உங்கள் முடியை ஆரோக்கியமாக வைக்க சிறந்த குளியல் குறிப்புகள்

ஆரோக்கியமான தலை முடிக்கான சில குளியல் குறிப்புகள் இதோ உங்களுக்காக.

உங்கள் முடியை ஆரோக்கியமாக வைக்க சிறந்த குளியல் குறிப்புகள்

சிறு வயதில் அதாவது ஒரு ஒன்பது அல்லது பத்து வயதில், பொதுவாக தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைக்கு தலைக்கு குளிக்கும் முறையை பயிற்றுவிப்பார்கள் . அதுவரை தலைக்கு தேய்த்து குளிக்க வைக்கும் தாய்மார்கள் அதன் பின், பெண் குழந்தைகள் தானாக தலைக்கு குளிக்கும் முறையை சொல்லிக் கொடுப்பார்கள். அவர்கள் பயிற்றுவிக்கும் முறையை பின் தொடர்ந்து வரும்நாட்களில் பெண்கள் தலைக்கு குளிக்கத் தொடங்குவார்கள். இதனை மாற்றுவதற்கு அவர்கள் பெரும்பாலும் முயற்சி செய்வதில்லை. ஆனால் இந்த முறையில் சில மாற்றத்தைக் கொண்டு வருவது  அவசியம் என்று நான் கருதுகிறேன். வேண்டுமென்றே இந்த மாற்றத்தை செய்ய வேண்டும் என்பது அர்த்தமில்லை. தலைமுடி வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படும்போது, தலைமுடியில் சேதம் ஏற்படும்போது அதற்கேற்ற படி தலை முடி அலசுவதில் சில மாற்றத்தை ஏற்படுத்துவதில் தவறில்லை. தலையில் நுனி முடி உடைவதும், முடி உதிர்வதும், உண்டாகும்போது, நீங்கள் பயன்படுத்தும் கூந்தல் பராமரிப்பு பொருட்களில் உங்களுக்கு சந்தேகம் தோன்றும். அதனால் நீங்கள் அதனை மாற்றி வேறு பொருட்களை பயன்படுத்துவீர்கள். ஆனாலும் பிரச்சனை தீராது. அந்த தருணத்தில் நீங்கள் தலை முடியை அலசும் விதங்களில் சில மாற்றங்கள் செய்யுங்கள். இதனை சில வாரங்கள் தொடர்ந்து முயற்சியுங்கள். இதனை செய்வதால் உங்கள் தலை முடி ஆரோக்கியத்தில்  முன்னேற்றம் ஏற்படுவதை நீங்கள் உணரலாம். முயற்சித்து ஆனந்தமாக இருங்கள்.

ஷாம்பூ பயன்படுத்த சில குறிப்புகள்.

ஷாம்பூ போடுவதற்கு முன் தலைக்கு நீராவி காட்டுங்கள்:
உங்கள் உச்சந்தலையில் இருக்கும் துளைகளை எண்ணெய் மற்றும் தூசுகள் அடைத்துக் கொண்டிருக்கும். இதனைப் போக்குவதற்கான சிறந்த வழி, தலை முடிக்கு நீராவி காட்டுவது தான். இதனை செய்வதற்கு, ஒரு டவலை எடுத்து சூடான நீரில் முக்கி எடுத்து பிழிந்து கொள்ளவும். அந்த டவலை உங்கள் தலையில் சுற்றிக் கொள்ளவும். பிறகு 20 நிமிடம் வரை அப்படி இருக்கவும். பிறகு குளிக்கச் செல்லவும்.

நீராவி பட்ட கூந்தலுக்கு மசாஜ் செய்யவும்:
கூந்தலில் நீராவி காட்டியவுடன், உங்கள் உச்சந்தலையை விரல்கள் கொண்டு மென்மையாக மசாஜ் செய்யவும். சில நிமிடங்கள் தொடர்ந்து இதனை செய்வதால் அழுக்குகள் வெளியேறும். வலிமை இழந்த வேர்கால்களும் வலிமை பெறும்.

குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தவும்:
கூந்தலுக்கு ஸ்டைல் செய்யும் கருவிகளை அடிக்கடி பயன்படுத்துவதால் தலை முடி சேதமடைகிறது என்று கூறுவார்கள். அதே போல், வெந்நீர் பயன்படுத்துவதாலும் தலை முடி சேதமடைகிறது. வெந்நீரால் தலைக்கு குளிப்பதால், தலையில் இயற்கையாக இருக்கும் எண்ணெய் நீங்கி, வேர்க்கால்கள் திறக்கப்படுகின்றன. இதனால் தலை முடியில் உள்ள ஈரப்பதம் வெளியேறுகிறது. மறுபுறம், வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரால் குளிப்பதால், வேர்க்கால்கள் மூடப்பட்டு, ஈரப்பதம் பூட்டப்படுகிறது. இதனால் தலை முடி பளபளப்பாக, மிருதுவாக மாறுகிறது. இதனால் முடி சுருளுவதும் தடுக்கப்படுகிறது.

பரபேன் மற்றும் SLS இல்லாத ஷாம்பூவை பயன்படுத்தவும்:
பரபேன் மற்றும் சல்பேட் (SLS ) இல்லாத ஷாம்பூவை பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பரபேன் என்பது ஒரு பதனப்பொருள் ஆகும். SLS என்பது நுரையை அதிகரிக்க பயன்படுத்துவதாகும். இவை இரண்டு ரசாயனப் பொருட்களும் நீண்ட காலமாக சரும எரிச்சல் மற்றும் ஒவ்வாமை வினைகளை தோற்றுவிப்பதாக அறியப்படுகிறது. ஆனால் சமீபத்திய ஆய்வுகள் இவற்றிற்கு புற்று நோயை உண்டாக்கும் தன்மை இருப்பதாகவும், குழந்தைகளுக்கு கண்களில் கடுமையான சேதத்தை உண்டாக்குகின்றன என்றும்  கூறுகின்றன. ஆகையால், பரபேன் மற்றும் SLS இல்லாத ஆர்கானிக் ஷாம்பூவை பயன்படுத்துவது நல்லது.

உச்சந்தலைக்கு மட்டும் ஷாம்பூவை பயன்படுத்தவும் :
உச்சந்தலையை சுத்தம் செய்யவும், அழுக்கு, இறந்த அணுக்கள் மற்றும் இதர சேர்க்கையை அகற்றவே ஷாம்பூ பயன்படுகிறது. ஷாம்பூவை நீளமான தலைமுடிக்கும் பயன்படுத்துவதால் அதன் இயற்கை எண்ணெய் அகற்றப்படுகிறது, இதனால் தலைமுடி வறண்டு, சோர்ந்து, வலுவிழந்து போகிறது. ஆகவே சிறிதளவு  ஷாம்பூ எடுத்து தலையின் வேர்கால்களில் மற்றும் உச்சந்தலையில் நுரை வரும் வரை மென்மையாக மசாஜ் செய்யவும், 

மென்மையாக மசாஜ் செய்யவும்:
ஷாம்பூ தேய்ப்பதால் நுரை வரும்போது, உங்கள் விரலால் மென்மையாக உச்சந்தலையை மசாஜ் செய்யவும். சுழல் வடிவில் மசாஜ் செய்யவும். மசாஜ் செய்வதால், தலையில் உள்ள அழுக்குகள் மட்டும் வெளியேறுவதில்லை. முடியின் வேர்கால்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

தினமும் தலைக்கு குளிக்க வேண்டாம் :
ஷாம்பூ பயன்படுத்தி தினமும் தலைக்கு குளிக்க வேண்டாம். இந்த காலகட்டத்தில் எல்லா ஷம்பூவிலும் ரசாயனம் சேர்க்கப்படுவதால் முடி எளிதில் வறண்டு உடைகிறது. ஆகவே முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே பயன்படுத்தலாம்.. இதனால் முடியின் ஈரப்பதமும் சரியான அளவில் இருக்கும்.

ஷாம்பூ தலையில் உள்ள நேரத்தை நீட்டிக்க வேண்டாம்:
தலை முடி ஈரமாக இருக்கும்போது மிகவும் வலிமை இழந்து இருக்கும். ஆகவே, 15 நிமிடத்திற்கு மேல் ஷாம்பூ பயன்படுத்துவதும், கண்டிஷனர் பயன்படுத்துவதும் தலை முடியை சேதப்படுத்தும் மற்றும் நீண்ட நேரம் முடி ஈரமாக இருப்பதும் முடி உடைவதை அதிகரிக்கும்.

கண்டிஷனிங் செய்வதற்கான குறிப்புகள் :
குளிப்பதற்கு முன் தலையில் எண்ணெய் தடவுங்கள் 
உங்கள் தலை முடியை கண்டிஷன் செய்யவும் ஈரப்பதத்துடன் வைக்கவும் இயற்கையான வழி, தலைக்கு எண்ணெய் தடவுவது தான். தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் கொண்டு உங்கள் தலைக்கு மசாஜ் செய்யுங்கள். ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளியுங்கள். எண்ணெய் உங்கள் தலைக்குள் ஊடுருவி, வேர்க்கால்கள் உள்ளிருந்து புத்துணர்ச்சி அடையச் செய்து, மிருதுவான பளபளப்பான சிக்கில்லாத கூந்தலை பெற உதவுகிறது.

தலையில் ஈரமில்லாத துண்டை சுற்றிக் கொள்ளவும் :
சிக்கில்லாத முடியைப் பெற இந்த முயற்சியை மேற்கொள்ளலாம். ஷம்பூவால் தலையை அலசியவுடன், தலையில் ஈரமில்லாத துண்டை சுற்றிக் கொள்ளவும். இதனால் தலையில் இருக்கும் அதிகமான நீரை அந்த டவல் உறிஞ்சிக் கொள்ளும். அதன் பின்பு, துண்டை எடுத்து விட்டு தலைக்கு கண்டிஷனர் பயன்படுத்தவும். நீர் இல்லாத தலை முடியில் கண்டிஷனர் விரைவாக வேலை செய்து, சிக்கும் முடி சுருளுவதும் நீங்கும்.


மிக அதிக கண்டிஷனர் பயன்படுத்த வேண்டாம்:
அளவுக்கு அதிகமாக கண்டிஷனர் பயன்படுத்துவதால் முடியின் அடர்த்தி குறையும். மேலும் எண்ணெய் பசை தன்மை அதிகமாக காணப்படும்.

உச்சந்தலையில் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டாம்:
இதனை நீங்கள் பல முறை கேள்விப்பட்டிருக்கலாம். உங்கள் உச்சந்தலையில் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டாம். இதனால் உச்சந்தலையில் பல வித தூசு மற்றும் இதற் பொருட்கள் சேர்ந்தது, துளைகளை அடைத்துக் கொள்ளும் நிலை உண்டாகலாம். இதனால் முடி வளர்ச்சி குறைந்து முடி உதிரத் தொடங்கும்.

நீண்ட நேரம் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டாம்:
நீண்ட நேரம் தலை முடிக்கு கண்டிஷனர் பயன்படுத்துவதால் முடியில் ஈரப்பதம் தங்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. கண்டிஷனர் தலை முடியில் உடனடியாக வேலை செய்யும். முதன் முறை தலையில் தடவியவுடன் உடனடியாக  இது வினை புரிவதால்  நீண்ட நேரம் வைத்திருபதர்கான அவசியம் கிடையாது. மேலும், நீண்ட நேரம் தலையில் கண்டிஷனர் இருப்பதால் முடியில் ஒட்டும்தன்மை அதிகமாகும். 


இரண்டு வாரத்திற்கு ஒரு முறை ஆழ்ந்த கண்டிஷநிங் :
சுருண்ட மற்றும் வறண்ட தலை முடி உள்ளவர்கள் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை ஆழ்ந்த கண்டிஷன் செய்ய வேண்டும். இந்த வகை தலை முடி விரைந்து வறண்டு விடும் வாய்ப்புகளை குறைப்பதற்கு இந்த கண்டிஷனிங் பயன்படும்.

முடியை உலர வைப்பதற்கான குறிப்புகள்:
மைக்ரோ பைபர் டவல் / காட்டன் டி ஷர்ட் 
டெர்ரி காட்டன் துண்டு, முடியில் உள்ள அதிக நீரை உறிஞ்சும் போது ஈரப்பதத்தையும் சேர்த்து உறிஞ்சுகிறது. மேலும் இந்த துணியின் தன்மை காரணமாக தலை முடி சிக்காகி, முடி உடைகிறது. மைக்ரோ பிபர் துண்டு அல்லது காட்டன் டி ஷர்ட் போன்றவை தலையில் மிருதுவாக செயலபட்டு நீரை உறிஞ்சுகிறது , ஈரப்பதத்தை தக்க வைக்கிறது.

முடியைக் காய வைக்கும்போது அழுத்தமாக தேக்க வேண்டாம்:
பல பெண்கள் முடியை காய வைக்க அழுத்துய் தேய்ப்பார்கள் அல்லது தலைமுடியை டவலால் சுருட்டி வைத்துக் கொள்வார்கள். இந்த இரண்டு விதங்களும் தலை முடிக்கு நன்மை செய்யாது. மாறாக, முடி உடைவது, சுருள்வது, சிக்காவது போன்ற பிரச்சனைகள் உண்டாகும். மைக்ரோ பைபர் துண்டு அல்லது காட்டன் டி ஷர்ட் பயன்படுத்தி மென்மையாக ஒத்தி எடுப்பதால் தலையில் இருக்கும் அதிகமான நீர் காய்ந்து இடும். மீதம் இருக்கும் ஈரம் காற்றில் உலர்ந்து விடும்.

ட்ரையர் பயன்படுத்த வேண்டாம் :
ட்ரையரில் இருந்து வெளியேறும் சூடு, தலை முடியை சேதப்படுத்தும். இதனால் நுனி முடி உடைவது போன்ற பாதிப்புகள் உண்டாகும். சூடான ஸ்டைலிங் கருவிகளை பயன்படுத்துவதாலும் இதே பிரச்சனை தோன்றும். ஆகவே இவற்றை முடிந்த அளவுக்கு தவிர்ப்பது நல்லது. கட்டாயம் ட்ரையர் பயன்படுத்தித் தான் ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்கள் கூல் செட்டிங்கில் வைத்து அதனை பயன்படுத்தலாம்.


சிக்கெடுப்பதற்கான குறிப்புகள் :
குளிக்கும் போது கண்டிஷனர் பயன்படுத்தியவுடன், தலை முடியில் சிக்கி எடுத்து விடலாம். இதனால் முடி உதிர்வு அதிகரிக்காது. பெரிய பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்தி முடியின் கீழ் பகுதியில் சீவி, முடிச்சு மற்றும் சிக்கைப் போக்கலாம். 

பாதி உலர்ந்த நிலையில் தலை முடி இருக்கும் போது சிக்கெடுக்கலாம். ஈரமாக இருக்கும் தலைமுடியில் சிக்கெடுத்தால் தலை முடி மிக அதிகமாக உதிரும். ஈர முடியில் வலிமை குறைந்து இருப்பதால், இந்த நிலை ஏற்படும். ஆகவே முடி 70% காயும் வரை பொறுத்திருந்து பெரிய பற்கள் கொண்ட சீப்பு அல்லது அடர்ந்த நார் கொண்ட பிரஷ் பயன்படுத்தி சிக்கெடுக்கலாம்.

மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சில செய்திகள் :
தலை முடி உலர்ந்தவுடன் லீவ்-இன் கண்டிஷனர் பயன்படுத்தவும்
தலைக்கு குளித்தவுடன் கூந்தல் சுருளுவதை எப்படி தடுப்பது என்ற கேள்வி உங்கள் மனதில் இருந்தால் அதற்கான பதில் இதோ, தலை முடி பாதியளவு காய்ந்தவுடன், ஒரு துளி லீவ்-இன் கண்டிஷனர் அல்லது ச்மூதனிங் சீரம் பயன்படுத்தவும். உங்களுக்கு வறண்ட தலை முடி இருந்தால், இந்த பொருளை பயன்படுத்தும் போது, அல்கஹால் இல்லாத கண்டிஷ்ணராக வாங்கி பயன்படுத்தவும். அல்கஹால் தலை முடியை மேலும் வறண்டதாக மாற்றுகிறது.

கூந்தல் பராமரிப்பு பொருட்களை அளவாக பயன்படுத்த வேண்டும்:
கூந்தல் அலங்காரப் பொருட்களான , ஹேர் ஸ்ப்ரே, மூசஸ், ஜெல் போன்றவை உச்சந்தலையில் படிவதற்கான வாய்ப்புகள் உண்டு. இவை தலையில் உள்ள துளைகளை அடைத்து முடி உதிர்வதற்கு வழி வகுக்கும். ஆகவே இத்தகைய பொருட்களை மிக அதிகமாக பயன்படுத்த வேண்டாம்.

குளிக்கும் நேரம் குறைவாக இருக்கட்டும்:
எவ்வளவு விரைவாக தலைக்கு குளிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாக குளித்து முடித்து வெளியில் வரலாம். நீண்ட நேரம் முடி ஈரமாக இருந்தால், மிகவும் வலிமை இழந்து பலவீனமாக மாறி, உடைந்து விடும் தன்மையை அடைந்து விடும்.