குண்டா இருக்கீங்களா...கவலைய விடுங்க.. இத படிங்க..

எடை குறைப்பு அல்லது அதிகரிப்பு, உடல் ஆரோக்கியத்தில் எந்த நேரடி விளைவையும் ஏற்படுத்துவதில்லை என்று கூறப்படுகிறது.

குண்டா இருக்கீங்களா...கவலைய விடுங்க.. இத படிங்க..

ஆரோக்கிய வாழ்வுக்காகவும் நன்னடத்தைக்காகவும் ஆரோக்கிய பழக்கத்தை கையில் எடுத்து கொண்டவர்களை ஆதரிக்கும் விதமாக மனநல மருத்துவர்களால் தொடங்கப்பட்ட இயக்கம் தான் ஹெல்த் அட் எவ்ரி சைஸ் (Health at Every Size- HAES ) எடையை பற்றி கவலைப்படாமல், தகுந்த ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வதும், உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும் தான் இந்த இயக்கத்தின் குறிக்கோளாகும் . 

HAES ஆய்வில், 30-45 வயது உள்ள பெண்கள் கலந்து கொண்டனர். அவர்களை இரண்டு குழுக்களாக பிரித்து, ஒரு குழுவை சேர்ந்தவர்கள் முறையான டயட் உணவு அட்டவணை மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள பழக்கினர். மற்ற குழுவில் உள்ளவர்களை, உள்ளுணர்வுடன் ஆரோக்கியமான உணவுகளை உண்ண  செய்து, அவர்களுக்கு பிடித்த உடல் செயல்பாடுகளை செய்ய சொல்லி வந்தனர். எடை குறைப்பில் அவர்கள் கவனம் இல்லை. 

இரண்டு வருடத்திற்கு பிறகு 2வது குழுவில் இருந்தவரால் இரண்டு வருடமும் சீரான எடையை பராமரிக்க முடிந்தது. முதல் குழுவில் இருந்தவர்கள் முதல் 6 மாதத்தில் எடை குறைக்கப்பட்டு பின்பு இரண்டு வருடத்திற்குள் அவர்கள் சரியான எடையை மீட்டெடுத்தார்கள். இரண்டாவது குழுவில் உள்ளவர்கள் அவர்களின் கொலஸ்ட்ரால் அளவை குறைத்தனர். இதனால் இரத்த அழுத்தத்தின்  அளவும் குறைந்தது. ஆனால் அவர்களால் அந்த குறைவை நிர்வகிக்க முடிந்தது. முதல் குழுவை சேர்ந்தவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு குறைந்து இரத்த அழுத்தம் குறைந்தது. ஆனால் அவர்களால் அந்த குறைவை நிர்வகிக்க முடியவில்லை. 2 வது  குழுவில் இருந்தவர்கள் எந்த ஒரு கடினமான  உடல் செயல்பாட்டையும் எதிர்கொள்ள முடிந்தது . முதல் குழுவில் இருந்தவர்கள் உடற்பயிற்சி செய்தாலும், அவர்கள் சக்தியை நீட்டிக்க முடியவில்லை.

இந்த ஆய்வின் முடிவுகள் கூறுவது என்னெவென்றால்,  எடை குறைப்பில் கவனம் செலுத்துவதை விட, ஆரோக்கியம் மற்றும் நடத்தையில் கவனம்  செலுத்துவதால் ஒட்டு மொத்த  உடலும் ஆரோக்கியமாகும்.
உடல் அளவிற்கும் ஆரோக்கியத்திற்கும் சம்மந்தம் இல்லை . ஒல்லியான உடலை சமூகம் தான் வரவேற்கிறது, அறிவியல் அதனை ஆதரிப்பதில்லை. அதிக எடையுள்ள சிலர் ஆரோக்கியமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.  60 வயதில் சரியான எடையோடு இருப்பவர்களின் வாழ் நாளை விட, அதிகமான எடை உள்ளவர்களின் வாழ் நாள் அதிகரித்து காணப்படுவதாக குறிப்பிடுகிறது தெற்கு கரோலினாவில் நடந்த ஒரு ஆய்வு. 
பிஎம்ஐ (BMI ) என்பது அரசாங்க கணக்கெடுப்புக்காக உருவாக்கப்பட்ட ஒரு கணக்கு. தசை வலிமை, எலும்பு அளவு , நீர்சத்தின் அளவு, இடுப்பின் அளவு போன்றவை இந்த கணக்கில் வராது.
உயரமும் எடையும் தான் உடல் எடையை தீர்மானிக்கும் என்பது ஒரு அர்த்தமற்ற முறை.

BMIல் ஏற்படும் மாற்றமும், எடையில் ஏற்படும் மாற்றமும் வாழ்க்கைமுறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்று கனடாவின் பத்திரிகை ஒன்றில் கூறப்படுகிறது. எடையையும் உணவு அட்டவணையையும் பற்றி கவலை படாமல் நல்ல பழக்கங்களை கொண்டு வாழ்ந்து வருவது ஆரோக்கியத்தை கொடுக்கும்.