அழகை அதிகரிக்க ரெட் ஒயின் பேஷியல் !

வெளியில் இருக்கும் மாசு, புகை, சூரிய ஒளி போன்றவற்றால் நமது சருமம் எளிதில் பாதிப்படைகிறது. இந்த பாதிப்பை நீக்கி சருமத்திற்கு மீண்டும் அழகை தரும் எல்லா மூலப்பொருட்களும் ரெட் ஒயினில் உள்ளது.

அழகை அதிகரிக்க ரெட் ஒயின் பேஷியல் !

நாம் கண்ணாடியில் தினமும் நமது முகத்தை பார்க்கிறோம். தீடீரென்று ஒரு நாள்  நெற்றியில் ஒரு கோடு தெரிவதை பார்க்கிறோம். அதுதான் தோல் சுருங்குவதற்கான முதல் அறிகுறி. இதனை கண்டதும் மனதில் சோகம் குடி கொள்ளும். கவலையை விடுங்கள். இதற்கான தீர்வு ஒன்று உள்ளது. அது தான் ரெட் ஒயின். இது ஒரு புதிய பேஷியல் முறை ஆகும். இதன்மூலம் உங்கள் இளமை, அழகு போன்றவை எளிதில் மீட்டு தரப்படும்.

ரீசார்வட்டால்  என்னும் கூறு ரெட் ஒயினில் அதிகமாக உள்ளது. இது சருமத்தில் உள்ள ஆக்ஸைடை வெளியேற்றி சருமத்தை  மென்மையாக்குகிறது. நரம்பு மண்டலத்தை பாதுகாத்து மூளைக்கு சுறுசுறுப்பை தருகிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. அல்சைமர் போன்ற நோய்களை தடுக்கிறது. 

ரெட் ஒயினின்  நன்மைகள்:
சில நிமிட ரெட் ஒயின் பேஷியல் பல வித நன்மைகளை நமக்கு செய்கிறது. ரெட் ஒயினில் இருக்கும் பாலிபீனால்கள் உடலை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. ரெட் ஒயின் பேஷியல்  செய்வதால் தீங்கு விளைவிக்கும் கூறுகள் சருமத்தில் தோன்றாமல் தடுக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ஒரே நாளில் தோலில்  ஏற்பட்ட சுருக்கங்களை நீக்கி வயது முதிர்வை தடுக்கிறது. ரெட் ஒயின் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுவதால், எக்ஸீமா , கட்டி, பரு போன்றவை வராமல் தடுக்கிறது. இவை எல்லா நற்பலனும் சேர்ந்து ரெட் ஒயின் பேஷியலை சரும பொலிவிற்கு சிறந்த தீர்வாக காட்டுகின்றன. சருமத்தை இறுக்கமான வைக்க உதவுவதால் வயது முதிர்வு தடுக்கப்படுகிறது.

ரெட் ஒயின் பேஷியல் செய்வது எப்படி?
ரெட் ஒயின் பேஷியல் க்ரீம் கடைகளிலும் கிடைக்கிறது. ஆனால் அதனை வீட்டிலேயே செய்யும்போது நமக்கு பிடித்த வாசனை பொருட்கள் சேர்த்து நமக்கு விருப்பமான முறையில் தயார் செய்யலாம் .
இதற்கு தேவையான மூலப்பொருட்கள் யோகர்ட், தேன் மற்றும் ரெட் ஒயின் .

முகத்தை வெந்நீரால் நன்றாக கழுவவும். இதனால் சரும துளைகள் திறக்கப்பட்டு சிகிச்சைக்கு ஏற்புடையதாக இருக்கும். மேலே சொன்ன பொருட்களை கொண்டு ஒரு கலவை செய்து, அந்த கலவையை முகத்தில் தடவவும். தடவியபின் நன்றாக மசாஜ் செய்யவும். 5-7 நிமிடங்கள் அப்படியே  விட்டு விடவும். முகம் அந்த கலவையை உறிஞ்சி கொள்ளும். பிறகு அறையில் இருக்கும் வெளிச்சத்தை குறைத்து, நல்ல இசையை கேட்டு கொன்டே, ரோஜா இதழ்கள் மற்றும் வெதுவெதுப்பான தண்ணீர் நிரப்பிய பாத் டப்பில் படுத்தபடி மனது மற்றும் உடலை ரிலாக்ஸ் செய்யலாம். இந்த சூழல் உங்களுக்கு ஒரு அமைதியை கொடுக்கும். சிறிது நேரத்திற்கு பின் முகத்தை நன்றாக கழுவவும். தேனுக்கு பதில் கற்றாழை அல்லது முட்டை வெள்ளை கருவையும் பயன்படுத்தலாம்.

இது முற்றிலும் இயற்கையான ஒரு பொருள். ஆகையால் சருமத்தில் எந்த தீங்கும் எழாது. சருமத்தின் இயற்கை குணத்தை இது தக்க வைக்கும். இதன் நேர்மறை தீர்வுகளால் பலரும் ரெட் ஒயின் பேஷியலை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். எல்லா வகை ரெட் ஒயினிலும்  ஆட்டிஆக்ஸிடென்ட்கள் உண்டு. இருந்தாலும் தரமான ரெட் ஒயினை வாங்கி பயன்படுத்தலாம். 

அனைவரும் பயன்படுத்தலாம் :
வீட்டில் உள்ள பொருட்களை கொன்டே நமது அழகை கூட்டும் போது சருமம் எந்த ஒரு பாதிப்பும் கொள்வதில்லை. எல்லா வயதினரும்,  ஆண் பெண் இருவரும் இதனை பயன்படுத்தலாம். குறிப்பாக 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் தோல் சுருக்கம் தவிர்க்கப்படுகிறது என்று கூறுகின்றனர். 

இயற்கை தீர்வுகளை முயற்சி செய்யும் போது தொடர்ச்சியான பயன்பாடு நல்ல பலனை தரும். ரெட் ஒயின் பேஷியல் முறையை  வாரத்திற்கு 2 முறை செய்யும் போது விரைவில் நல்ல மாற்றத்தினை உணரமுடியும். இரசாயன ஒப்பனைகளுக்கு ஒரு மாற்றாக ரெட் ஒயின் பேஷியல் இன்று உணரப்படுகிறது. 

ஒரு வேளை, இதனை பயன்படுத்தியபின், முகத்தில் ஏதேனும் அலர்ஜி தென்பட்டால், தொடர்ந்து பயன்படுத்துவதை நிறுத்தி விட்டு , சரும  மருத்துவரை அணுகுவது நல்லது.