உதட்டில் ஏற்படும் வெடிப்புகள்

முக அழகில் உதடுகள் முக்கிய இடத்தை பிடிக்கின்றன. அவை வறண்டு தோல் உரிந்து காணப்படும்போது அது முக அழகை பாதிக்கிறது. உதடுகள் வறண்டு போக பல காரணங்கள் உண்டு. வெப்ப நிலை மாற்றம், நாம் பயன்படுத்தும் மருந்துகள் , உதடுகளை அடிக்கடி நனைத்து கொன்டே இருப்பது போன்றவை சில காரணங்களாகும்.

உதட்டில் ஏற்படும் வெடிப்புகள்

உதடுகள் வறண்டு போகும் போது அது உதட்டழற்சியை சிலருக்கு ஏற்படுத்துகிறது. உதட்டின் ஓரத்தில் ஏற்படும் வெடிப்பில் உண்டாகும் தொற்றால் இந்த அழற்சி ஏற்படுகிறது.
எளிய சிகிச்சை கொண்டு இந்த வறட்சியை போக்கலாம். தொடர்ந்து மேலும் மேலும் வெடிப்புகள் ஏற்படும்போது தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

வறண்ட உதட்டின் அறிகுறிகள்:
   * வறட்சி ஏற்படுவது 
   * உதட்டில் செதில் செதிலாக தோன்றுதல் 
   * புண்கள் ஏற்படுவது 
   * வீக்கம் ஏற்படுவது 
   * வெடிப்புகள் தோன்றுவது 
   * இரத்தம் வடிவது 

உதட்டில்  வறட்சி மற்றும் வெடிப்புகள் ஏன் உண்டாகிறது?
மற்ற பகுதிகளை போல உதட்டில் எண்ணெய் சுரப்பிகள் இல்லை. அதனால்  உதடுகள் அடிக்கடி வறண்டு காணப்படுகிறது. உடலில் ஈரப்பதம் குறையும்போது இந்த வெடிப்புகள் அதிகம் தோன்றுவதற்கான வாய்ப்புகள் உண்டாகிறது. குளிர் காலங்களில் உடல் வறட்சி அதிகமாக ஏற்படலாம். அடிக்கடி வெயிலில் சுற்றுவதாலும் இவை ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.

அடிக்கடி உதட்டை உமிழ் நீர் கொண்டு நனைப்பது சிலரின் பழக்கமாக இருக்கலாம். உதட்டில் உள்ள ஈரப்பதத்தை உமிழ் நீர் உறிஞ்சிக் கொள்வதால் மேலும் உதடுகள் வறண்டு காணப்படுகிறது.

வறண்ட உதட்டின் விளைவுகள் :
எல்லா வயதினரும் எல்லா பாலினத்தவரும் இந்த உதட்டு பிரச்சனையால் பாதிக்கப்படலாம். குறிப்பாக வறண்ட சருமம் உள்ளவர்கள் அதிகம் பாதிப்படைவர்.
சில மருந்துகள் அல்லது வைட்டமின் மாத்திரைகள்  பயன்படுத்துவதாலும் இந்த உதட்டு வறட்சி உண்டாகலாம். அவை,
   * வைட்டமின் ஏ 
   * ரெடினாய்டு 
   * லித்தியம் 
   * கீமோதெரபி மருந்துகள் 
   
நீர்வறட்சி மற்றும் குறைந்த ஊட்டச்சத்துக்களால் பாதிக்கப்பட்டவர்கள் உதட்டு வறட்சியால் பாதிக்கப்படலாம். அத்தகையவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

மருத்துவரை எப்போது அணுக வேண்டும்?
வீட்டில் உள்ள தீர்வுகளால்  வறட்சி மற்றும் வெடிப்புகள் குறையாதபோது தோல் மருத்துவரை அணுகுவது நல்லது. 

உதட்டழற்சி ஏற்படும்போது, உதடுகள்,
   *  சிவந்த நிறத்தில் காணப்படும் 
   * வீங்கி இருக்கும்.
   * உதட்டில் வெள்ளை படலம் தோன்றும் 
பல் பிரச்சனை அல்லது அதிக உமிழ் நீர் உற்பத்தி உள்ளவர்களுக்கு வறண்ட உதடு, உதட்டழற்சியாக மாற வாய்ப்பிருக்கிறது. கிருமிகள், வெடிப்புகள் வழியாக உதட்டில் நுழைய வாய்ப்பிருப்பதால் இவை ஏற்படுகிறது. பற்களில் க்ளிப்புகள், பொய்ப்பற்கள் போன்றவற்றை பயன்படுத்துகிறவர்களுக்கு உதட்டழற்சி ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.

வறண்ட உதட்டிற்கான  தீர்வுகள்:
வறண்ட உதடுகளுக்கான தீர்வுகள் வீட்டிலேயே உண்டு. உதடுகள் ஈர்ப்பித்ததுடன் இருப்பது முதல் படியாகும். ஈரப்பதத்தை  ஏற்படுத்த , 
   * உதட்டில் லிப் பாம் தடவலாம்.
   * நிறைய தண்ணீர் பருகலாம்.
   * வாயை எதாவது துணி கொண்டு மூடி கொள்ளலாம்.
   * குளிர்ந்த வெப்ப நிலையை  தவிர்க்கலாம்.
   * அதிக சூரிய ஓளியையும் தவிர்க்கலாம்.
   * வெளியில் செல்லும்போது SPF 15 கொண்ட லிப் பாமை பயன்படுத்துவது நல்லது. இதுவே ஒரு மாய்ஸ்ச்சரைசராகவும் பணியாற்றும். 
உதடுகள் தோல் உரிந்து, வெடிப்புகள் தோன்றும்போது முதலில் ஈரப்பதத்தை செலுத்துங்கள் . மேலும் அழற்சிக்கான அறிகுறிகள் தோன்றும் போது உடனே மருத்துவரிடம் செல்வது நல்லது.