கர்ப்ப காலத்தில் இளநீர் பருகுவதின் நன்மைகள் 

இந்தியாவில் நாரியல் பானி மற்றும் இளநீர் என்று அழைக்கப்படும் இந்த நீர், பல்வேறு ஊட்டச்சத்து நன்மைகளைக் கொண்டது.

கர்ப்ப காலத்தில் இளநீர் பருகுவதின் நன்மைகள் 

தேங்காய் நீர் அல்லது இளநீர் என்பது ஒரு சக்திவாய்ந்த, இனிமையான, மற்றும் தெளிவான சம திரவ அழுத்தம் கொண்ட பானம் ஆகும், உடல் இழந்த நீர்ச்சத்தை  மீட்டுத் தர இந்த பானம் பெரிதும் உதவுகிறது. ஆனால் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலகட்டத்தில் இந்த இளநீரை அருந்தலாமா  என்பது ஒரு கேள்வியாக இருந்து வருகிறது. அதனைப் பற்றியத் தொகுப்பு தான்  இந்த பதிவு. தொடர்ந்து படியுங்கள்.

பெண்கள் கர்ப்பகாலத்தில் இளநீரை அருந்தலாமா?
ஆம், மிதமான அளவு இளநீர் பருகும்போது நன்மையைச் செய்கிறது. இந்த பானம் உடலுக்கு பல்வேறு வைட்டமின் மற்றும் மினரல்களைத் தருகிறது. முதல் மூன்று மாதத்தில் மசக்கையால் ஏற்படும் நீர்சத்து குறைபாட்டை இந்த பானம் தவிர்க்கிறது. கர்ப்பகாலத்தின் பொதுவான அறிகுறியான நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கலை இளநீர் குறைக்கிறது. இளநீரை எந்த நேரத்திலும் பருகலாம், குறிப்பாக காலை நேரத்தில் பருகுவது சிறந்தது. காலை வேளையில் , உங்கள் வயிறு காலியாக இருக்கும் போது மின்னாற்பகுப்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் எளிதில் உறிஞ்சப்படுவதால் இது  ஆரோக்கியமானதாகும். ஒரு கப் இளநீரில் உள்ள ஊட்டச்சத்து விபரங்கள் பின்வருமாறு..

கலோரி - 46
சோடியம் - 252மி கி 
பொட்டசியம் - 600மி கி 
கார்போஹைட்ரேட் - 8.9கிராம் 
டயட்ரி பைபர் - 2.6கிராம் 
சர்க்கரை - 6.26கிராம் 
கால்சியம் - 6%

கர்ப்பகாலத்தில் இளநீர்  பருகுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் :
இளநீரை வெட்டியவுடன் உடனடியாகப்  பருகுவதால் மட்டுமே இந்த பலன்களை அடைய முடியும். இளநீரை வெட்டியவுடன் நீண்ட நேரம் திறந்து   வைத்திருப்பதால், புளித்து போகும். 

இயற்கை சிறுநீர் பிரிப்பு :
கர்ப்பகாலத்தில் , யூரிக் அமிலத்தின் அளவு உடலில் சீராக இருக்க வேண்டும். தேங்காய் நீர் ஒரு டையூரிடிக் மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம், மற்றும் கனிம இருப்பு ஆகியவற்றின் காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு ஊக்குவிக்கிறது . இதனால் சிறுநீர் பாதையில் உள்ள நச்சுக்கள் வெளியேறுகின்றன. இதனால் சிறுநீரக செயல்பாடுகள் மேம்படுகிறது, மேலும், சிறுநீரக கற்கள் மற்றும் தொற்றுகள் உண்டாகாமல் தவிர்க்கப்படுகிறது. சிறுநீரக பாதையில் தொற்றுகள் உண்டாகாமல் தடுப்பதால், பிரசவ காலத்திற்கு முன்கூட்டியே குழந்தை பிறப்பது தவிர்க்கப்படுகிறது.

அத்தியாவசிய எலக்ட்ரோலைட்டுகளை வழங்குகிறது:
கர்ப்பகாலத்தில் மசக்கை, குமட்டல், வாந்தி, வயிற்றுபோக்கு போன்ற காரணத்தால் உடல் நீர்சத்தை இழக்கிறது. இதனால் உடலுக்கு எலக்ட்ரோலைட்டுகளின் தேவை அதிகரிக்கிறது. இளநீர் உடலுக்கு அத்தியாவசியமான 5 எலக்ட்ரோலைட்டுகளைக் கொண்டுள்ளது. மினரல், சோடியம், கால்சியம், பொட்டசியம் , பாச்போரஸ்  போன்றவை இளநீரில் அதிகம் உள்ளதால், உடலை இதமாக்கி, ஆற்றலைத் தருகிறது. இந்த எலெக்ட்ரோலைட்கள் உங்கள் உடலில் மின் உற்பத்தியை அதிகரித்து தசை செயல்பாட்டில் உதவுகின்றன. இளநீர் உங்கள் உடல் pH நிலைகளை பராமரிக்க மற்றும் இரத்த அழுத்தம் அளவை கட்டுப்படுத்த உதவும். இது குளிரூட்டும் குணங்களைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது, இது காய்ச்சல் மற்றும் வாந்தி போன்ற நிலைமைகளை தடுக்கிறது.

நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கலைப் போக்குகிறது :
கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால் , நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்றவை ஏற்படுகின்றன. இளநீரில் அதிகமாக உள்ள நார்ச்சத்து , உடலின் செரிமான மண்டலத்தை வலுவாக்கி, அஜீரணத்தைப் போக்குகிறது, pH அளவை பராமரிக்கிறது மேலும், மலச்சிக்கலைத் தடுக்கிறது. ஆயுர்வேதம்  இளநீரை ஒரு சிறந்த மலமிளக்கியாக கருதுகிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து , நச்சுக்களை வெளியேற்றுகிறது.
தேங்காய் நீர் ஒரு இயற்கையான அமில நடுநிலைப்படுத்தியாகும், எனவே நெஞ்செரிச்சல் தடுக்கப்படுகிறது..

தொற்றுக்களை குணப்படுத்துகிறது :

இளநீர் நிறைந்த வைட்டமின்கள், அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது உங்கள் நோயெதிர்ப்பு அளவை அதிகரிக்கிறது, இது நோய்த்தொற்றுகளிலிருந்து உடலை பாதுகாக்கும் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. இது ஒரு சக்திவாய்ந்த வைரஸ் மோனோலரின் உற்பத்திக்கு பொறுப்பான லாரிக் அமிலம் என்ற ஒரு நடுத்தர சங்கிலி கொழுப்பு அமிலத்தைக் கொண்டுள்ளது என்று மைக்ளே-லீ யங் 'இரு மரங்கள் மற்றும் பன்னிரண்டு பழங்கள்' உங்கள் வாழ்வை எப்போதும் நிரந்தரமாக மாற்றும்'( ‘Two Trees and Twelve Fruits That Will Change Your Life Forever’)என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார். காய்ச்சல், எச்.ஐ.வி போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் நோய்த்தாக்கங்களைக் கொல்வதற்கான ஒரு நோய்-எதிர்ப்பு அமிலம் இந்த லாரிக் அமிலம் , மற்றும் இந்த அமிலம் உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களைத் தக்க வைத்துக் கொள்கிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது :

குறைந்த எலக்ட்ரோலைட்கள் நிலை இரத்தக் கொதிப்பைக் உண்டாக்குகிறது. இளநீர் பருகுவதால் உடலில் பொட்டாசியம், மெக்னீசியம், மற்றும் லாரிக் அமிலம் ஆகியவற்றின் அளவு  அதிகரிக்கிறது, இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இது நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை எதிர்க்கிறது. இளநீரில் உள்ள வைட்டமின்கள், அத்தியாவசிய புரதங்கள், மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் , சர்க்கரை  , இரத்த அழுத்தம் போன்றவற்றின் அளவை கட்டுபடுத்துகிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. பிரசவ நேரம் நெருங்குவதைப் பற்றிய பயம் அதிகரிக்கும்போது, இரத்த அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. ஆகவே கடைசி மூன்று மாதங்களில் , தினமும் இளநீரை ஒரு கிளாஸ் பருகுவதால் நல்ல பலன் கிடைக்கும். 

ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கலாம் :
இளநீரில் கொழுப்பு இல்லை, மேலும் குறைந்த கலோரிகள் கொண்டது. கர்ப்பம் உங்கள் உடலுக்கு கூடுதலான எடையை சேர்க்கிறது, இளநீர் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை  நீக்கம் செய்வதன் மூலம் கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது. இது சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக இருக்கிறது. மேலும் தாயும் கருவில் உள்ள சிசுவும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

இயற்கையான பானம் :
இளநீர் ஒரு சுவை மிகுந்த இயற்கை பானம். இதில் எந்த செயற்கை சுவைகள் அல்லது தீங்கு விளைவிக்கக்கூடிய கூறுகள் இல்லை. அதன் கூறுகள் எதுவும் உங்கள் உடல்நலத்தை பாதிக்காததால் அது உங்களுக்கும் உங்கள் கருவின் வளர்ச்சிக்கும் ஏற்றது.

உடற்பயிற்சிக்கு பின் ஆற்றலைத் தருகிறது :
தேங்காய் நீர் என்பது இயற்கையான ஐசோடோனிக் பானம் ஆகும், இது நீரிழப்பு, சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்படும் போது ஆற்றல் பெற உதவுகிறது. உடலை புத்துணர்ச்சி பெற உதவுகிறது. உங்கள் இடுப்பு தசைகளை மற்றும் மொத்த உடலை வலுவாக பராமரிக்க நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால், இளநீரை ஒரு ஆற்றல் பானமாக தினமும் பருகலாம். நீர்சத்து, உடலின் எலாஸ்டிக் தன்மையை அதிகரிக்கிறது. இதனால், பிரசவத்திற்கு பின் ஏற்படும் ஸ்ட்ரெச் மார்க்ஸை குறைக்கலாம். 

குறைந்த சர்க்கரை அளவு :
அதிகமான சர்க்கரையை எடுத்துக் கொள்வதால், உடலின் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கலாம். மற்ற குளிர்பானங்களைக் காட்டிலும் இளநீரில் குறைந்த அளவு சர்க்கரை தான் உள்ளது. இது கர்ப்பகால உடல் எடையில் எந்த ஒரு அதிகரிப்பையும் செய்வதில்லை .கர்ப்பகாலத்தில் குறைந்த அளவு சர்க்கரை உட்கொள்வதால், கர்ப்பகால நீரிழிவின் அபாயம் குறைக்கப்படுகிறது.

கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது :
இளநீர் , கருவை சுமக்கும் தாய்க்கு தேவையான எல்லா ஊடச்சத்துகளையும் அளிக்கிறது. இதனால், கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியம் வளர்ச்சி போன்றவை தானாக அதிகரிக்கிறது.

பனிக் குட நீர் அளவை மேம்படுத்துகிறது :
இளநீர் பருகுவதால் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி மேம்படுகிறது. கர்ப்பகாலத்தில் கடைசி மூன்று மாதங்களில் இளநீரை பருகுவதால் பனிக் குட நீர் அளவு அதிகரிக்கிறது. இரத்த அளவு மற்றும் ஓட்டம் அதிகரிக்கிறது.
 
கர்ப்பகாலத்தில் இளநீர் பருகுவதால் பக்க விளைவுகள் இருக்கிறதா?
கர்ப்ப காலத்தில் இளநீர் பருகுவதால் எந்த ஒரு தீங்கும் ஏற்படுவதற்கான ஆதரம் இல்லை. மற்ற காய்கறி மற்றும் பழச் சாறுகளைப் போல், இதுவும் பாதுகாப்பானதாகவே கருதப்படுகிறது. ஆனால் இரண்டு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். 

முன்சூல்வலிப்பால் பாதிக்கப்பட்ட கர்ப்பினி பெண்கள் , சோடியம் அதிகம் உள்ள இளநீரை பருகுவது நல்ல தேர்வாக இருக்காது. 

பழுத்த இளநீரின் நீரை பருகுதல் மலச்சிக்கலை உண்டாக்கும். 

கர்ப்பிணி பெண்கள் எவ்வளவு இளநீர் பருகலாம்?
அளவிற்கு மீறினால் அமிர்தமும் விஷம் என்பது போல், மிதமான அளவு உணவே ஆரோக்கியத்திற்கு வழியாகும். தினும் ஒரு கிளாஸ் அளவு இளநீரை பருகலாம். 

இளநீரை வெட்டியவுடன் பருகுவதால் அதில் உள்ள ஊட்டச்சத்துகள் முழுமையாக கிடைக்கும். ஒரு சுத்தமான ஸ்ட்ரா பயன்படுத்தி அதனை பருகலாம் அல்லது, ஒரு கிளாசில் ஊற்றி பருகலாம். பாட்டிலில் அல்லது கேனில் அடைக்கப்பட்டிருக்கும் இளநீரை விட இயற்கையான இளநீரை வாங்கி பருகுவது நல்லது. இளநீரின் சுவை பிடிக்காமல் இருந்தாலோ அல்லது எதிர்மறை சுவை இருந்தாலோ அதனை பருகாமல் இருப்பது நல்லது. 

சரியான தேங்காயை தேர்வு செய்வது எப்படி?

இளநீரின் பலனை முழுமையாக அடைய, சரியான தேங்காயை தேர்வு செய்ய வேண்டும். கீழே குறிப்பிட்டுள்ள சில டிப்ஸ் நல்ல தேங்காயை தேர்வு செய்ய உதவும்.

பிரெஷ்ஷான இளநீர் மிகவும் லேசாக மற்றும் இனிப்பாக இருக்கும். இத்தகைய இளநீரில் தேங்காய் அதிகம் இருக்காது. மிகவும் பழுத்த இளநீர், புளிப்பு சுவை கொண்டதாக இருக்கும்.

தேர்வு முறை :
மிதமான அளவு, சுத்தமான , பச்சை நிறமுடைய இளநீரை தேர்வு செய்தால் அதில் நீர் அதிகம் இருக்கும். பழுப்பு நிற கனமான ஓடுடைய தேங்காய் முத்தினதாக இருக்கும். இதில் நீர் அதிகம் இல்லாமல், உள்ளே தேங்காய் அதிகமாக இருக்கும். 

தண்ணீர்: 
தேங்காயை நன்றாக ஆட்டி பார்ப்பதால் உள்ளே இருக்கும் தண்ணீரின் அளவைத் தெரிந்து கொள்ள முடியும். நல்ல பிரெஷ் தேங்காயில் ஒரு கப்பிற்கு மேல் தண்ணீர் இருக்கும். இளநீரை பதப்படுத்த குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும்.

கர்ப்பகாலத்தில் இளநீரை பருகுவதில் உள்ள கட்டுக்கதைகள் :
நீங்களும் இளநீரைப் பற்றிய சில கட்டுகதைகளை கேள்விப்பட்டிருக்கலாம். அவற்றைப் பற்றிய சில விளக்கங்களை இப்போது பார்க்கலாம்.

கதை 1 : இளநீரில் மந்திர தன்மைகள் உண்டு 
இளநீரில் பல ஊட்டச்சத்துகள் உண்டு. ஆகவே இது கர்ப்பிணிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. 
உண்மை - கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு எல்லா வித அத்தியாவசிய ஊட்டச்சத்துகளும் மினரல்களும் சரியான அளவு கிடைக்க வேண்டும். இளநீரில் எல்லா வித ஊட்டச்சத்து தேவைகளும் பூர்த்தியாகின்றன என்பது ஒரு கட்டுக்கதை. ஒரே ஒரு குறிப்பிட்ட உணவில் எல்லா ஊட்டச்சத்துகளும் இருக்க முடியாது. பல் உணவுகளின் கலவை மூலமாக மட்டுமே தேவையான ஊட்டச்சத்துகள் உடலுக்கு கிடைக்கும். இளநீர் மட்டும் பருகுவதால் எல்லா ஊட்டச்சத்துகளும் உடலுக்கு கிடைக்காது. ஆகவே இளநீருடன் பழங்கள், காய்கறிகள் மற்றும் இதர உணவுகளைச் சேர்த்து எடுத்துக் கொள்வதால் மட்டுமே தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.

கதை 2 : இளநீர் , கருவில் உள்ள குழந்தையின் தலை முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது :
கர்ப்ப காலத்தில் நீங்கள் இளநீர் பருகுவதால் பிறக்கும் குழந்தையின் தலை முடி அடர்த்தியாக இருக்கும்.
உண்மை - குழந்தையின் முடி வளர்ச்சிக்கும் , இளநீர் குடிப்பதற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. இது முழுக்க முழுக்க ஒரு கட்டுக்கதை.

கதை 3 : இளநீர் குடிப்பதால் குழந்தையின் சருமம் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது குடிக்கும் இளநீர் உங்கள் குழந்தைக்கு தெளிவான மற்றும் அழகான தோற்றத்தை கொடுக்கும்.
உண்மை - இளநீர் பருகுவதால், உங்கள் குழந்தையின் சருமம் தெளிவாக மற்றும் அழகாக இருக்க முடியாது. பாரம்பரியம், ஊட்டச்சத்து, பெற்றோரின் ஆரோக்கியம், போன்றவற்றை பொறுத்தே குழந்தையின் சரும ஆரோக்கியம் அமையும். 

கர்ப்ப காலத்தில் தேங்காய் சாப்பிடுவதைக் குறித்த பதிவு :
கர்ப்பகாலத்தில் தேங்காய் சாப்பிடுவதும் ஆரோக்கியமானதாகவே கருதப்படுகிறது.

கர்ப்பகாலத்தில் தேங்காய் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் :
தாய்ப்பால் உற்பத்தி :
பிரசவத்திற்கு பிறகு , தொடர்ச்சியாக தேங்காய் உட்கொள்வதால் தாய்ப்பால் உற்பத்தி அதிகரிக்கிறது. உங்கள் குழந்தைக்கு ஊட்டச்சத்து மிக்க தாய்ப்பால் கிடைக்கிறது. மேலும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் கூட தாய்ப்பால் உற்பத்தி அதிகரிக்கும். தேங்காயில் லாரிக் மற்றும் காப்ரிக் அமிலம் உள்ளதால், பாலூட்டும் காலத்தில் இது மிகவும் நல்லது. இந்த அமிலம் வைரஸ் எதிர்ப்பு, பக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்கிருமி தொற்று எதிர்ப்பு போன்ற தன்மைகளைக் கொண்டிருப்பதால் குழந்தைகள் தொற்று நோயில் இருந்து பாதுகாக்கப்படுகின்றன.

இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது :
கர்ப்ப காலத்தில் இரத்த அளவு இரண்டு மடங்காகிறது. இதனால், கால் மற்றும் பாதங்கள் வீக்க்கமடைகிறது. இரத்த ஓட்டம் சீராக இல்லதோது இந்த நிலைமை மேலும் மோசமடைகிறது. தேங்காய் உட்கொள்வதால் இரத்த ஓட்டம் சீராகிறது, மற்றும் கால் வலி மற்றும் வீக்கம் தடுக்கப்படுகிறது.

செரிமானத்திற்கு உதவுகிறது :
இளநீர் சிறந்த மலமிளக்கியாக இருப்பதால் , இளநீர் மற்றும் தேங்காயை உட்கொள்வதால் மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது. கர்ப்பகாலத்தில் தேங்காயை எந்த ஒரு வடிவத்தில் சாபிட்டாலும் அது நன்மையை மட்டுமே தருகிறது.

நல்ல உறக்கம் :
தேங்காயுடன் நெய் மற்றும் கசகசா சேர்த்து உட்கொள்வதால், நல்ல உறக்கம் கிடைக்கிறது.

வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது :
தேங்காயை மசாலா கலவையுடன் கலந்து உட்கொள்வதால் , கர்ப்பிணி பெண்களுக்கு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.

கர்ப்பகாலத்தில் தேங்காய் பால் பருகுவது :
துருவிய தேங்காயை அரைப்பதால் கிடைக்கும் ஒரு அடர் திரவம் தேங்காய் பால். தெற்காசிய உணவுகளில் தேங்காய் பாலுக்கு ஒரு தனி இடம் உண்டு. பல உணவில் இது ஒரு முக்கிய மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது. தேங்காயில் இருக்கும் பல ஆரோக்கிய நன்மையால் , இதனை எந்த மாதிரியாகவும் நமது உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தேங்காய் பால் உடல் எரிபொருளை அதிகரிக்க உதவுகிறது. தேங்காய் பால் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தாதபட்சத்தில் இதனை எடுத்துக் கொள்வது முற்றிலும் பாதுகாப்பானது.

கர்ப்பகாலத்தில் தேங்காய் பாலின் நன்மைகள் :
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது :
தேங்காய் பால், லாக்டிக் அமிலத்தை கொண்டுள்ளது, இதன் ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிவைரல் கொழுப்பு, கர்ப்பிணி பெண்களுக்கு உதவுகிறது. 

இந்த வகை கொழுப்பு,  உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை மேம்படுத்த உதவுகிறது என்று ஷெர்ரி நீல் தனது கோகனட் ஆயில் அண்ட் இம்ம்யுன் சிஸ்டம் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். நீண்ட சங்கிலி கொழுப்பு அமிலங்கள் இரத்த நாளங்களை நேராக்கி இதயத்தில் எந்த அடைப்புக்களையும் குறைக்கின்றன, இதனால் இதய நிலை மேம்படுத்தப்படுகிறது.

இதர நன்மைகள் ,
இரத்த சோகையை குணப்படுத்தும் இரும்பு சத்து இதில் அதிகமாக உள்ளது.
செரிமான கோளாறுகளை நீக்குகிறது.
தசைகள் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு நெகிழ்வை தருகிறது.
இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த அளவை கட்டுபடுத்துகிறது.
மூட்டு வலியை குறைக்கிறது.
உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

பிரெஷ் தேங்காய் பாலை எப்படி தயாரிப்பது ?
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தேங்காய் பாலை வாங்கி பயன்படுத்துவதை விட வீட்டில் தயாரித்து பயன்படுத்துவது மிகவும் நல்லது. 
ஒரு தேங்காயை முழுவது துருவி எடுத்துக் கொண்டு அதில் அரை கப் வெந்நீர் சேர்த்துக் கொள்ளவும்.
இந்த கலவையை நன்றாக ஆற விடவும்.
இந்த கலவை நன்றாக ஆறியவுடன் , அந்த நீரை பிழிந்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
நேரடியாக தேங்காயில் இருந்து எடுக்கப்பட்ட பாலில் 450 கலோரிகள் மற்றும் 50 கிராம் கொழுப்பு உள்ளது. ஒரு கப்(சராசரியாக 240கிராம்)  தேங்காய் பாலில் உள்ள ஊட்டச்சத்து விபரங்கள்:
கலோரி - 550
கொழுப்பு - 50.2கிராம் 
கொலஸ் ட்ரால் - 0 
சோடியம் - 40கிராம் 
கார்போஹைட்ரேட் - 14கிராம்
புரதம் - 6கிராம்
வைட்டமின் சி - 11%
இரும்புசத்து - 22%
கால்சியம் - 4%

கேனில் அடைக்கப்பட்ட தேங்காய் பால் கர்ப்பகாலத்தில் நல்லதா?

கேனில் அடைக்கப்பட்ட  தேங்காய் பால் கர்ப்பத்தின் போது பாதுகாப்பாக உள்ளது, ஆனால் நீங்கள் அதனை பயன்படுத்துவதற்கு முன்,  திறக்கப்படாத , துருப்பிடிக்காத, காலாவதியான அல்லது பாதுகாப்பற்ற வெப்பநிலையில் சேமித்து வைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தேங்காய் பால் கணிசமான அளவில் நிறைவுற்ற கொழுப்புகளைக் கொண்டுள்ளது, அதாவது ஒரு தேக்கரண்டி 3 கிராம் அளவு உள்ளது. மிக அதிகமான நிறைவுற்ற கொழுப்பு எடுத்துக் கொள்வதால் உடலில் நல்ல மற்றும் கெட்ட கொழுப்பு அளவுகளை அதிகரிக்கும். கேன் தேங்காய் பாலை எடுத்துக் கொள்ளும்போது, உங்கள் தினசரி உட்கொள்ளல் அளவை மீறாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். 

கேனில் உள்ள தேங்காய் பாலை தேர்வு செய்யக் கூடாது என்பதற்கான மற்ற காரணங்கள் :

பிஸ்பெனோல் - ஏ (BPA)
இது வழக்கமாக பேக்கிங் செய்யப்பட்ட உணவை அடைக்க பயன்படுத்தும் கேன்களின் உட்புறம் பயன்படுத்தப்படும் ஒரு இரசாயனமாகும். இந்த BPA படிப்படியாக தேங்காய் பால், காய்கறிகள், தக்காளி மற்றும் சூப்கள் போன்ற அமில, கொழுப்பு, அல்லது உப்பு உணவுகளில் கலக்க நேரிடும். ஒரு ஆய்வில், தாய்மார்களின் அதிக BPA அளவு மற்றும் குழந்தைகளின் நரம்பு தொடர்பான பிரச்சைகளுக்கு இடையில் தொடர்பு இருப்பதாக கூறுகிறது. 

கோந்து :
குவார் என்ற கோந்து கேனில் அடைக்கப்பட்ட தேங்காய் பாலில் சேர்க்கப்படுகிறது. இதனை உட்கொள்வதால், அடிவயிற்றில் வலி, அஜீரணம், வாய்வு, வயிற்றுபோக்கு போன்றவை ஏற்படும். ஒரு மருத்துவ பரிசோதனையில், குடல் பிரச்சினைகள் இருந்த நோயாளிகள் தங்களது உணவில் கேனில் உள்ள  தேங்காய் பால் பயன்படுத்துவதை நிறுத்தும்போது முன்னேற்றம் காண்பித்தனர்.

பிருடோஸ் உள்ளீர்ப்பு குறைபாடு :
இது சிறு குடல் வழியாக எடுத்துச் செல்லப்படும் பிருக்டோஸ் குறைபாட்டால் ஏற்படும் ஒரு செரிமான கோளாறாகும். பிருக்டோஸ் என்பது பழங்கள், காய்கறிகள், தேன் போன்றவற்றில் காணப்படும் ஒரு சர்க்கரை ஆகும். குடலில் அதிகரித்த பிருக்டோஸ் அளவால் பக்டீரியா பெருக்கம் ஏற்படுகின்றன. இதனால் குடலில் குறைந்த அளவு தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இதனால் அழற்சி குடல் நோய் (IBD) மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS)   போன்ற நோயால் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். nutritiondata.com வலைத்தளத்தின் படி, தேங்காய் பாலில் சர்க்கரை உள்ளது. ஆகவே அழற்சி குடல் நோய் (IBD) மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) போன்ற நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் இதனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

புகோ சாறு கர்பிணிப் பெண்களுக்கு ஏற்றதா?
புகோ சாறு என்பது இளநீருடன் அதன் தேங்காய் மற்றும் பாலை சேர்த்து தயாரிக்கும் ஒரு சாறு ஆகும். இது பிலிப்பின்ஸ் நாட்டில் பிரபலமான ஒரு பானம் ஆகும். இது புத்துணர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை அளிக்கக் கூடிய ஒரு பானம் ஆகும். தேங்காய் நீர், தேங்காய் மற்றும் தேங்காய் பால் மற்றும் சர்க்கரையை சேர்த்து ஐஸ் கட்டிகளுடன் நன்றாக கலந்து அரைத்துக் கொள்ள வேண்டும். ஐஸ் கட்டி நன்றாக கரைந்தவுடன் பரிமாறவும். இதில் தேங்காய் நீர், தேங்காய் மற்றும் அதன் பால் சேர்க்கப்பட்டுள்ளதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் ஏற்றது. 

உங்களுக்கு தேங்காய் மற்றும் இளநீர் பற்றிய நல்ல தகவல் கிடைத்திருக்கும் என்று நம்புகிறோம். தொடர்ந்து படியுங்கள்.