ஆரோக்கியமான உணவு - ஆரோக்கியமற்ற உணவு

என்ன பொதுவான தவறுகள் ஆரோக்கியமான உணவை ஆரோக்கியமற்ற ஒன்றாக மாற்றுகின்றன?

ஆரோக்கியமான உணவு - ஆரோக்கியமற்ற உணவு

உதாரணத்திற்கு மாம்பழ மில்க் ஷேக் அல்லது ஸ்மூத்தியை எடுத்துக் கொள்வோம். இது ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான ஒரு ஸ்மூத்தியாகும். இதனை மாம்பழம் மற்றும் பால் கொண்டு தயாரிப்போம். 

இதில் எங்கு தவறு நடக்கிறது என்றால், இந்த மாம்பழ ஷேக் தயாரிக்கும் போது அளவுக்கு அதிகமான சர்க்கரை சேர்க்கப்படுகிறது. பொதுவாக மாம்பழத்தில் இயற்கையாகவே இனிப்பு சுவை உண்டு. அதனால் இதில் தனியாக சர்க்கரை சேர்க்கவேண்டிய தேவை இல்லை. இந்த மாம்பழ சாற்றில் சர்க்கரை சேர்ப்பதால் ஆரோக்கியமான ஸ்மூத்தி ஆரோக்கியமற்றதாக மாறிவிடுகிறது.

அதனால் மாம்பழ மில்க் ஷேக்கில் சர்க்கரை சேர்க்க வேண்டாம். 

ஆனால் பெரும்பாலானவர்கள் மாம்பழ மில்க் ஷேக் சர்க்கரை இல்லாமல் தயாரிக்கப்படும்போது குடிப்பதற்கு சுவையாக இருப்பதில்லை என்று கூறுகின்றனர். 

சர்க்கரைக்கு பின்னால் இருக்கும் அறிவியலின்படி , சர்க்கரையில் எந்த ஒரு ஊட்டச்சத்து மதிப்பும் இல்லை. வெறும் இனிப்பு சுவைக்காக மட்டுமே சர்க்கரை சேர்க்கப்படுகிறது. அதனால் இந்த சுவைக்கு நாம் அடிமையாகிவிடுகிறோம்.  மேலும் சர்க்கரையில் அதிக அளவு கலோரிகள் உள்ளன.

நாம் சர்க்கரையை முற்றிலும் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக குலாப் ஜாமுன் , ஹல்வா போன்ற இனிப்புகள் சர்க்கரை சேர்ப்பதால் மட்டுமே சுவை அதிகம் தருகின்றன. ஆனால் நாம் கூற வருவது என்னவென்றால் ஒரு சிறு அளவு சர்க்கரை உட்கொள்வதால் எந்த ஒரு தீங்கும் உண்டாவதில்லை. நீங்கள் இதர ஊட்டசத்து மிகுந்த உணவுகள் உட்கொண்டு வழக்கமான முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால், தினமும் ஒரு சிறு அளவு சர்க்கரை உட்கொள்ளல் எந்த ஒரு தீங்கையும் உடலுக்கு உண்டாக்குவதில்லை. 

ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையை கடைபிடிப்பவர்கள், மனதளவில் மற்றும் உடலளவில் எந்த ஒரு செயல்பாடும் இல்லாமல் இருப்பவர்கள் , சிறந்த ஊட்டச்சத்து உள்ள உணவை புறக்கணிப்பவர்கள் , தன்னை சுற்றி எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் ஆகியோர் அதிக சர்க்கரை உட்கொள்வதால் அவர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு  தீங்கு உண்டாகிறது. 

சர்க்கரை மட்டுமே உடலுக்கு தீங்கு ஏற்படுத்துவதில்லை. ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை பின்பற்றுகிறவர்களுக்கு சர்க்கரையும் ஒருவிதத்தில் பாதிப்பை உண்டாக்குகிறது. ஆகவே ஆரோக்கியமான உடல்நிலைக்கு எல்லாவற்றிலும் ஒரு சமநிலையை அடைவது அவசியம்.