நிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்

உணவுக்கும் வண்ணங்களும் என்றுமே ஒரு தொடர்பு உண்டு. நமது பாரம்பரிய உணவுகள் தொடங்கி இன்றைய பாஸ்ட் புட் உணவுகள் வரை முதலில் கவர படுவது அதன் நிறத்தினால் மட்டுமே.

நிறங்களின் அடிப்படையில் உணவுகளின் நன்மைகள்

ஒரு உணவை பார்க்கும் போது முதலில் கண்கள் அதனை சுவைக்கிறது. கண்களுக்கு பிடிக்கும் போது மட்டுமே நாக்கு அதனை சுவைக்கிறது.

இந்த நிறங்கள் உணவை சுவாரஸ்யமாக்குகிறது. வண்ணங்களை வைத்து உணவின் இயல்புகளை அறிந்து கொள்ள முடியும். அதனால் உணவுகளை பற்றிய  விளக்கங்கள்  நம் மனதிலும்  விரைவாக இடம் பிடிக்கிறது. 

உணவை நிறங்களின் அடிப்படையில் 6 பிரிவுகளாக பிரிக்கலாம்.அவை என்ன என்பதை பற்றி  இப்போது காண்போம்..

வெள்ளை:

பொதுவாக இந்த நிற உணவுகள் நோயெதிர்ப்பு தன்மை உடையதாக இருக்கும். பூண்டு, வெள்ளை வெங்காயம், வெள்ளை பீன்ஸ் , உருளை கிழங்கு, மஷ்ரும், காலி பிளவெர் ஆகியவை இந்த பிரிவில் அடங்கும். பூண்டு மற்றும் வெங்காயம் வயிற்றில் புற்று நோய் வருவதை குறைக்கிறது. பீன்ஸ் மற்றும் உருளை கிழங்கு  இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. காளான்கள் முக்கியமான ஊட்டச்சத்துக்களை தருகின்றன.  காலிஃபிளவர் நுண்ணுயிர் எதிர்ப்பியாக விளங்குகிறது மற்றும்  கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இது நல்லது.

பச்சை :
இந்த நிற உணவுகள் உடலின் நச்சு தன்மையை வெளியேற்றுகின்றன. பச்சைபட்டாணி, பச்சை பீன்ஸ், கீரை வகைகள், கேப்ஸிகம் என்னும் பச்சை குடைமிளகாய்,கிவி  மற்றும் க்ரீன் டீ எனப்படும் பச்சை தேநீர் ஆகியவை இந்த வகை உணவுகள் ஆகும்.  இந்த வகை உணவுகள் உடலுக்கு நலம் சேர்க்கும். உடலுக்கு நல்ல ஊட்டச்சத்துக்களை வழங்கும். இதன் மூலம் உடலில் உள்ள நச்சு பொருட்கள்  வெளியேறும். 

மஞ்சள்:
இந்த நிற உணவுகள் உடல் வனப்பிற்கு உதவுகின்றன. வாழை பழம், ஸ்குவாஷ் , சோளம், ஆகியவை இந்த  வகை உணவுகள். மஞ்சள் நிற உணவுகளில் கரோடெனாய்டு மற்றும் பயோ பிளவனாய்டு நிறைந்திருப்பதால் அவை நம் சருமம், எலும்பு மற்றும் பற்களை பாதுகாக்கிறது.

ஆரஞ்சு:
இந்த நிற  உணவுகள் உடலில்  புற்று நோய் வராமல் தடுக்கிறது. காரட், ஆரஞ்சு,பரங்கி காய் ,ஆகியவை இந்த வகை உணவுகள் ஆகும். இந்த வகை உணவுகள் இதய ஆரோக்கியத்திற்கு  உகந்தது. இவை கண்களை பாதுகாக்கிறது. மற்றும் அவை நம் நோயெதிர்ப்பு மண்டலத்தை உறுதியாக்குகிறது.

சிவப்பு:
இந்த வகை உணவுகள் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இவ்வகை உணவுகள் சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இவற்றுள் வைட்டமின் சத்துகள் அதிகமாக உள்ளன. சிவப்பு மிளகாய், சிவப்பு குடை மிளகாய், செர்ரி பழம், தக்காளி, ஆப்பிள் முதலியன சிவப்பு நிற உணவுகளாகும்.

ஊதா :

இந்த வகை உணவுகள் நமது ஆயுளை அதிகரிக்கிறது. வெங்காயம், நாவல் பழம், கத்திரி காய் ,  திராட்சை ஆகியவை ஊதா நிற உணவுகள் ஆகும். இந்த வகை உணவுகள்  அல்சர் நோயை எதிர்த்து போராடுகிறது. இவை புற்று  நோயை கட்டுப்படுத்துகின்றன. சிறுநீரகம் மூலம்   நோய் தொற்று ஏற்படுவது தடுக்கப் படுகின்றது. இதயத்திற்கும், கல்லீரலுக்கும்  நலம் பயக்கக் கூடியது.