தவறான பவுன்டேஷனை கண்டுபிடிப்பது எப்படி?

எந்த ஒரு செயலையும் சிறப்பாக செய்வதற்கு பயிற்சி மிகவும் முக்கியம். முதல் தடவை எந்த ஒரு செயலையும் செய்யும்போது சிறப்பான வெளிப்பாடு வரும் என்று எதிர்பார்ப்பது தவறாகும். அது ஒப்பனைக்கும் பொருந்தும். முதன் முதலாக முகத்திற்கு ஒப்பனை போடும்போது சில தவறுகள் நடக்க வாய்ப்பிருக்கலாம். அது என்ன என்பதை தெரிந்து கொண்டு திருத்திக் கொள்வதால் சிறப்பான ஒப்பனையின் மூலம் நம்மை அழகாக வெளிப்படுத்த முடியும்.

தவறான பவுன்டேஷனை கண்டுபிடிப்பது எப்படி?

பவுன்டேஷன்:
ஒப்பனைக்கான முதல் படி பவுன்டேஷன் . நமது சருமத்திற்கு ஏற்ற தன்மை மற்றும் நிறத்தைக்  கொண்ட பவுன்டேஷனை  வாங்க வேண்டும்.  அழகு கலை நிபுணர் ஜேனட் பெர்னாண்டஸ் அவர்கள் தவறான பவுன்டேஷன் தேர்வு பற்றிய குறிப்புகளை இங்கு கொடுத்திருக்கிறார். அதனை  இப்போது காண்போம்.

சருமத்தில் திட்டுக்கள் :
பவுன்டேஷன் போட்டவுடன் சருமம் மேல் எழும்பி இருப்பதை போல் நீங்கள் உணர்ந்தால் , நீங்கள் தவறான பவுன்டேஷனை பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று அர்த்தம். சரும நிறத்தில் வேறுபாடு தோன்றும்போது நீங்கள் தவறான பவுன்டேஷனை பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று பொருள். உங்கள் சருமத்தின் அடிப்பகுதியின்  தன்மை குளிர்ச்சியானதா, சூடானதா என்பதை பொறுத்து பவுன்டேஷனை தேர்வு செய்வது நல்லது.

மெல்லிய கோடுகள்:
பவுன்டேஷன் பயன்படுத்திய பின் முகத்தில் மெல்லிய கோடுகள் தென்பட்டால் இது தவறான பவுன்டேஷன். வெடிப்புகள் உண்டாகாமல் இருக்க ஈரப்பதத்துடன் கூடிய பவுண்டேசெஷனை பயன்படுத்துவது நல்லது.

மேக்கப் உருகலாம்:
உங்கள் சருமம் எண்ணெய் சருமமாக இருக்கும்போது, நீங்கள் போடும் பவுன்டேஷன் வெயில் நேரத்தில் உருகி வழிந்தால், அது தவறான பவுன்டேஷன் ஆகும். 

பிளவுகள் தோன்றலாம்:
நீங்கள் புதிதாக பயன்படுத்தும் பவுன்டேஷனை  போட்டவுடன் மேக்கப்பில் பிளவுகள் தோன்றினால், தவறான பவுன்டேஷன் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று பொருள். அந்த பவுன்டேஷனில் அதிகமான வேதி பொருள் கலக்கப்பட்டிருக்கலாம். இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் பவுன்டேஷனை வாங்கி பயன்படுத்துவது சருமத்திற்கு நன்மை தரும்.

சரும துளைகள் பெரிதாக தோன்றும்:
பவுன்டேஷன் போட்ட  பிறகு சரும துளைகள் பெரிதாக தோன்றினால், அது தவறான பவுன்டேஷன். கனமான மற்றும் அடர்த்தியான பவுன்டேஷன் சருமத்தில் அழுந்தி துளைகளை பெரிதாக்கும். மென்மையான பவுன்டேஷன் எப்போதும் நன்மை தரும்.

ஒப்பனை பொருட்கள் பற்றிய விளக்கங்களை தெரிந்து கொண்டு அதனை பயன்படுத்துவதால் சருமத்திற்கு நன்மை கிடைக்கும். மேலும் நம்மை நல்ல முறையில் அழகாகவும் காட்டலாம்.