பெற்றோர் சண்டையிடுவதால் குழந்தைகளின் நிலை

திருமண உறவில் முரண்பாடு என்பது தவிர்க்கமுடியாதது. யாரோ ஒரு ஆண் மற்றும் யாரோ ஒரு பெண் திருமண பந்தத்தில் இணையும்போது ஒத்த கருத்துக்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. இதனால் இருவருக்குமான பந்தத்தில் முரண்பாடு ஏற்படுகிறது. சில நேரங்களில் இந்த முரண்பாடு மோசமான விளைவுகளை உண்டாக்குகிறது. ஒரு நீண்டகால உறவில் இத்தகைய மோதல்கள் தவிர்க்கப்பட வேண்டியவையாகும்.

பெற்றோர் சண்டையிடுவதால்  குழந்தைகளின் நிலை

வெற்றிகரமான மற்றும் தோல்வியடைந்த திருமண உறவுகள் குறித்த ஆரய்ய்ச்சியில் ஈடுபட்ட காட்மேன் அவர்களின்  ஆராய்ச்சி முடிவில், வெற்றிகரமான திருமண வாழ்க்கையை எதிர்கொண்டவர்களின் நேர்மறை மற்றும் எதிர்மறை தொடர்புக்கான விகிதம் 5:1 என்று உள்ளதாக அறியப்படுகிறது. கோபம் அல்லது விமர்சனம் குறித்த உணர்வுக்கு அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பு, பாசம் புகழ் , பரஸ்பரம் புரிந்து கொள்ளுதல். போன்றவற்றை வெளிப்படுத்துகின்றனர்.

திருமண உறவில் எதிர்மறை எண்ணங்கள் தவிர்க்க முடியாதது என்றாலும் தம்பதிகள் அதிகபட்ச நேர்மறை எண்ணத்துடன் இருப்பது அவசியம். எந்நாளும் சிக்கல்களையும் மோதல்களையும் அனுபவித்துக் கொண்டிருப்பது வாழ்வில் சலிப்பை ஏற்படுத்தும். இருவருக்கும் இடையில். சவால்களை தவிர்ப்பது நல்லது.  மோதல்களிலிருந்து ஒதுங்கிகொள்வது அதனிடமிருந்து கற்றுக்கொள்வதைவிட நல்லது.

எல்லா பிரச்சனைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. எல்லா தம்பதிகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு சிலர் எந்த ஒரு பிரச்சனைக்கும் வாய் திறந்து பேசவே மாட்டார்கள், ஒரு சிலர் எல்லாவற்றிற்கும் வெடித்துச் சிதறுவார்கள். உறவுகளில் மிகவும் புண்படுத்துவது என்னவென்றால்  ஒருவரைஒருவர் தாக்குவது, அவமதிப்பது, கிண்டல் செய்வது, கூட்டத்தில் தனது துணையை வீழ்ச்சி அடையச்செய்வது போன்ற செயல்களாகும்.

சில எதிர்மறை விளைவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

குறைந்த கால தாக்கங்கள்:

குழந்தைகள் முன்னிலையில் ஆரோக்கியமற்ற முறையில் சண்டையிடுவதால் குடும்பத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் அவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் குழந்தைகளுக்கு எழுகிறது. ஒரு குடும்பத்தின் மன ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. பெற்றோர்- குழந்தை, கணவன்- மனைவி ஆகிய உறவுகள் ஒரே நேரத்தில் பாதிப்பிற்குள்ளாகின்றன. கணவன் மனைவிக்குள் நிகழும் உச்சக் கட்ட மோதல் இருவருக்கும் அதிக அழுத்தத்தைத் தந்து அவர்களுக்கும் குழந்தைக்கும் இடையிலான உறவும் சிக்கலாகிறது. சண்டையால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக உடல்ரீதியாக,  உணர்வுரீதியாக, உளவியல் ரீதியாக இருவரும் பாதிக்கப்பட்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் இடையூறு ஏற்படுகிறது.

நீண்ட கால பாதிப்புகள்:

அறிவாற்றல் குறைபாடு ஏற்படுகிறது என்று ஆய்வு குறிப்பிடுகிறது :

2013ம் ஆண்டு குழந்தை வளர்ச்சி குறித்து வெளியிடப்பட்ட ஆய்வில் பெற்றோர் தொடர்ந்து சண்டையிட்டு கொள்வதால், குழந்தைகள் உணர்ச்சிகளை வெளியிடுவதில் சிரமத்தை எதிர்கொள்வதாகவும், பிரச்சனைகளை  தீர்க்கும் ஆற்றல் தாமதமாவதாகவும் அறியப்படுகிறது. விஞ்ஞான ரீதியாக இன்னும் பல சிக்கல்கள் அறியப்படுகிறது. அடிக்கடி பெற்றோர் சண்டையிடுவதைக் காணும் குழந்தைகள் மற்றவர்களுடன் விரோதபோக்கை வளர்த்துக் கொள்கின்றனர். நடத்தையில் பிரச்சனை, கல்வியில் பாதிப்பு, சாப்பிடுவதில் கோளாறு, பொருள் துஷ்ப்ரயோகம், தூக்க பிரச்சனைகள், வயிற்றுவலி அல்லது தலைவலி  போன்ற பாதிப்பு உண்டாகிறது. வாழ்க்கை மீது எதிர்மறை எண்ணம் உண்டாவதாக குழந்தைகள் ஒப்புக்கொள்கின்றனர்.

வளர்ச்சியூட்டும் மோதல்கள்:

பெற்றோரின் சில வகையான மோதல்கள் குழந்தைகளை பாதிப்பதில்லை மற்றும் குழந்தைகள் இவற்றின்மூலம் நன்மை அடைகின்றனர் என்று நோட்ரே டேம் பல்கலைக்கழகத்தின் உளவியலாளர் ஈ. மார்க் கம்மிங்ஸ்  கூறுகிறார். அவ்வப்போது மிதமான அளவு சண்டையிட்டு பின் சமாதானமாகும் பெற்றோரைக் காணும்போது குழந்தைகளின் சமூக திறன் அதிகரிக்கிறது அவர்களின் சுயமரியாதை அதிகரிக்கிறது. மேலும் குழந்தைகளுக்கு சமூகம் சார்ந்த பாதுகாப்பு குறித்த அச்சம் விலகி, பள்ளிகளில் திறன்பட செயல்பட முடிகிறது. இவர்களுக்கு மனரீதியான,  உளவியல் ரீதியான பாதிப்புகள் குறைவாக இருப்பதாக அறியப்படுகிறது.

பெற்றோர் சண்டையிட்டு பின் சமரசம் செய்து கொள்வதை பிள்ளைகள் காணும்போது அவர்கள் மகிழ்ச்சியாக உணர்கின்றனர் என்று கம்மிங்ஸ் கூறுகிறார். எல்லாமே சரியாகிவிடும் என்ற உணர்வு பிள்ளைகளுக்கு மேலோங்குகிறது,  ஒன்றாக இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. இதனால் குழந்தைகள் தங்கள் தினசரி வேலைக்கு திரும்பச் சென்று அந்த நாளை புத்துணர்ச்சியுடன் கடக்கின்றார். 

இருப்பினும் மோதல்கள் தொடர்ந்து இருத்தவண்ணம் இருந்தால்  கீழே கூறும் சில குறிப்புகள் உங்களுக்கு உதவலாம்:

  • ஒருவர் மற்றொருவரின் உணர்வைப் கொள்ளுங்கள். உடன்படாத கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
  • உங்கள் துணையின் மனதில் எழும் சந்தேகங்களுக்கு தக்க விளக்கம் கொடுங்கள்.
  • நீங்கள் இருவரும் ஒரே அணியில் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
  • ஒருவரையொருவர் குற்றம் கூறுவது பிரச்சனையைத்  தீர்க்காது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
  • எல்லாவற்றையும் அன்போடு புரிய வையுங்கள்