்கும் என்பதால் ஒரு வேலையில் இரண்டு நபரை ஈடுபடுத்துவதால், வேகமாகவும் ,அழுத்தம் நிறைந்த சூழலில் கூட வெற்றிகளைக் கொண்டு வரவும் இவர்களால் முடியும். கடினமான வேலை மற்றும் தொடர்ச்சியாக ஒரே வேலையைச் செய்வது போன்றவை இவர்களுக்கு பிடிக்காது. பயணம் தொடர்பான வேலை இவர்களுக்கு ஒத்து வரும். மேலும் சமூகத்துடன் இணைந்து செய்யும் வேலைகள் சிறப்பாக வரும். மிதுன ராசியினர், நேர்மறை எண்ணம் கொண்டவர்கள், சிறப்பான ஆற்றல் கொண்டவர்கள். பாரம்பரிய விதிகளைக் கொண்டு இவர்களைக் கட்டுப்படுத்துவதை விட, ஊக்கப்படுத்தி அவர்கள் வேலையை முடிக்க வைக்கலாம். 

சிறந்த வேலைகள் - பங்குதாரர், சுவிட்ச்போர்டு ஆபரேட்டர், தொழில்நுட்ப ஆதரவு, ஆசிரியர், கட்டடம், இயந்திர ஆபரேட்டர், மீட்பு பணியாளர்.

கடகம் :
ராசிகளின் தாய் என்று அறியப்படுவது கடகம். (தந்தையாக அறியப்படுவது, மகரம்) , ஆகவே, அரவணைப்பு  மற்றும் கவனிப்பு தொடர்பான வேலை நல்ல செயலாற்றலை வெளிப்படுத்தும். குழந்தைகளுடன் அல்லது நாய்க்குட்டியுடன் வேலை செய்வது மட்டுமல்ல, ஒரே நேரத்தில் பல வேலை செய்யும் தாயைப் போல், தன்னுடன் வேலை செய்யும் பணியாளர்களை சிறந்த நிர்வாகியாக மாற்றும் திறன் கொண்டவர்கள் கடக ராசியினர். சிறந்த அறிவுரை வழங்குபவர்களாக இருப்பார்கள். மேலும் நல்ல பாதுகாப்பைத் தருவார்கள். பொறுப்புகளை எளிதாக சுமக்கும் தன்மை உள்ளவர்கள். கற்பனையிலேயே பிரச்சனைகளைத் தீர்த்து விடுவார்கள். 

சிறந்த வேலைகள் - தோட்டப் பணியாளர், பொது நல சேவகர், குழந்தை பராமரிப்பு, மனித வளத் துறை, வக்கீல், ஆசிரியர், சி ஈ ஒ , சிப்பாய்.

சிம்மம் :
உங்கள் நிறுவனத்தை வெற்றியுடன் மற்றும் அதிக லாபத்துடன் வழிநடத்தும் ஒரு சிங்கம் போன்ற வலிமை கொண்டவர்கள். பயமற்ற ஊக்கமளிக்கும் விதத்தில், சுதந்திரமாக செயலாற்றும் ஒரு நபர், சிம்ம ராசியினர். மேலும், மக்கள் மத்தியில் அவர்கள் கவனம் இவர் மேல் இருக்கும் நேரத்தில் மிகவும் சிறப்பாக செயலாற்றும் தன்மைக் கொண்டவர். பதவி மற்றும் அதிகாரத்தை தரும் வேலைகளை செய்ய விரும்புவார்கள். குழுவாக செய்யும் வேலைகளில் சீர் குலைவை உண்டாக்கும் தன்மைக் கொண்டவர். உங்களின் பராமரிப்பு செலவு மிகவும் அதிகம். ஆனால் உங்கள் வசீகரம் மற்றும் மயக்கும் ஆற்றலால் இறுதியில் அனைவர் மனதையும் கவர்ந்திடுவீர்கள். உங்கள் பின்னால் இருந்து மற்றவர்கள் உங்களைக் கண்காணிப்பது அல்லது நிர்வகிப்பது முற்றிலும் பிடிக்காது. தனிச்சையான குணமும், புத்தி கூர்மையும் அதிகம் இருப்பதால், பின் தொடர்ந்து செல்வதை விட,  வழிநடத்தி செல்வதில் ஊக்கப்படுத்தினால் உங்கள் வேலையை சிறப்பாக செய்வீர்கள். 

சிறந்த வேலைகள் - தலைமை நிர்வாக அதிகாரி, நிகழ்ச்சியாளர், சுற்றுலா வழிகாட்டி, ரியல் எஸ்டேட் முகவர், உள்துறை அழகுபடுத்துபவர், ஆடை வடிவமைப்பாளர், அரசாங்கம், விற்பனையாளர்.


கன்னி :

கன்னி ராசியினர் அவர்களின் பரிபூரணவாதத்திற்காக அறியப்படுவதுடன் விரிவான சார்புடைய தொழில்களில் மிகவும் நன்றாக செயல்படுவார்கள். எல்லா விஷயத்தையும் கவனத்தில் கொள்வார்கள், .எதையும் சுருக்கமாக சிந்திப்பார்கள், மிகவும் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருப்பார்கள். சேவை சார்ந்த தொழிலில் கன்னி ராசிக்காரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். உங்கள் அழகு நிபுணர் அல்லது வேலையாட்கள் கன்னி ராசியாக இருந்தால் உங்களுக்கு சிறந்த சேவை நிச்சயம் வழங்கப்படும். (அதிக டிப்ஸ் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் வேலை புரிவார்கள்.) எழுத்து, ஆராய்ச்சி மற்றும் புள்ளியியல் போன்ற துறைகள் இந்த கவனமிக்க மூளையைக் கொண்ட கன்னி ராசியினருக்கு நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பதால் அவர்களிடம் பழகுவது மிகவும் எளிது. கன்னி ராசியினருக்கு பெரும்பாலும் பன்மொழி புலமை உண்டு. 

சிறந்த வேலைகள் - பத்திரிக்கை ஆசிரியர்/எழுத்தாளர், ஆசிரியர், விமர்சகர், தொழில்நுட்ப வல்லுநர், மொழி பெயர்ப்பாளர், துப்பறியும் வல்லுநர், புள்ளியியல் நிபுணர்.


துலாம்:
துலா ராசியினர் இல்லாமல் எந்த ஒரு காரியத்தையும் நம்மால் செய்ய முடியாது. பார்ப்பதற்கு அழகான தோற்றம் உள்ளவர்கள், கருணையுள்ளம் கொண்டவர்கள். பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்தவர். அவர்களது கூட்டுறவு தன்மை அவர்களை சிறந்த தூதுவர்கள் மற்றும் குழு தலைவர்களாக உருவாக்குகிறது. வாடிக்கையாளர் சேவையில் துலாம் ராசியினர் இருந்தால் நமது தகவல் தொடர்பு மிகவும் எளிமையாக இருக்கும். மக்களின் நண்பன் என்று இவர்களைச் சொல்லலாம். இவர்கள் இருட்டு அறையில் முடங்கி இருக்கும் அடிமைகள் அல்ல . சமூக சூழ்நிலைகளுடன் சேர்ந்து செழித்து வளருவார்கள். பல துலா ராசியினர் கலையால் ஈர்க்கப்படுவார்கள். இசைக் குழுக்களில் முக்கிய பாடகராக இருப்பார்கள், பார்வையாளர்களுடன் தொடர்பு கொண்டவராக இருப்பார்கள். 

சிறந்த வேலைகள் - ராஜ தந்திரி , நடன கலைஞர், விற்பனையாளர், தொகுப்பாளர் , பேச்சாளர், பயண முகவர், மேற்பார்வையாளர்.


விருச்சிகம் :
தீவிரம் என்ற வார்த்தை இவர்களுக்கு சரியாக பொருந்தும். ஒரு வெடிகுண்டை அகற்ற வேண்டுமா? ஒரு சிக்கலான மூளை அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டுமா? நீங்கள் துணிந்து விருச்சிக ராசியினரிடம் செல்லலாம். எந்த ஒரு இடையூறையும் நீக்கி, ஒரு லேசர் கதிர் போல் கூர்மையாக ஒரு வேலையில் கவனம் செலுத்தும் தன்மை இவர்களுக்கு உண்டு. விருச்சக ராசியினரின் எதிலும் மிக ஆர்வமாக இருப்பார்கள், ஆனால் தெளிவாக இருக்க மாட்டார்கள். - ஒரு வேலை நீங்கள் அவரிடம் குறுக்கு விசாரணை செய்யப்பட்டால், உங்களை மிரட்டவோ, அச்சுறுத்தவோ தயங்க மாட்டார்கள். அவக பொதுவாக அசாதாரணமாக இருப்பார்கள். ஒரு விஷயத்தை சரியாக எப்படி செய்ய வேண்டும் என்பதை உணர்ந்திருப்பார்கள். நீங்கள் அவர் பின்னால் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கு தேவையானது சுதந்திரம் மற்றும் முதலாளியின் நம்பிக்கை. இது மட்டுமே. 

சிறந்த வேலைகள் - துப்பறிவாளன், வக்கீல், கல்வியாளர், விஞ்ஞானி , அறுவை சிகிச்சை நிபுணர், இயற்பியலாளர் .

தனுசு:
பொதுவாக தனுசு ராசியினர், நன்னெறி மிக்கவர்கள், ஆற்றல் அதிகம் உள்ளவர்கள். தத்துவவாதிகள். முடிவு எடுப்பதில் திறமை வாய்ந்தவர்கள். இதனால் இவர்கள் ஒரு சிறந்த நிர்வாகியாக தலைமை பொறுபேற்க முடியும். தனுசு ராசியினர் பலர் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள். அதனால், சுற்றுசூழல், விலங்குகள், ஆலோசனை மற்றும் மதம் தொடர்பான தொழில் இவர்களுக்கு சிறப்பாக அமையும். பிரயாணத்தை அதிகமாக விரும்புவார்கள். பொதுவாக வீட்டை விட வெளியில் இருக்கவே அதிகம் நினைப்பார்கள். வெளிப்படையான , நகைச்சுவை குணம் அதிகம் உள்ளவராக இருப்பதால், எந்த ஒரு கனமான சூழ்நிலையையும் மாற்றும் திறன் இவர்கள் நகைச்சுவைக்கு உண்டு. சிறிய விவரங்களைக் கொண்டு மற்றவரை கட்டுப்படுத்தவோ, தொந்தரவு செய்யவோ மாட்டார்கள். தினசரி ஒரே முறையான வேலை அவர்கள் ஆற்றலைக் கொல்லும். 

சிறந்த வேலைகள் - மந்திரி, விலங்கு பயிற்சியாளர், பத்திரிக்கை ஆசிரியர், மக்கள் தொடர்பு, பயிற்சியாளர், பயணத்துடன் சமந்தப்பட்ட எதாவது ஒரு வேலை.

மகரம்:
மகர ராசியினர் குறிக்கோள் மிக்கவர்கள். சவால்கள் அவர்களை மகிழ்ச்சியாக வைக்க தேவைப்படும். மலை ஆடுகள், மலையின் உச்சியை அடைவதற்கு சின்ன சின்ன முனைகளில் ஏறிப் போவது போல், அவர்கள் நினைத்த இடத்தை அடைய உறுதியாகவும் பிடிவாதமாகவும் இயங்குவார்கள். பெரும்பாலானவர்கள் பொறுப்பானவர்களாகவும், மனசாட்சிக்கு உட்பட்டவர்களாகவும் இருப்பார்கள். உயர்ந்த அதிகாரத்தை வகிப்பார்கள். பல விதிகள் ஏற்படுத்தி, அனைவரையும் ஒரே அட்டவணையில் இயங்க வைக்கும் திறமை உள்ளவர்கள். ஒரு விஷயத்தை சரியாக செய்வதை நீங்கள் பார்க்க வேண்டுமென்றால் மகர ராசியினரின் செயல்களை நீங்கள் பார்க்கலாம். வேலையே எல்லாம் என்று இருப்பவர்கள் மகர ராசியினர். 

சிறந்த வேலைகள் - மேலாளர், நிர்வாகி, பத்திரிக்கை ஆசிரியர், வங்கியில் வேலை புரிவோர், ஐடி, மற்றும் அறிவியல் சார்ந்த எதாவது ஒரு வேலை.

கும்பம்:
கும்ப ராசியினரின் மனிதாபிமானம், இவர்களை மற்றவரிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதாகும். (இதனால் பல பிரச்சனைகளில் சிக்குவார்கள். இது வேறு கதை). கும்ப ராசியினர், புதுமையான விஷயங்களை ஆராய விரும்புவார்கள். மேலும் துணிச்சலான செயல்களில் ஈடுபட விரும்புவார்கள். வழக்கத்திற்கு மாறான ஒரு வேலையைச் செய்ய விரும்புவார்கள். அது அவர்களின் சொந்த தயாரிப்பாகவும் இருக்கலாம். பெருநிறுவன சூழல்களுக்கு எதிராக போராடுவார்கள், சிந்தனை மற்றும் இயக்கத்தின் சுதந்திரம் தேவை என்ற கருத்தைக் கொண்டிருப்பார்கள். ஒரு வேலை முன்னதாக செய்யப்பட்ட அதே வழியில் செய்வதில் திருப்தி அடைய மாட்டார்கள். புதிதாக ஒரு அணுகுமுறை உங்களுக்கு தேவைப்பட்டால், கும்ப ராசியினரை நீங்கள் அணுகலாம். 

சிறந்த வேலைகள் - விஞ்ஞானி (அவர்கள் புதிய கோட்பாடுகளை ஆராய முடியும் என்றால்), கண்டுபிடிப்பாளர், கரிம விவசாயி, விமானி, வடிவமைப்பாளர், இசைக்கலைஞர்.

மீனம்:
ராசியிலேயே மிகப் பழமையானது மீன ராசி. மீன ராசியினரின் ஆன்மாவும் மிகப் பழமையாக உணரும் தன்மையைக் கொண்டதாகும். இரண்டு வார்த்தையில் மீன ராசியினரைப் பற்றி கூறவேண்டும் என்றால், படைப்பு மற்றும் உணர்ச்சிமிக்கவர்கள். பாரம்பரிய கலைகளான இசை, நடனம் மற்றும் புகைப்படம் போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள். மீன ராசியினர் பெரும்பாலும் உள்ளுணர்வு சார்ந்து இருப்பார்கள். உங்கள் அழகு நிபுணர், ஒரு மீன ராசியினராக இருந்தால், உங்களுக்கு நவீன ஸ்டைல் மட்டுமல்ல, உங்களுக்கு பொருத்தமான ஸ்டைலையும் உங்களுக்கு தேர்வு செய்து கொடுப்பார். ஜோதிடர்கள் பெரும்பாலும் மீன ராசியினராக இருப்பார்கள். இரக்கம் மற்றும் பச்சாதாபம் தேவைப்படும் துறைகளில் இவர்களின் உள்ளுணர்வு உதவுகிறது.

சிறந்த வேலைகள் - கலைஞர், செவிலியர், உடல் சிகிச்சை, வள்ளல், கால்நடை மருத்துவர், உளவியலாளர்.