திரவ தங்கத்தின் அற்புதங்கள்

தேனை திரவத் தங்கம் என்று அழைப்பார்கள் ஏனென்றால் அந்தப் பொன்னிற திரவத்திலுள்ள மருத்துவ குணங்களும், ஊட்டச்சத்துக்களுமே காரணம்.

திரவ தங்கத்தின் அற்புதங்கள்

திரவ தங்கத்தின் அற்புதங்கள்:

தேனை திரவத் தங்கம் என்று அழைப்பார்கள். ஏனென்றால் அந்தப் பொன்னிற திரவத்திலுள்ள மருத்துவ குணங்களும், ஊட்டச்சத்துக்களுமே காரணம். தேன் என்பது மலர்களின் மகரந்தங்களிருந்து உற்பத்தியாகும் ஒரு வகை இனிப்பான திரவம். இது ஆப்பிரிக்காவில் முதன்முதலில் தோன்றியது. வேதங்களிலும், புராணங்களிலும், மற்றும் பண்டைய நாகரிகங்களில் உள்ள குறிப்புகளில் தேனின் மகத்துவமும் அதனுடைய மருத்துவ  குணத்தை பற்றிய செய்திகளும் பல நூற்றாண்டுக்கு முன்னரே சர்க்கரை கண்டுபிடிப்பதற்கு முன்னர் இதை  இனிப்பிற்காக உணவிலும், நோய் தீர்க்கும் மருந்தாக மருந்திலும் சேர்த்துக் கொண்டனர் என்று தெளிவுபடுத்துகின்றது, உலகிலுள்ள அனைத்து பகுதிகளிலும் இருக்கும் மக்களும் தேனை பயன்படுத்துகின்றனர்.  தேனை திரவத் தங்கம் என்று ஏன் அழைத்தார்கள் என்று இக்கட்டுரையில் காண்போம்.

தேனின் வகைகள்:

தேனின் வகைகளை அவற்றின் நிறத்தைக் கொண்டு  மூன்று வகைகளாக தரம் பிரிக்கின்றார்கள், அவை பொன்னிறமான நிறத்தை உடைய தேன்,  கருப்பான நிறம் உடைய தேன், மிதமான நிறமுடைய தேன்.  இந்த மூன்று நிற தேனில் உயர்ந்த தரம் கொண்டது பொன்னிறமான நிறத்தையுடைய தேன். மிதமான நிறமுடைய தேன் மென்மையாகவும் இனிப்பாகவும், இருக்கும். தேன் திட நிலையிலும், திரவ நிலையிலும் இருக்கும். இயற்கை நிலையில் உள்ள தேனை வடிகட்டாமல் இருப்பதால் அது திட நிலையிலும்,  அதை பதப்படுத்துவதினால் திரவ நிலையிலும் இருக்கும்.  ஒரு காற்றுப்புகாத ஜாடியில் வைக்கப்பட்டிருந்தால் பல ஆண்டுகளானாலும் அதன் தன்மையும் மாறாது, கெட்டும் போகாது.

தேனில் உள்ள சத்துக்கள்:

 தண்ணீர், புரதம், கார்போஹைட்ரேட், நார்சத்து,சர்க்கரைகள், தாதுக்கள், சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், வைட்டமின் பி2, வைட்டமின் பி3,  வைட்டமின் பி6, வைட்டமின் பி9, வைட்டமின் சி ஆகியவை தேனில் உள்ள சத்துக்கள் ஆகும்.

தேனின் நன்மைகள்:

  •  பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும் இதயம் பலம் பெறும்.
  • மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் சுரக்கும்.
  • தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண், வாய்ப் புண்கள் குணமாகும்.
  • கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை போகும்.
  • தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் வீக்கம் குறையும்.
  • இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.
  • ரோஜாப்பூ குல்கந்தில் தேன்கலந்து சாப்பிட்டால் உடல்சூடு தணியும்.
  • ஆரஞ்சு பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும். 
  • நெல்லிக்காய் சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.
  • எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

தேன் பொன்னிறமான நிறத்தை உடைய திரவம் என்பதாலும், பல சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் கொண்டதினாலும் திரவ தங்கம் என்று கூறுகிறார்கள்.