ஆண்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்பும் ரகசியங்கள்

பெண்களுக்கு எதை விரும்புகின்றனர்? இந்த கேள்விக்கான பதிலைத் தேடும் ஆண்களுக்கு இந்த பதிவில் பதில் உள்ளது.

ஆண்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்பும் ரகசியங்கள்

பெண்களின் விருப்பங்கள் பற்றிய 19 ரகசியங்கள் இங்கே ஒன்றின் பின் ஒன்றாக கொடுக்கப்பட்டுள்ளன. சந்தோஷமான மற்றும் ஆரோக்கியமான ஜோடிகளைப் பற்றிய ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த ரகசியங்கள் அறியப்பட்டது.

ஆறுதலாக இருக்கும் ஆண்கள்:
சென்சிடிவ் சுபாவம் கொண்ட ஆண்களை பெண்கள் அதிகம் பாராட்டுவார்கள். குறிப்பாக அவர்கள் சோகமாக இருக்கும்போது, அவர்கள் தோளை சுற்றி கைகளைக் கோர்த்து அவர்களுக்கு ஒரு ஆறுதலைத் தாருங்கள். ஆறுதலும் சமாதானமும், உங்களை இணைக்க ஒரு சிறந்த வழியாகும்.

தீரச்செயலுக்கு ஒரு இடம் உண்டு:
காதல் என்று வரும்போது, பாரம்பரிய வீர பண்புகள் நிறைந்த ஒரு ஆடவனை பெண்கள் அதிகம் விரும்புவார்கள். காதல் பற்றி பல புத்தகங்களை எழுதிய உளவியல் நிபுணர் டயானா கிர்சினெர், பி.எச்.டி, கூறுவது என்னவென்றால் , இத்தகைய பண்புகளை பெண்கள் குறிப்பாக திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ள, காதலின் முதல் கட்டத்தில் இருப்பவர்கள் பெரிதும் விரும்புகின்றனர். பெண்களை ஆண்கள் முன்னின்று வழி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். உதாரணத்திற்கு, பெண்களால் ஒரு கதவைத் திறக்க முடியும், ஒரு நாற்காலியை இழுக்க முடியும், ஆனால் அவர்கள் அப்படி செய்யத் தயங்கும்போது , ஆண்கள் அவர்களுக்கு இதனைச் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதை அறிந்து கொண்டு அதற்கேற்றபடி நடப்பவர்கள்  ஜென்டில்மேன் என்று பெண்கள் நினைக்கின்றனர்.

கவரும்படி உடை உடுத்துங்கள் :
ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கலாம். ஆனால் ஆண்கள் எப்போதும் தங்கள் உடை மற்றும் அழகில் கவனம் செலுத்த வேண்டும். பெண்களின் முதல் பார்வையில் இருந்து தேனிலவிற்கு பிறகும் உங்கள் தேவதைக்கு பிடித்தமான வகையில் உடைகள் உடுத்த வேண்டும். அவளுக்கு பிடித்த விதத்தில் உங்களை நீங்கள் வடிவமைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் டைட் ஜீன்ஸ் அணிவது தான் அவளுக்கு பிடிக்கும் என்றால் அதனை நீங்கள் உடுத்தியே தீர வேண்டும்.

சிவப்பு அணியும் ஆண்களுக்கு பெண்கள் விரைவில் கிடைப்பார்கள்:
இதனை பெண்கள் சொல்லவில்லை. பெண்களின் உள்ளுணர்வை சோதித்த உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். சிவப்பு நிறம், ஆண்களை சக்திமிக்கவராக, கவர்ச்சியானவராக மற்றும் பெண்களுக்கு பிடித்தமானவராக வெளிபடுத்துவதாக ஒரு சுவாரஸ்யமான ஆய்வு கூறுகிறது. ஆனாலும் அதில் ஒரு எச்சரிக்கை உள்ளது. சிவப்பு நிறத்தில் பொதுவாக ஆண்கள் அழகாக தோன்றுவதில்லை. ஆகவே இந்த குறிப்பை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் உங்களைப் பொறுத்தது.

உங்கள் தவறுகளை மறைக்க வேண்டாம்:
ஒரு நல்ல மனிதன் மிக நல்ல மனிதானாக மாற்றம் பெறுவதைப் போல் வேறு ஒரு சிறந்த விஷயம் ஒரு பெண்ணைக் கவருவதில்லை. இதனைக் கூறுவது அன்பு குரு டயானா கிர்சினெர். "பெண்கள் தனிப்பட்ட வளர்ச்சியை நேசிக்கிறார்கள், அவர்கள் சிந்தனையும் உணர்ச்சிகளும் உள்ள ஒருவரை நேசிக்கிறார்கள்." ஒரு மனிதன் தன் குறைபாட்டை உணர்ந்து கொண்டால், அதை அவள் விரும்புகிறாள் - உதாரணமாக, ஒரு குறுகிய மனப்போக்கு, அல்லது வேலைக்குப் பிறகு ஒரு தவறான மனநிலையை - அதை உரையாற்ற முயற்சிக்கும் போது அதை நேசிக்கிறாள்.

அவள் உலகத்தை நீங்கள் உருவாக்க வேண்டாம் :
ஒரு பெண்ணை எதாவது ஒன்று பாதிக்கும்போது, அவள் அதைப் பற்றி உங்களிடம் கூறும்போது நீங்கள் காது கொடுத்து கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அதைத் தவிர வேறு அறிவுரையை அவள் ஏற்பதில்லை. 
"விஷயங்களை சரிசெய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக ஆண்கள் உணர்கிறார்கள், ஏனெனில் அவர்கள் தீர்வை அடிப்படையாகக் கொண்டவர்கள்" என்கிறார் கிர்சன்னர். "ஆனால் ஒரு பெண், உண்மையில் அவள் சொல்வதை அவளின் துணை காது கொடுத்து கேட்பதையே அற்புதமாக நினைக்கிறாள். அது உறவை ஆழப்படுத்துகிறது."

தலை அசைப்பது மட்டும் போதாது :
கேட்பது முக்கியம், ஆனால் அவள் கேட்கிறாள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். தலை ஆட்டுவது மட்டும் போதாது. அவள் இடையில் நிறுத்தும்போது, அவளைக் கருணையுடன், கவனிக்க வேண்டும் என்று அவள் விரும்புவதாக கிர்சினெர் கூறுகிறார். அவளுடைய முதலாளி அவளுக்கு ஒரு கடினமான நேரம் கொடுத்ததால் அவள் வருத்தப்படுகிறாள் என்று சொன்னால், "நீ இன்று கடினமான வேலையை செய்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன் :என்று நீங்கள் சொல்ல வேண்டும். இதற்கான தீர்வை சொல்வதற்கு உங்கள் மனதில் எழும் உணர்வை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். 

அவகாசம் கொடுங்கள் :
ஒரு பெண்ணிற்கு பாலியல் உணர்வு திருமணத்திற்கு பின் உடனே தோன்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்கள் உறவில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நம்பிக்கை மற்றும் புரிதல் ஏற்பட்ட பின் அதனைத் தொடங்க ஒரு பெண் நினைப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை.  

நிதானத்தை அதிகம் விரும்புவார்கள்:
பெண்கள் எதிலும் நிதானைத்தை விரும்புவார்கள். குறிப்பாக தன் கணவருடன் பேசுவது, தொடுவது அவருடன் நேரம் செலவழிப்பது என்ற ரீதியில் தான் அவர்கள் அன்பு இருக்கும். ஆனால் ஆண்கள் பெண்களுடன் துரிதமாக உறவில் ஈடுபட நினைப்பார்கள். அவர்கள் ரொமான்ஸ் செய்வதை மட்டுமே அந்த நேரத்தில் எதிர்பார்ப்பார்கள்.

பாதுகாப்பு:
இந்த பாதுகாப்பு உணர்வைப் பற்றி இருவரும் யோசிக்க வேண்டும். ஆண்கள் பெண்களை பாதுகாப்பாக அரவணைப்பதை எல்லா பெண்ணும் விரும்புவார்கள். 

அவளுடைய விருப்பத்தை தெரிந்து கொள்ளுங்கள்:
பெண்கள் எப்போதும் தங்கள் மனதில் உள்ளதை இரவில் கணவருடன் பகிர்ந்து கொள்வதை விரும்புவார்கள். அந்த நேரத்தில் தான் கணவரை தன் பக்கம் கொண்டு வர முயற்சிப்பார்கள். அவளுடைய விருப்பம் என்ன என்பதை அவளிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். உன்னை நான் அதிகம் நேசிக்கிறேன் என்று அவளிடம் கூறுங்கள்.

பதட்டத்தை தவிர்த்து விடுங்கள்:
அவள் விருப்பத்தை உங்கள் நிறைவேற்ற முடியாத தருணத்தில் வீண் பதட்டம் வேண்டாம். இருவரும் கலந்து பேசுங்கள். உங்களால் அவள் விருப்பத்தை நிறைவேற்ற முடியாத காரணத்தை சொல்லி புரிய வையுங்கள்.

பிரதிபலிப்பதும் காதலின் ஒரு அளவுகோல் :

பிரதிபலிப்பு என்பது ஒரு சிறந்த சாயலை உருவாக்கும். உங்கள் மனநிலை மற்றும் நகர்வுகளை பிரதிபலிப்பதன் மூலம், உங்களைப் பற்றி அவர் எவ்வாறு உணருகிறார் என்பதை ஒரு பெண் அடிக்கடி தெரிவிக்கிறார்.. அவள் உங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்யலாம், உங்களுக்கு பிடித்த நிறத்தை அணியலாம் அல்லது நீங்கள் அவளை அணைக்கும்போது உங்களைப் பார்த்து புன்னகை செய்யலாம், உங்களை போல் அவள் பிரதிபலிப்பதால் அவளுக்கு உங்களைப் பிடிக்கும் என்பதை உங்களுக்கு எளிதாக உணர்த்தலாம்.

உங்கள் சட்டை ஒரு காந்தமாக இருக்கலாம் :
உங்கள் துணை, நீங்கள் அணியும் ஸ்வெட்டர் அல்லது சட்டையை எடுத்து அடிக்கடி அணிந்து கொள்ளலாம். ஆண்களின் சென்ட் வாசனை சில பெண்களுக்கு ஒரு ரிலாக்ஸ் உணர்வைத் தரும் என்று சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

திரும்ப திரும்ப சொல்லுங்கள் :
பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்பதை ஆண்கள் அடிக்கடி சொல்ல வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆண்கள் சொல்வதை விட, ஆண்கள் அவர்களை கவனிக்கிறார்கள் என்பதையும் பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். பெண்கள் அழகாக உடை அணிந்தால் நீங்கள் பாராட்ட வேண்டுமென்று என்று எதிர்பார்க்கின்றனர். அவர்களுடைய புதிய ஹேர் கட், புதிய உடற்கட்டு போன்றவற்றைப் பற்றி அவர்களுக்கு உங்கள் பாராட்டை தெரிவித்துக் கொண்டே இருங்கள்.

உங்கள் உறவைப் பற்றி பேசுவதற்கு பயம் வேண்டாம்:
உங்கள் இருவருக்குமான உறவைப் பற்றி உங்கள் துணைவி உங்களிடம் பேசும்போது, நீங்கள் எதோ தவறு செய்து விட்டீர்கள் என்று நினைக்க வேண்டாம். உங்கள் வாழ்க்கையில் எது சரியாக நடக்கிறது, எது தவறாக நடக்கிறது, எல்லாம் எப்படி சென்று கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி உங்கள் துணை உங்களிடம் கலந்து பேசுவது ஒரு நல்ல விஷயம் தான். ஒரு நேர்மையான வெளிப்படையான கலந்துரையாடல் எப்போதும் நன்மை செய்யும். இதனால் இருவரும் நெருக்கமாக முடியும்.

கண்ணை பார்த்து பேசுங்கள் :
நீங்கள் உங்கள் துணையின் பக்கத்தில் அமர்ந்து பேசுவதை சௌகரியமாக உணரலாம். ஆனால் பெண்கள் உங்கள் முகம் பார்த்து பேசுவதை மட்டுமே விரும்புகின்றனர். சமீபத்திய கண்டுபிடிப்பான மொபைல் வீடியோ சாட்டிங் பற்றி பேசவில்லை. நேரடியாக கண்களைப் பார்த்து பேசுவதை பெண்கள் விரும்புகின்றனர். அதுவும் இருவரும் தனிமையில் இருக்கும்போது பெண்களின் கண்களைப் பார்த்து பேசும் ஆண்களை அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

எந்த ஒரு தருணத்தையும் மறக்க வேண்டாம்: 

ஒரு பெண் தனக்கு இந்த உறவில் தொடர்வது பிடிக்கிறது என்று அடிக்கடி கூற மாட்டாள். ஒரு முறை தான் சொல்வாள். இதனை பற்றிய பேச்சு அடுத்த முறை வரும்போது, நீங்களாகவே முன் வந்து அடுத்த விஷயங்களைப் பற்றி பேச வேண்டும்.

காதல் என்பது எளிது, அது தானாக வரட்டும்:
ஒரு பெண்  எப்போதும் காதல் தருணங்களை அதிகம் விரும்புவாள். அது காதலிக்கத் தொடங்கி இரண்டு மாதங்கள் ஆனாலும் இருபது வருடம் ஆனாலும், இந்த விருப்பம் அவளுக்கு எப்போதும் இருக்கும். பூக்கள் பரிசளிப்பது, ஒரு அழகான டின்னருக்கு வெளியில் செல்வது, காதல் கவிதைகள் கூறுவது, (உங்களுடைய கவிதையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை ), போன்றவை எப்போதும் ஒரு இனிமையான அனுபவத்தை தரும். இத்தகைய ரொமாண்டிக் தருணங்களை பெண்கள் எப்போதுமே விரும்புவார்கள். மற்றும் இதற்கான பாராட்டை அவர்கள் உங்களுக்கு நிச்சயம் வழங்குவார்கள்.