கருவுறுதலை அதிகரிக்கும் வாய்ப்பை உருவாக்கும் ஆப்பிள் சிடர் வினிகர் 

இன்றைய காலகட்டத்தில் , பல்வேறு காரணங்களுக்காக கருவுறுதலில் தம்பதிகளுக்கு பிரச்சனை உண்டாகிறது.

கருவுறுதலை அதிகரிக்கும் வாய்ப்பை உருவாக்கும் ஆப்பிள் சிடர் வினிகர் 

மாதவிடாய் சுழற்சியின் போது  சராசரியாக ஆரோக்கியமான பெண்கள் கருவுறுதலுக்கான வாய்ப்பு 20% மட்டுமே உள்ளது. பெண்கள் கருவுறுதலுக்கான சிறந்த காலகட்டம் 23 வயது முதல் 31 வயது வரை. இதன் பிறகு கருவுறும் வாய்ப்பு மெதுவாக குறையத் தொடங்குகிறது. ஆண்களுக்கு 40 வயது வரை இந்த வாய்ப்பு உச்சத்தில் உள்ளது. அதன் பிறகு மெதுவாக குறையத் தொடங்குகிறது.

நீர்க்கட்டிகள், குறைந்த எண்ணிக்கை விந்தணு, கருப்பை பைப்ராய்டு , கருப்பை குழாய் அடைப்பு, ஹார்மோன் சமச்சீரின்மை ஆகியவை கருவுறுதலில் பாதிப்பை உண்டாக்கும் சில காரணங்களாகும்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் கருவுறும் வாய்ப்பை அதிகரிக்கும் வாய்ப்பு ஆப்பிள் சிடர் வினிகரை பருகுவதால் உண்டாகிறது என்பது நிரூபிக்கப்படுகிறது.

இதனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள். ஆண் மற்றும் பெண்களின் கருவுறும் வாய்ப்பு அதிகரிக்க ஆப்பிள் சிடர் வினிகர் எவ்வாறு பயன்படுகிறது?

திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகியும் கருத்தரிக்க முடியவில்லை என்றால் கருத்தரிப்பில் பிரச்சனை இருக்கலாம். இதனைப் பற்றி தெரிந்து கொள்ள கருதரிப்பிற்கான சில சோதனைகளை தம்பதிகள் இருவரும் செய்து கொள்ள வேண்டும். ஆப்பிள் சிடர் வினிகர், கருவுறும் வாய்ப்பை அதிகரிக்கும் என்று பல நிரூபிக்கப்பட்ட செய்திகள் இருப்பதால், அதனையும் பயன்படுத்துவதால் விரைவில் ஒரு நல்ல செய்தி உங்கள் காதுகளில் விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே முயற்சியுங்கள்..

1. விந்தணுக்களின் போக்குவரத்தில் உதவுகிறது:
ஆப்பிள் சிடர் வினிகரில் காணப்படும் மாலிக் அமிலம், விந்தணுக்களை புத்துணர்ச்சியுடனும் வலிமையுடனும் வைக்க உதவுகிறது. இதனால் இதன் போக்குவரத்து சௌகரியமாகிறது. 

 2. pH அளவை கட்டுப்படுத்த உதவுகிறது:
பிறப்புறுப்பின் pH அளவு 4-5 இருப்பது, ஆரோக்கியமான அளவாக கருதப்படுகிறது. இந்த அளவில் எதாவது மாறுபாடு உண்டாகும்போது உடலில் தொந்தரவுகள் உண்டாகும் வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக கருவுறுதலில் எதாவது பிரச்சனை உண்டாகலாம். ஆப்பிள் சிடர் வினிகர் முற்றிலும் இயற்கையான மற்றும் ஆர்கானிக் அன்டி பயோடிக் என்பதால் பிறப்புறுப்பின் pH அளவை சமநிலையில் வைக்க இது உதவுகிறது. இதனால் கருவுறும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

 3. ப்ரோஸ்டேட் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கிறது:
விந்தணுக்களை பாதுகாக்கவும் புத்துணர்ச்சி ஊட்டவும் ஆண்மை(ப்ரோஸ்டேட்) சுரப்பி ஒரு வித திரவத்தை சுரக்கிறது. 40 வயதுக்கு மேற்பட்ட பல ஆண்கள், ஆண்மை சுரப்பி  தொடர்பான பல பிரச்சனைகளான ஆண்மை சுரப்பி பெரிதாவது, போன்றவை உண்டாகின்றன. இத்தகைய ஆண்மை தொடர்பான தொந்தரவுகளைக் களைய ஆப்பிள் சிடர் வணிகர் நல்ல தீர்வுகள் தருவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் கருவுறுதல் வாய்ப்பு அதிகரிக்கிறது.

 4. பூஞ்சை தொற்று பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது :
பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் சளி பாதிக்கும் ஒரு நிலைதான் Candidiasis என்னும் பூஞ்சைத் தொற்று. இத்தகைய பூஞ்சை தொற்று பாதிப்பை அனுபவிக்கும் பெண்களின் கருப்பை குழாயில் அடைப்பு, மாதவிடாய்க்கு முன் மற்றும் பின் அறிகுறிகள் , இடமகல் கருப்பை அகப்படலம் என்னும் endometriosis மற்றும் கருவுற இயலாமை போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். இத்தகைய பூஞ்சை தொற்று பாதிப்பைப் போக்க ஆப்பிள் சிடர் வினிகர் உதவுகிறது.

 5. பெண்களுக்கு டெஸ்டோஸ்டீரோன் அளவைக் குறைக்க உதவுகிறது :
டெச்டோஸ்டீரோன் என்பது முதன்மையாக ஆண் மற்றும் பெண் ஆகிய இருவருக்கும் இருக்கும் ஒரு ஆண் ஹார்மோன்  ஆகும். இருப்பினும், இந்த ஹார்மோன் அளவு பெண்களுக்கு மிக அதிகமாக இருக்கும்பட்சத்தில் கருவுறும் வாய்ப்பு குறைகிறது. மற்றும் ஹார்மோன் சமநிலை குறைகிறது. ஆப்பிள் சிடர் வினிகர் உட்கொள்ளும் பெண்கள் , குறிப்பாக டெச்டோஸ்டீரோன் அளவு அதிகமாக இருக்கும் பெண்களின் டெச்டோஸ்டீரோன் அளவு குறைவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

 6. விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது:
கருவுறுவதில் விந்தணுக்களின் தரம் மிகவும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. ஆப்பிள் சிடர் வினிகர், விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. இது ஆண்மை சுரப்பியை ஊக்குவிப்பதன் மூலம் விந்து அளவு, விந்து எண்ணிக்கை, விந்து உருவகம், மற்றும் விந்து இயக்கம் ஆகியவற்றில் உதவுகிறது.

கருவுறும் வாய்ப்பை அதிகரிக்க ஆப்பிள் சிடர் வினிகரை எவ்வாறு பயன்படுத்தலாம்?

ஆப்பிள் சிடர் வினிகர், ஓர் இயற்கை மற்றும் ஆர்கானிக் பானம் ஆகும். ஆனாலும் இதனைப் பருகுவதற்கு முன்னர் அதன் அளவு மற்றும் பருகும் முறை குறித்து உறுதி செய்து கொள்ள வேண்டும். இதனை எப்படி பருகுவது என்பது குறித்து இப்போது காணலாம்.

 1. ஒரு கப் தண்ணீரை நன்றாக கொதிக்க விடவும், பின்பு அது வெதுவெதுப்பாக ஆகும் வரை பொறுத்திருக்கவும்.
 2. இந்த வெதுவெதுப்பான நீரில் 2 ஸ்பூன் அளவு ஆப்பிள் சிடர் வினிகர் சேர்க்கவும். 
 3. இந்த பானத்தைப் காலையில் வெறும் வயிற்றில் பருகுவது நல்லது. அல்லது இரவு உறங்கச் செல்வதற்கு முன் பருகலாம்.

கருவுற இயலாமல் கஷ்டப்படுகிறவர்கள், ஆப்பிள் சிடர் வினிகரை இயற்கையாக பயன்படுத்தலாம், ஆனால் இதனை பயன்படுத்துவதற்கு முன்னர் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது, குறிப்பாக நீங்கள் வேறு மருந்துகள் எடுத்துக் கொண்டிருக்கும்போது கட்டாயம் மருத்தவ ஆலோசனையுடன் இதனை எடுத்துக் கொள்வது நல்ல பலனைத் தரும்.