மறை கருச்சிதைவுக்கு பின்னர் கருத்தரித்தல்

திருமணத்திற்கு பிறகு எல்லா குடும்பத்திலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒரு செய்தி, குழந்தை பிறப்பு.

மறை கருச்சிதைவுக்கு பின்னர் கருத்தரித்தல்

குழந்தை பிறப்பைப் பற்றிய செய்தி ஒரு சிலருக்கு சந்தோஷத்தைக் கொடுக்கலாம். ஒரு சிலருக்கு துன்பத்தைக் கொடுக்கலாம். ஆம், குழந்தை பிறப்பு அறிகுறிகள் நேர்மறை பதிலைத் தருவதால் குடும்பத்தில் அனைவரும் ஆனந்தம் அடைவார்கள். அதுவே, இதன் அறிகுறிகளில் எதிர்மறை முடிவுகள் வெளியாகும்போது,அனைவருக்கும் ஒரு வித ஏமாற்றம் கிடைக்கும். ஒரு சில சந்தர்ப்பங்களில், அறிகுறிகள் நேர்மறை முடிவாக இருந்தாலும், அடுத்த சில வாரங்களில் கருச்சிதைவு போன்ற துக்கமான சூழலை கடக்கும்போது அது மிகவும் வலியையும் வேதனையையும் தரக் கூடியதாகும். குறிப்பாக மறை கருச்சிதைவு அதிக ஏமாற்றத்தைத் தரக் கூடியதாக உள்ளது. அதனைப் பற்றிய பதிவு தான் இது.

மறை கருச்சிதைவு என்றால் என்ன?
எந்த ஒரு கர்ப்பத்திலும் இந்த மறை கருச்சிதைவு ஏற்படலாம். கருத்தரிப்பிற்கு பின், கரு முட்டைகள் கருப்பைக்குள் பொருத்தப்படும். இந்த நிகழ்வுக்கு முன்னே ஏற்படும் எதாவது கோளாறால் கர்ப்பம் தடைபடலாம். கருச்சிதைவு உண்டாகலாம். 

கரு முட்டையின் வளர்ச்சி தவறுவதால் அல்லது கருப்பை காலியாக இருப்பதால் இந்த நிலை உண்டாகலாம்.
சில நேரம் கருமுட்டை வளர்ச்சி இருந்தாலும் அதன் முன்னேற்றம் திடீரென்று பாதிக்கப்படலாம் 
இந்த சூழ்நிலையை ஒரு தாயால் உணர முடியாததால் இதனை அமைதியான கருச்சிதைவு என்றும் கூறுவார்.

மறை கருச்சிதைவின் அறிகுறிகள் :
பொதுவான கருச்சிதைவிற்கான அறிகுறிகள் இவற்றில் தென்படுவதில்லை.
கடுமையான வலி, உதிரப்போக்கு, கருப்பை திசு வெளியேற்றம் போன்ற அறிகுறிகள் பொதுவான கருச்சிதைவு அறிகுறிகள். இவை இந்த மறை கருச்சிதைவில் காணப்படுவதில்லை. 
மாறாக இவற்றின் அறிகுறிகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. நஞ்சுக்கொடி ஹார்மோன் சுரப்பை நிறுத்தாமல் இருக்கும். அதனால் கர்ப்ப அறிகுறிகள் தொடர்ந்து இருக்கும்.
2. குமட்டல், வாந்தி , சோர்வு, மென்மையான மார்பு போன்றவைதிடீரென்று முற்றிலும் விலகிவிட்டதாக சில பெண்கள் கூறுவர்.
3. சில நேரங்களில் பழுப்பு நிற உதிரப்போக்கு ஏற்படலாம்.
4. கருவின் இதய துடிப்பு குறைவதும் மறை கருச்சிதைவிற்கான அறிகுறியாகும். குழந்தை வளர்ச்சியில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பதை அல்ட்ரா சவுண்ட் சிகிச்சையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஏன் இப்படி நடக்கிறது :
கர்ப்பகாலத்தின் முதல் கட்டத்தில் ஏற்படும் கோளாறுகளால் இந்த மறை கருச்சிதைவு உண்டாகிறது. 
இது தவறான எண்ணிக்கையிலான குரோமோசோம்களின் விளைவாக இருக்கலாம். அல்லது ஒரு குரோமோசோம் காணாமல் போவதாக இருக்கலாம். அல்லது அது அசலாக இல்லாமல் நகலாக இருக்கலாம். இந்த விஷயத்தில், குரோமோசோம்கள் எடுத்துச் செல்லும் மரபணுக்கள் கருவிற்கு பொருந்தாமல் இருக்கலாம்.
கர்ப்பகாலத்தின் பிந்தைய காலகட்டத்தில் இந்த மறை கருச்சிதைவு ஏற்பட ருபெல்லா அல்லது பார்வோவைரஸ் போன்ற தொற்றுக்கள் காரணமாக இருக்கலாம். தேவைப்பட்டால், ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் (டார்ச்), சைட்டோமெகலோவைரஸ், டோக்ஸோபிளாஸ்மோசிஸ் அல்லது ரூபெல்லா ஆகியவற்றிற்கான ஒரு இரத்த பரிசோதனைக்கு நீங்கள் செல்லலாம். இந்த பரிசோதனை தொற்றுநோயைக் கண்டறிய உதவும்.
அல்ட்ரா சவுண்ட் சிகிச்சையில் மறை கருச்சிதைவு கண்டுபிடிக்கப்பட்டால், மறுமுறை அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை செய்து அதனை உறுதி செய்வது வழக்கம்.

கருச்சிதைவைக் கண்டறிந்தவுடன் என்ன நிகழும் :

முடிவாக உங்கள் மறை கருச்சிதைவு உறுதி செய்யப்பட்டால், அதன் இயல்பை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சில பெண்கள் ஈஆர்பிசி (Evacuation of Retained Products of Conception) என்னும் ஒரு சிறிய அறுவை சிகிச்சையை மேற்கொண்டு, கருச்சிதைவால் கருப்பையில் தங்கிய கழிவுகளைப் போக்க முனைகின்றனர். இதனால் கரு திசுக்கள் கருப்பையில் இருந்து முற்றிலும் வெளியேற்றப்படுகின்றன. இந்த கரு திசுக்களை நீண்ட நாட்கள் வெளியேற்றாமல் இருப்பதால், தொற்று மற்றும் அதிகமான உதிரப்போக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது.
உதிரபோக்கை குறைக்க டி & சி முறையை பின்பற்றி திசுக்களை வெளியேற்றலாம்.
அறுவை சிகிச்சைக்கு முன் மயக்க மருந்து கொடுக்கப்படும்.
மறுமுறை இது போன்ற கருச்சிதைவுகள் ஏற்படுவதைப் பற்றிய பயம் என்பது இயற்கையாக மனதில் எழும்.
இந்த சிகிச்சைக்கு பின் 6 முதல் 8 வாரங்கள் கழித்து அடுத்த முறை கருவுருவதற்காக முயற்சிக்கலாம். இதனால் மறுமுறை கருச்சிதைவு ஏற்படும் அபாயம் தவிர்க்கப்படும்.
எதிலும் அவசரம் வேண்டாம். நிதானமாக யோசித்து சரியான முடிவை எடுங்கள்.
 
மறை கருச்சிதைவிற்கு பின் மறுமுறை கருத்தரிப்பது பற்றி :
அல்ட்ரா சவுண்ட் மூலம் மறை கருச்சிதைவைப் பற்றி எளிதாக அறிந்து கொள்ள முடியும்.
இதனால் மருத்துவ சிகிச்சைகள் மூலம் வருங்கால கருத்தரிப்பை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
தொடர்ந்து அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை எடுத்துக் கொள்வதால் பிற்காலத்தில் கருச்சிதைவு தடுக்கப்படும்.
மறை கருச்சிதைவிற்கு காரணமான மரபணு அசாதாரணம் என்பது கருவால் ஏற்படுவது மட்டும் தான். இதற்கு தாய் அல்லது தந்தை ஆகிய இருவரும் காரணமானவர்கள் இல்லை.
 
மறை கருச்சிதைவிற்கு பின் எந்த ஒரு பெண்ணும் இயல்பான மற்ற பெண்களைப் போல் பிரசவ காலத்தை அனுபவிக்கலாம். இதனால் உங்கள நம்பிக்கையை இழந்து துயரம் அடைய வேண்டாம். மருத்துவரின் அறிவுரைப்படி நீங்கள் நடந்துகொள்வதால் நேர்மறை விளைவுகள் கிடைக்கும். இதனால், நிச்சயமாக கருச்சிதைவிற்கு பிறகு கர்ப்பம் உண்டாகும். நீங்கள் உங்கள் துணையுடன் இணைந்து மீண்டும் ஒரு அழகான வாழ்க்கையைத் தொடங்கலாம். எந்த ஒரு சந்தேகம் இருந்தாலும், உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து அதனைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அவர் உங்கள் சந்தேகத்தைப் போக்கி நல்ல தெளிவைக் கொடுப்பார். 

தாய்மார்கள் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்வதால் இன்னும் நிறைய பேர் இதனைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.