புத்தாண்டு கொண்டாட்டங்கள் பற்றிய சில ஆச்சர்ய தகவல்கள்!

புத்தாண்டு பற்றிய சில ஆச்சர்ய தகவல்களை அறிய இங்கே படியுங்கள்.

புத்தாண்டு கொண்டாட்டங்கள் பற்றிய சில ஆச்சர்ய தகவல்கள்!

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டத் தொடங்கிய இந்த நேரத்தில் புத்தாண்டு பற்றிய சில ஆச்சர்ய தகவல்களை இங்கே பார்க்கலாம். 

ஜூலியஸ் சீசர் தான் ஜனவரி 1 ஆம் தேதியை ஆண்டின் முதல் நாளாக (புத்தாண்டாக)கிமு 46 இல் அறிவித்தார். ரோமானியக் கடவுளான ஜானஸை கௌரவிப்பதற்காக சீசர், இதை செய்தார். ஆனால் இடைக்காலத்தில் ஐரோப்பாவில் உள்ள சில கிறிஸ்தவத் தலைவர்கள் புத்தாண்டை ஜனவரி 1 ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 25 ஆம் தேதிக்கு மாற்றினர்.பின்னர் 1582 ஆம் ஆண்டில், போப் கிரிகோரி XIII, ஜனவரி 1 ஆம் தேதியை புத்தாண்டு தினமாக மீண்டும் கொண்டு வந்தார். 

புத்தாண்டு என்றாலே கொண்டாட்டங்களுக்கு அடுத்த படியாக மக்கள் தீர்மானங்களை எடுப்பதும், பின் அதை மறப்பதும் தான் வாடிக்கையாகிறது. நியூ இயர் ரிசோலியுசன் மக்களின் மத்தியில் பிரபலமாகி விட்டது. இந்த பழக்கம் எவ்வளவு நாளாக இருக்கிறது தெரியமா? சுமார் 4,000 ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளதாம். இந்த பழக்கம் பண்டைய பாபிலோனியர்களிடமிருந்து வந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பாபிலோனியர்கள் கடவுளின் தயவைப் பெறுவதற்காகவும், சரியான முறையில் ஆண்டைத் தொடங்குவதற்காகவும் இந்த பழக்க வழக்கங்களை கொண்டு இருந்தனர். 

நாற்பத்தைந்து சதவீத அமெரிக்கர்கள் புத்தாண்டு தீர்மானங்களை மேற்கொள்வதாக ஆய்வு கூறுகிறது. அவற்றில் முக்கியத் தீர்மானங்கள் என்னவென்றால், உடல் எடையைக் குறைத்தல், குறைவாகச் செலவு செய்தல் மற்றும் அதிகமாகச் சேமித்தல், ஆரோக்கியமாக இருப்பது மற்றும் புகைப்பிடிப்பதை நிறுத்துதல் போன்றவைகள் தான். ஆனால் இதில் பாதி மக்கள், ஜனவரி இரண்டாவது வாரத்திலேயே இந்த தீர்மானங்களை கைவிட்டுவிடுகின்றனர்.

1907 ஆம் ஆண்டு அமெரிக்காவில், பட்டாசுக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதனால் அதற்கு பதிலாக ஒரு எலக்ட்ரீஷியன் 700 பவுண்டுகள் எடையுள்ள , மரம் மற்றும் இரும்பாலான பந்தைக் உருவாக்கி, அதில் 100 எல்ஈடி விளக்குகளை வைத்து டிசைன் செய்தார். பின் பட்டாசுகளுக்கு பதிலாக, இந்த பந்து , டைம்ஸ் ஸ்குவரில், ஒரு கொடிக் கம்பத்தில் இருந்து கீழே விடப்பட்டு, மக்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். அந்த நள்ளிரவில் இதைப் பார்க்க சுமார் 1 மில்லியன் மக்கள் கூடியிருந்தார்கள்.

நேஷனல் இன்சூரன்ஸ் க்ரைம் அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, புத்தாண்டு தினத்தில் மற்ற நாட்களை விட வாகனங்கள் அதிகமாக திருடப்படுகின்றன. எனவே புத்தாண்டு கொண்டாடத்தில் இருந்தாலும், உங்கள் வண்டிகளின் மீது கவனங்களை வைத்து கொள்ளுங்கள்.