சரும அழகிற்கு புளி 

புளி தென்னிந்தியாவில் தனிச்சிறப்பு பெற்ற ஒரு பொருள். நமது தினசரி சமையலில் புளியை நாம் அதிகம் பயன்படுத்துவோம்.

சரும அழகிற்கு புளி 

புளிசாதம் பழங்காலம் முதல் பிரயாணங்களில் சிறந்த உணவாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த உணவு இன்றைய நாகரீக மாற்றத்தால் சிறிய சரிவை சந்தித்திருந்தாலும், கோயில்களில் பிரசாதமாக மக்களிடையே வரவேற்பு பெற்ற ஒரு உணவாக கருதப்பட்டு வருகிறது. புளி சரும அழகிற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது ஒரு புதிய தகவல். உங்கள் சரும பராமரிப்பில் புளியை தொடர்ந்து பயன்படுத்தும்போது நல்ல மாற்றங்களை உணரலாம்.புளியை நேரடியாக சருமத்தில் தடவுவதற்கு பதில், புளியால் தயாரிக்கப்பட்ட ஸ்கின் பேக்குகளை பயன்படுத்தலாம். இதனை தயாரிப்பதற்கு நேரம் அதிகமானாலும் நல்ல விளைவுகளை தருகிறது. ஆகவே அதன் தயாரிப்பு முறைகளை இப்போது பார்ப்போம்.
 
பேஸ் பேக் I  :
சரும வெண்மைக்கும் ப்ரகாசத்திற்கும் இதனை பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:
 . புளி 
 . வெந்நீர் 
 . மஞ்சள் தூள் 

செய்முறை :
 . வெண்ணீரில் புளியை ஊற வைத்து 1 ஸ்பூன் விழுதை எடுத்துக் கொள்ளவும்.
 . இதனுடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்கவும்.
 . இரண்டையும் கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்யவும். 
 . இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவவும்.
 . 30 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.

பேஸ்  பேக் II :
இதனை ஒரு ஸ்க்ரபர் போல் பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:
 . புளி 
 . வெந்நீர் 
 . கெட்டி தயிர் 
 . கல் உப்பு 

செய்முறை :
 . புளியை வெந்நீரில் ஊறவைத்து 1 ஸ்பூன் அளவு விழுதை எடுத்துக் கொள்ளவும்.
 . இதனுடன் ½ ஸ்பூன் கெட்டி தயிரை சேர்க்கவும்.
 . இதனுடன் 1 சிட்டிகை கல் உப்பு சேர்க்கவும்.
 . இந்த கலவையை முகத்தில் தடவவும் 
 . 10 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யவும்.
 . வெந்நீரால் முகத்தை கழுவவும்.
 . பிறகு மாய்ஸ்ச்சரைசேர் தடவவும்.
 . தயிர் ஒவ்வாமை இருப்பவர்கள் தயிருக்கு மாற்றாக காய்ச்சாத பாலை பயன்படுத்தலாம்.

பேஸ்  பேக் III :
இது பருக்கள் இருக்கும் சருமத்திற்கு ஏற்ற ஒரு பேக்.

தேவையான பொருட்கள்:
 . புளி 
 . வெந்நீர்
 . எலுமிச்சை சாறு 
 . சர்க்கரை 
 . பேக்கிங் சோடா 

 செய்முறை:
 . புளியை வெண்ணீரில் ஊறவைத்து 2 ஸ்பூன் விழுதை எடுத்துக் கொள்ளவும்.
 . இந்த விழுதுடன்  ½ ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். 
 . இதில் ½ ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்க்கவும்.
 . 1 ஸ்பூன் சர்க்கரையை இந்த கலவையில் சேர்க்கவும்.
 . இந்த கலவையை கட்டிகள் இருக்கும் இடத்திற்கு மிக அருகில் தடவவும். கட்டிகளில் தடவ வேண்டாம். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். 
 . வாரத்திற்கு 3 முறை இதனை செய்யலாம்.

பேஸ்  பேக் IV :
இதை சருமத்திற்கு டோனர் போல் பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:
 . புளி 
 . தண்ணீர் 
 . லாவெண்டர் எண்ணெய் 

 செய்முறை:
 . ½ கிலோ புளியை தண்ணீரில் நன்றாக கொதிக்க வைக்கவும்.
 . தண்ணீரின் நிறம் மாறும் வரை கொதிக்க விடவும். 
 . பின்பு புளியை வடிகட்டி நீரை தனியே எடுத்து  வைக்கவும். 
 . ஆறிய பின், அந்த புளி  தண்ணீரில் 5-8 துளிகள் லாவெண்டர் எண்ணெய்யை ஊற்றவும்.
 . இந்த டோனரை தினமும் சருமத்தில் தடவி வரலாம்.
 . இதனை  ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். 
 . லாவெண்டர் எண்ணெய்க்கு மாற்றாக டீ  ட்ரீ எண்ணெய்யை பயன்படுத்தலாம். 

சமையலுக்கு பயன்படுத்தும் புளியை சரும அழகிற்கு பயன்படுத்தி அழகான சருமத்தை பெற்றிடுங்கள்.